நாச்சியார் திருமொழி-8

நாச்சியார் திருமொழி – எட்டாம் திருமொழி
மேக விடு தூது

(1)
வானமெங்கும்
நீல மேலாக்கு போட்டாற்போல் தோன்றும்
மேகங்களே
தெளிந்த அருவிகள் கொட்டுகின்ற
திருவேங்கட மலைத் திருமால்
உங்களோடு வந்தானோ ?
நான் சிந்துகின்ற கண்ணீர்
என் மார்பகநுனியிலே அரும்ப வருந்துகிறேன்
என் பெண்மையைச் சிதைக்கின்ற இச்செயல்
அவருக்குப் பெருமையைத் தருமோ ?

(2)
பொன்னும் மணியும் சொரியும் மேகங்களே !
திருவேங்கடத்தில் வாழ்கின்ற
நீலநிறப் பெருமானிடமிருந்து
செய்தியேதும் எனக்கு உண்டா ?
காமத்தீ என்னுள்ளே புகுந்து கவ்வியிழுக்க
நடுநிசித் தென்றலில் நான் நலிவுற்று
இங்கு உயிரோடிப்பேனோ ?

(3)
அருள்புரியும் மேகங்களே !
எனது அழ்கும், நிறமும்
வளையல்களும், சிந்தையும், உறக்கமும்
நான் எளிமைப் பட்டதாலே
அலட்சியம் செய்து என்னை நீங்கின.
என் பலம் போயிற்று.
குளிர்ந்த அருவிகள்கொண்ட
வேங்கடமலைக் கோவிந்தனின்
குணநலன்கள் பாடி
நான் உயிர் தரித்திருப்பேனோ ?

(4)
வானிலே மின்னல் தோன்றஎழுகின்ற மேகங்களே !
என் இளம் மார்பகங்களை எம் பெருமான் விரும்பி
அழ்கிய அவர் மார்புடனே அணைத்துக்கொள்ள
நாள்தோறும் எனக்கு ஆவல்
இதனை
திருமலையில் தன் மேனியில்
திருமகளைக் கொண்ட திருமார்பனுக்குச் சொல்லுங்கள்.

(5)
வானில் எங்கும் பரவி
கிளர்ந்தெழும் மேகங்களே !
திருமலையிலே
தேன் நிறைந்த மலர்கள் சிதற
திரள் திரளாக வானில் ஏறி
மழை பொழியும் முகிலினமே !
(தசைப்பற்றுள்ள) கூரிய நகங்களாலே
இரணியன் உடல் பிளந்த பெருமான்
என்னிடத்துக் கொள்ளைகொண்ட கைவளைகளைத்
தருமாறு சொல்லுங்களேன்.

(6)
நீர் கொண்டு கிளர்ந்தெழும் மேகங்களே !
மன்னன் மாவலியின் பூமி கொண்ட பெருமான்
அவன் உறையும் திருமலையில்
எங்கும் நிறைந்து
உயர ஏறிப் பொழிகின்ற மேகங்களே !
பெருங் கொசுக்கள் மொய்த்த விளாம்பழம்போல்
சாரமற்றுப் போனேன்
என்னுள் புகுந்து
என் நலமெல்லாம் கொள்ளை கொண்ட நாராயணன்
அவனிடம்
என் பிரிவுத் துயர் நோய்பற்றி செப்புவீரே.

(7)
சங்குகள் நிறைந்த
பெருமை மிக்க கடல்கடைந்த பெருமான்
அவன் உறையும்
திருமலையில் திரிகின்ற முகிலினமே !
செங்கண் திருமாலின் பாதங்களில்
என் விண்ணப்பம் கேளுங்கள்
என் மார்பினிலே பூசிய
குங்குமக் குழம்பெல்லாம் அழிய
ஒரு நாளேனும் அவன் என்னை அணைத்தால்தான்
என் ஆவி தங்கும்
இதை அவனிடம் சொல்லுங்களேன்.

(8)
மழைக்காலத்திலே
திருமலையில் தோன்றுகின்ற கார்மேகங்களே !
போர்க்காலத்திலே
போர்க்களத்தில் போர்புரிந்து
வெற்றி பெற்ற பெருமானின்
திருநாமங்கள் உச்சரித்தேன்
மழைக்கால எருக்கம் பழுப்புகள் போல்
ஒடிந்து விழுகின்ற எனக்கு
நெடுக வரும் காலத்திலே
ஒரு நாளேனும்
ஒரு வார்த்தை சொல்லக் கூறுங்கள்.

(9)
மதங்கொண்ட யானைகள்போல்
எழுகின்ற மேகங்களே !
திருமலையே உறைவிடமாய் வாழ்பவரே !
பாம்புப் ப்டுக்கையில் துயில்பவனின்
பதில்தான் என்ன ?
அனைவருக்கும் கதி அவன்தான்
அதனைச் சிறிதேனும் கருதாமல்
ஓர் பெண்கொடியை வதை செய்தான்
என்னும் சொல்லை
உலகோர் மதிப்பாரோ ?

(10)
குறையாத இறையனுபவம் கொண்ட பெரியாழ்வார்
அவர் மகள்
அழகிய நெற்றிகொண்ட ஆண்டாள்
பாம்புப் படுக்கையிலே துயிலும்
பரமன் மேல் ஆசை கொண்டு
மேகத்தைத் தூதுவிட்டுப் பாடிய
பாசுரங்கள் இவையனைத்தும்
நெஞ்சில் நிறுத்தி ஓதுவார்
பெருமானின் அடியாராவரே.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s