Author Archives: thamilnayaki

பூச்சிகளுக்கு

மூத்தவர்களே மிக மிகச் கொஞ்ச காலமே நாங்கள் இங்கே இருந்திருக்கிறோம் ஆனாலும் ஏதோ நாங்கள்தான் நினைவைக் கண்டுபிடித்ததாய்ப் பாசாங்கு செய்கிறோம் உங்களைப்போல் இருப்பது எப்படி என்று மறந்துவிட்டோம் நாங்கள் உங்கள் நினைவிலோ நாங்கள் இல்லை எங்களுக்கு நினைவிருக்கிறது எங்களில் எது பிழைத்திருக்கிறதோ அது எங்களைப்போல்தான் என எங்கள் பார்வையில் இந்த உலகின் தோற்றம் நாங்கள் அறிந்ததே … Continue reading

Posted in Translated poems | Tagged , | Leave a comment

போர் – பால்ராஜ் கோமல்

சமீபத்தில் 2018 ல் ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்களைக் கடையில் தேடிக்கொண்டிருந்தபோது 2018ல் வெளிவந்த “They shall not grow old” என்ற செய்திப்படம் கண்ணில்பட்டது.முதல் உலகப்போர்க் காட்சிகள் நிரம்பிய இந்தப்படம் இதுவரை யாரும் பார்த்திராத போரின் கோர முகங்களை விலாவாரியாகக் காட்சிப்படுத்தியிருந்தது. பீட்டர் ஜாக்சன் என்பவர் இயக்கிய படம்.இவரது தாத்தா முதல் உலகப்போரில் பங்கேற்றவர்.15 … Continue reading

Posted in Translated poems | Tagged , | Leave a comment

பிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா

பிரியமான மாணவர்களே சென்று வாருங்கள் நல் வாழ்த்துக்கள் இந்நாட்டில் இன்னும் உயிருடனிருக்கும் கடைசிக் கருங்கழுத்து அன்னங்களைப் பாதுகாக்கவேண்டிய நேரமிது உதைகள் குத்துக்கள் எதுவாக இருப்பினும்: முடிவில் கவிதை நமக்கு நன்றி சொல்லும் இன்னொரு புரட்சிகரமான நடவடிக்கை: காதல் குற்றங்கள் எல்லாவற்றையும் மன்னிப்போம் பாலுறவுக்குப் பொது மன்னிப்பு காதல் காதல் காதல் மேலும் காதல் தயவுசெய்து ஜோடி … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

ஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா

ஆன்மா சாந்தி அடையட்டும் அதில் என்ன சந்தேகம் ஆனால் அந்த ஈரம்? அப்புறம் அந்தப்பாசி? பிறகு நடுகல்லின் கனம்? மேலும் குடிபோதையில் உள்ள சவக்குழி தோண்டுவோர்? மற்றும் பூந்தொட்டிகளைத் திருடும் மக்கள்? சவப்பெட்டியைக் கடிக்கும் எலிகள்? எல்லா இடங்களிலும் நெளியும் பாழாய்ப்போன புழுக்கள் இவையெல்லாம் சாவை நெருங்க முடியாததாய்ச் செய்கின்றன அல்லது என்ன நடக்கிறதென்று எங்களுக்குத் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

அம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)

முதல் உலகப்போர் (1914-18) முடிந்து நூறாண்டுகளாகிவிட்டன. இந்தப்போரில் 1,00,000 டன் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. 90 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் 2 கோடிக்குமேல். 50 லட்சம் குடிமக்கள் நோயினாலும், பட்டினியாலும், இறந்தனர். உலகம் இதிலிருந்து பாடம் கற்காமல் இரண்டாவது உலகப்போரிலும் ஈடுபட்டு பெருத்த அழிவைச்சந்தித்தது. இன்றுவரை உலகப்போர் என்று ஒன்று நடக்கவில்லையே தவிர உலகமெங்கும் … Continue reading

Posted in Other Translations | Tagged | Leave a comment

கிராமத்து நாத்திகன்

எட்கார் லீ மாஸ்டர்ஸ் (Edgar Lee Masters) (1868–1950) அமெரிக்க இலக்கியத்தில் எட்காரின் இடம் 1915ல் வெளியான அவரது Spoon River தொகுப்பு மூலம் நிலை பெற்றது. இத்தொகுப்பில் சிறு நாடகத் தனிமொழிகள் கல்லறையிலிருந்து பேசுவதுபோல் அமைந்திருக்கும். அத்தொகுப்பிலிருந்து ‘ The Village Atheist’ என்கிற கவிதை எளிய தமிழில்…….. கிராமத்து நாத்திகன் ……. நீங்களெல்லாம் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

நாய் ஒன்று இறந்துவிட்டது – பாப்லோ நெருடா

எனது நாய் இறந்துவிட்டது அதை நான் தோட்டத்தில் துருப்பிடித்த பழைய இயந்திரத்தருகே புதைத்துவிட்டேன் என்றாவது ஒருநாள் நானும் அதே இடத்தில் அதனுடன் சேர்ந்துகொள்வேன் ஆனால் அது இப்பொழுது தன் அடர்ந்த முடியுடனும் கெட்ட பழக்கங்களுடனும் ஈரமான மூக்குடனும் போய்விட்டது நான் ஒரு பொருள்முதல்வாதி நான் நம்பியதேயில்லை எந்த ஒரு மனிதனுக்கும் வானத்தில் சொர்க்கம் உறுதியளிக்கப்பட்டிருப்பதாக ஒரு … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment