Tag Archives: Aandaal

நாச்சியார் திருமொழி-14

நாச்சியார் திருமொழி – பதினான்காம் திருமொழி பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் (1) கண்ணன் காவலேதுமின்றி மனம் போனபடியெல்லாம் தீம்பு செய்து திரியும் கறுத்த காளை பலராமனின் ஒப்பற்ற தம்பி செருக்குடன் ஓசையெழுப்பி விளையாடி வருவதைப் பார்த்தீரோ ? தான் மிகவும் விரும்பும் பசுக்களை இனிமையாகப் பேர் சொல்லி மடக்கி நீர் அருந்த வைத்து அப்பசுக்களை மேயவைத்து விளையாடும் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-13

நாச்சியார் திருமொழி – பதிமூன்றாம் திருமொழி கண்ணன் உகந்த பொருளை வேண்டுதல் (1) தாய்மாரே ! கண்ணன் என்னும் கருந்தெய்வம் அவனோடு பழகிய காட்சிகளை எண்ணி எண்ணி தாபம் தகிக்கிறது நீங்களோ என் நிலைமை புரியாமல் புண்ணில் புளிச்சாறு பிழிந்தாற் போல் அவனிடமிருந்து என்னைப் பிரிக்க அறிவுரை கூறுகின்றீர் பெண்ணின் வலியறியாக் கண்ணனின் இடையிலே அணிந்திருக்கும் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி -12

நாச்சியார் திருமொழி – பன்னிரண்டாம் திருமொழி என்னைக் கண்ணனிடம் சேர்ப்பீர் (1) என் நிலையை நீங்கள் உணரவில்லை மாதவன் மேல் மையல் கொண்ட எனக்கு நீங்கள் சொல்வதெல்லாம் ஊமையும் செவிடனும் உரையாடுவதுபோல் அர்த்தமற்றது பெற்றவளை விட்டொழித்து வேற்றொருதாய் வீட்டினிலே வளர்ந்தவனும் மல்யுத்த பூமியிலே மல்லர்கள் கூடுமுன்னே வந்து சேரும் கண்ணனின் வடமதுரைக் கருகே என்னைக் கொண்டு … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-11

நாச்சியார் திருமொழி – பதினோராம் திருமொழி அரங்கனைக் காமுறுதல் (1) அணிகலன்கள் புனைந்த மாதரே ! அவர் விரும்பி தன் கையில் ஏந்தியுள்ள சங்குக்கு நான் விரும்பி அணிந்து கொண்டிருக்கும் சங்குவளை ஒப்பாகுமா, இல்லையா? தீ கக்கும் முகங்கள் கொண்ட பாம்பின் படுக்கையின் மேல் துயில்கின்ற திருவரங்கன் என் முகத்தை நோக்குகின்றாரில்லையே ஐயகோ ! அந்தோ … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-9

நாச்சியார் திருமொழி – ஒன்பதாம் திருமொழி திருமாலிருஞ்சோலை சுந்தரன் (1) திருமாலிருஞ்சோலையெங்கும் செந்தூரப் பொடிதூவியது போல் பட்டுப்பூச்சிகள் பரவிக்கிடக்கின்றன அந்தோ ! அன்றொருநாள் மந்தர மலையை மத்தாக்கிக் கடல் கடைந்து சுவைமிக்க அமிர்தமான பிராட்டியைப் பெற்ற அழகிய தோள்கள் கொண்டவன் அவன் விரித்த வலையிலிருந்து தப்பிப் பிழைப்போமோ ? (2) போரைத் தொழிலாகக் கொண்ட யானைகள் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-8

நாச்சியார் திருமொழி – எட்டாம் திருமொழி மேக விடு தூது (1) வானமெங்கும் நீல மேலாக்கு போட்டாற்போல் தோன்றும் மேகங்களே தெளிந்த அருவிகள் கொட்டுகின்ற திருவேங்கட மலைத் திருமால் உங்களோடு வந்தானோ ? நான் சிந்துகின்ற கண்ணீர் என் மார்பகநுனியிலே அரும்ப வருந்துகிறேன் என் பெண்மையைச் சிதைக்கின்ற இச்செயல் அவருக்குப் பெருமையைத் தருமோ ? (2) … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-7

நாச்சியார் திருமொழி – ஏழாம் திருமொழி மாதவனோடு சங்கின் உறவு (1) கடலில் பிறந்த வெண்சங்கே ! யானையின் கொம்பை முறித்த கண்ணனது உதட்டின் சுவையும் மணமும் விரும்பி உன்னிடம் கேட்கிறேன். அவனின் சிவந்த அதரங்கள் பச்சைக் கற்பூரம் போல் மணக்குமா ? (அல்லது) தாமரை மலர் போலமணக்குமா ? அவை தித்தித்திருக்குமோ ? என்ன … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-6

நாச்சியார் திருமொழி – ஆறாம் திருமொழி கனவு கண்டேன் தோழீ (1) என் ஆருயிர்த் தோழியே ! நற்குண நாயகன் நம்பி நாராயணன் ஆயிரம் யானைகள் சூழ வலம் வரப் போகிறான் ஆதலினாலே நகரமெங்கும் பொன்மயமான பூர்ணகும்பங்களோடு தோரணமும் கட்டுவதாக கனவு கண்டேன் நான். (2) தோழீ ! நாளை எனக்குத் திருமணம் என நிச்சயித்து … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-5

நாச்சியார் திருமொழி – ஐந்தாம் திருமொழி குயிலே நீ கூவாய் (1) புன்னையும், குருக்கத்தியும், கோங்கும், சுரபுன்னை மரங்களும் நிறை சோலையிலே மரப்பொந்துகளில் வாழும் குயிலே ! உயர்ந்த குணங்கள் எப்போதும் கொண்ட மாதவன் மாமணி வண்ணன், மணிகள் பதித்த மகுட மணிந்த மிடுக்கு மிக்க அப்பெருமானை நான் விரும்பினேன் அதற்காக எனது வளையல்களை நான் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-4

நாச்சியார் திருமொழி – நான்காம் திருமொழி குறி பார்த்தல் (1) கூடலே ! தெளிந்த சிந்தையுடையார் பலர் தம் கைகளால் வணங்கும் தெய்வமாய், வள்ளலாய் திருமாலிருஞ்சோலையிலே காட்சிதரும் அழகிய மணவாளன் அந்த பரம புருஷன் அவன் திருவடிகளை நான் பிடிக்க அவன் திருவுள்ளம் கொண்டான் எனில் நீ கூடிடுவாய். குறிப்பு: கூடல் என்றால்ஒரு வகை குறிபார்த்தல். … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment