Category Archives: Nalayira Divya Prabandham

பெரிய திருவந்தாதி-9

2665 வளம் கொழிக்கும் பாற்கடலில் பள்ளி கொண்ட பகவான் தன் அருள் பெற இவன் அருகதையற்றவன் என நினைப்பதில்லை துணையேதும் அற்றவன் என்றெண்ணி பகலிரவு பாராது எப்போதும் தன் வலிமையினால் என்னை ஆட்கொள்வார். 2666 அன்றொருநாள் மான் வடிவாய் வந்த மாரீசனைத் தொடர்ந்து சென்று அழித்தார் இராமபிரான் அழகிய மோதிரமணிந்த கைகள் அந்த ராமனுக்கு அவனைத்தெரிந்து … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

பெரிய திருவந்தாதி-8

2655 என் உள்ளத்தில் இருந்து உலவும் யாரையும் சார்ந்திராத தன்னிகரில்லா மூர்த்தியே! கங்கையை அணிந்த சிவந்த சடையன் சிவன் உன் திருமேனியின் ஒரு பாகம் நான்முகனோ உன் நாபிக்கமலத்தில் உதித்தவன் இத்தகு பெருமைகள் கொண்டவன் நீ உன்னைப்பற்றி பேச எனக்கு இனி என்ன இருக்கிறது? 2656 முதல்வா! நிகரற்ற மழை மேகமே! அனைத்துக்கும் முதன்மை மும்மூர்த்திகளே … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

பெரிய திருவந்தாதி-7

2645 வாமனனாய்ப் பரந்தாமன் உலகளந்த அந்நாளில் வானவர்கள் ஒன்றுகூடி வேதவிதிமுறையாய் சிவந்த அவன் திருப்பாதங்களில் தெளித்த மகரந்தம் சிந்தும் மலர்களின் அழகுக்கு விரிந்த வானமெங்கும் பூத்திருக்கும் விண்மீன்கள் தோற்றுவிடும். 2646 வானமென்னும் அழிவில்லா வான்குடைக்குக் கம்பிகள் இந்த விண்மீன்கள் சந்திரனோ குடைக்காம்பின் நுனியிலுள்ள வெள்ளி வட்டம். வான்குடைக்கு நீலக்காம்பாய் நிமிர்ந்து உலகளந்தான் இனி அவன் நம் … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

பெரிய திருவந்தாதி-6

2635 மனதை ஆட்டிப்படைக்கும் ஐந்து புலன்களும் ஐந்து கொடியவர்கள் இவர்களின் சீற்றத்தைச் சிதைத்து பரந்தாமன் சந்நிதியில் சேர்த்து வளமான நிலத்தில் வளர்ந்த குளிர்ந்த துளசி மாலையணிந்த அவன் திருப்பாதங்களைப் பணியச்செய்வதே அடியார்களுக்கு அழகு! 2636 அன்றொருநாள் எம்பெருமான் குள்ள வடிவெடுத்து பூமிப்பிச்சை கேட்டான் குழந்தைக் கண்ணனாய் அரக்கி பூதனை உயிர் குடித்தான் இப்பெருமைமிகு நாராயணனைக் காண … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

பெரிய திருவந்தாதி-5

2625 நாமே பலசாலிகள் என எண்ணி எதிர்த்துவந்த மல்லர்களின் சிரங்கள் சிதற அவர்களை சக்கரமேந்திய உன் திருக்கைகளால் அழித்தொழித்தாய் அதனாலே இவ்வுலகம் அழியாமல் நெடுங்காலம் உள்ளதுவே! 2626 நாராயணன் ஊழிக்காலத்தில் பூமியை விழுங்கிக் காத்துப் பின்னர் விழுங்கியதை உமிழ்ந்து மீண்டும் படைத்தான் பன்றியாய் உருக்கொண்டு அசுரன் ஒளித்த பூமியைக் குத்தி மேலெடுத்தான் திரிவிக்ரமனாய்த் தோன்றி அப்பூமியை … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

பெரிய திருவந்தாதி-4

2615. கொடிய பாவங்கள் தீரும் நல்லவழியை நாம் அறிந்துகொண்டோம் கண்ணனாய் அவதரித்து குடக்கூத்தாடி அலுத்து பாற்கடலில் பள்ளி கொண்டான் அந்தப் பரந்தாமனின் திருவடி நிழலுமானோம் திருவடி ரேகையுமானோம் பாவங்கள் தொடரா வழி இதுவே! 2616. கயிற்றால் கட்டியதால் தழும்பு தன் வயிற்றில் தெரியும் தாமோதரன் அவன் தன் அடியார்க்கு அடிமை செய்யவே ஆசைகொண்டான் மனமே அப்பேர்ப்பட்ட … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

பெரிய திருவந்தாதி-3

2605. அன்று மன்னன் மகாபலியால் உலகம் நெருக்குண்டது அப்போது பூமியின் பரப்பும் பூமியைச்சூழ்ந்த நீரின் பரப்பும் மறையும் வண்ணம் கார்வண்ணன் திரிவிக்ரமனாய்த் தன் திருவடிகளால் உலகை அடக்கினான் அந்தத் திருப்பாதங்கள் என் நெஞ்சில் நெருக்குண்டன நான் கொடிய நரகத்தில் விழாவண்ணம் காக்கவே அவன் திருப்பாதங்கள் என் நெஞ்சில் பதிந்தனவோ? 2606. திருமால் என் நெஞ்சில் குடி … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment