நாச்சியார் திருமொழி-4

நாச்சியார் திருமொழி – நான்காம் திருமொழி
குறி பார்த்தல்

(1)
கூடலே !
தெளிந்த சிந்தையுடையார் பலர்
தம் கைகளால் வணங்கும்
தெய்வமாய், வள்ளலாய்
திருமாலிருஞ்சோலையிலே காட்சிதரும்
அழகிய மணவாளன்
அந்த பரம புருஷன்
அவன் திருவடிகளை
நான் பிடிக்க
அவன் திருவுள்ளம் கொண்டான் எனில்
நீ கூடிடுவாய்.

குறிப்பு:
கூடல் என்றால்ஒரு வகை குறிபார்த்தல். தரையில் ஒரு வட்டத்தை எழுதி அதற்குள்ளே எண்ணாமல் பல சுழிகளைக் கீறி, இரண்டிரண்டு சுழிகளாக எண்ணிப்பார்க்கும் போது இரட்டைப் படையாக வந்தால் நினைத்த காரியம் கைகூடும் எனவும் ஒற்றைப்படையாய் வந்தால் கூடாது என்றும் கொள்வது.

(2)
கூடலே !
காட்டிலே உள்ள வேங்கட மலையிலும்
திருக்கண்ணபுர நகரிலும்
குறையொன்றுமின்றி மகிழ்ந்து
எப்பொழுதும் குடிகொண்டிருக்கும்
வாமனனாய் அவதரித்த எம்பெருமான்
ஓடி வந்து என் கைப்பிடித்து
தன்னோடு என்னை அனைத்துக் கொள்வானேல்
நீ கூடிட வேண்டும்.

(3)
பூவில் பிறந்த பிரம்மாவும்
வானவரும்
பாடிப் போற்றுதற்குத் தகுந்த
உத்தம புருஷன்
அழகும் ஒளியும் மிக்க நெற்றிக்குச் சொந்தக்காரன்
தேவகியின் சிறந்த மகன்
நற்குணங்கள் அத்தனைக்கும் சொந்தமான
வசுதேவரின் கோமகன் (கண்ணபிரான்)
அவன் வருவான் என்றால்
கூடலே நீ கூடிடு !

(4)
இடைச்சியரும் இடையரும் அஞ்சும்படி
பூக்கள் நிறைந்து உயர்ந்த
கடம்ப மரமேறி
காளியனின் தலை
நீரில் அழுந்தும்படி எம்பிக் குதித்து
அந்த நாகத்தின் மேல்
நர்த்தனம் புரிந்த
ஆடவல்லான் கண்ணன்
அவன் வருவானெனில்
கூடலே கூடிடு !

(5)
நெற்றிப்பட்டம் கட்டிய
மதங் கொண்ட யானையை அழித்தவன் கண்ணன்
அவன்
மாடங்கள் கொண்ட மாளிகைகள் நிறைந்த
வடமதுரையிலே
நம் வீடு தேடி
தெருவின் நடுவே வந்து
நம்மைக் கூடுவானாகில்
கூடலே கூடிடு.

(6)
எனக்காகவே அவதரித்தவன்
மருத மரங்கள் முறிந்து விழ
தவழ் நடை பயின்றவன்
கம்சனை வஞ்சனையால் அழித்தவன்
வட மதுரை மன்னன் கண்ணன்
அவன் வருவானாகில்
கூடலே கூடிடு.

(7)
முன்பு
வெறுக்கத்தக்க செயல்களைச் செய்துவந்த சிசுபாலன்
வழிமறித்த மருத மரங்கள்
ஏழு காளைகள்
கொக்கு வடிவ பகாசுரன்
வெற்றிவேல் கொண்ட கம்சன்
இவர்களை
அடுக்கடுக்காய் அழித்தொழித்த
கண்ணன் வருவானேல்
கூடிடுவாய் கூடலே !

(8)
ஆவலும் அன்பும் கொண்டவர் மனமின்றி
வேறு எதிலுமே பொருந்தாதவன்
நல்ல மணம் சூழ்ந்த துவாரகைக்கு அரசன்
கன்றுகள் மேய்த்து விளையாடும்
கோபாலன்
அவன் வருவானேல்
கூடலே !
நீ கூடி எங்களைக் கூட்டு.

(9)
முன்பொரு காலம்
குள்ளமாக உருவெடுத்த கோலம்
மன்னன் மாவலியின்
யாக பூமி
அங்கே
அடியொன்றால்
ஆகாயம்
பூமி
இரண்டையும் அளந்தவன்
அந்த திரிவிக்ரமன்
அவன் வருவான் எனில்
கூடலே நீ கூடிடு !

(10)
பழைமையான வேதங்கள் நான்கினது
உட்பொருள் அவன்
மதநீர் ஒழுகும்
யானையின் துயர் தீர்த்தவன்
எங்களை வசமிழக்கச் செய்யும்
அழகன்
அழகுமிகு ஆய்ச்சியரின்
நெஞ்சிலே கலந்து
குழைந்தவன்
அவன் வருவானேல்
கூடிடு கூடலே !

(11)
கண்ணனோடு ஊடல்
பின்பு கூடல்
அவன் குறைகளை அவர்கள் கூற
அவன் உணர்தல்
பின்பு கூடுதல்
நெடுங்காலமாய் நடக்கின்ற
பெரும் புகழ் மிக்க ஆய்ச்சியரின் இந்தக் கூடலை
அழகிய கூந்தலாள் ஆண்டாள் பாடியுள்ளாள்
பாடல்கள் இவற்றைப் படிப்போர்க்கு இல்லை பாவம்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s