Monthly Archives: July 2016

நம்பிக்கை எனும் பறவை

மனதில் அமர்ந்திருக்கிறது நம்பிக்கைப் பறவை வார்த்தைகளற்ற பாடல்களை இசைக்கிறது அது முடிவே இல்லாமல்… கடுங்காற்றிலும் இனிமையாக ஒலிக்கிறது அதன் நம்பிக்கைக் கீதம் நம்மை வாழவும் வைக்கிறது. ஒரு புயலாலே முடியும் சிறிய அந்தப் பறவையைக் கலங்க வைக்க. கடுங்குளிர்ப்பகுதியிலும் முன்னர் அறிந்திராத கடற்பகுதியிலும் கேட்டிருக்கிறேன் அதன் பாடலை ஆனால் எந்த ஒரு நிலையிலும் அது கேட்டதில்லை … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

நிறைவான ஓர் பரிசு

இந்த பூமி நமது நாம் அதற்குரியவர் ஆகுமுன்பே. நாம் அதற்குரியவராகி நூறாண்டுகளுக்கு முன்பே நாம் அதன் மக்கள் மாசாச்சுசெட்ஸும் வர்ஜீனியாவும் நமதே ஆனால் நாமெல்லாம் இங்கிலாந்துக்குரியவர்கள் இன்னும் காலனியாட்கள் இந்த பூமி நம்மிடம் இருந்தாலும் அது நமதென்ற எண்ணமில்லை நம்மிடம் நாம் வெளிப்படுத்தாத ஏதோ ஒன்று நம்மை பலவீனப்படுத்தியது வாழும் பூமியுடன் ஒன்றவில்லை நம் உணர்வுகள் … Continue reading

Posted in Translated poems | Tagged , | Leave a comment

அல்பெட்ராஸ்

கப்பல் பயணத்தின் பல சமயங்களில் மாலுமிகள் பொழுதைப்போக்க ஆழ்கடலின் குறுக்கே கப்பலுக்கு மேலே அசட்டையாகப் பறக்கும் அல்பெட்ராசைப் பிடிப்பார்கள். சுதந்திர வெளியான கப்பலின் மேல்தளத்தில் கட்டுண்ட அந்தப் பறவை கலவரப்பட்டு பரிதாபமாக தன் நீண்ட வெள்ளை இறக்கைகளை கரையிறக்கப்பட்டத் துடுப்புகள் போல் தன் இரு பக்கமும் இழுத்துக்கொள்ளும். சற்று முன்னால் கூட கம்பீரமாகப் பறந்த இந்தப் … Continue reading

Posted in Translated poems | Tagged , , , | Leave a comment

இயற்கைக்காட்சி

சிறந்த பழைய ஓவியர்களின் இயற்கைக்காட்சிகளில் மரங்களின் வேர்கள் தைல ஓவியத்துக்குக் கீழே பாதையோ சந்தேகமின்றி அதன் முடிவை அடைகிறது. கையெழுத்துக்குப் பதிலாக கண்ணைக்கவரும் புல்லின் இதழ் மயங்கவைக்கும் மாலை நேரம் மணி ஐந்து மே மாதம் மென்மையாக ஆனால் உறுதியாகச் சிறை பிடிக்கப்பட்டது எனவே நானும் நிலை கொண்டு விட்டேன் ஏன்? ஆம் அன்பே அந்த … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment