நாச்சியார் திருமொழி -12

நாச்சியார் திருமொழி – பன்னிரண்டாம் திருமொழி
என்னைக் கண்ணனிடம் சேர்ப்பீர்

(1)
என் நிலையை நீங்கள் உணரவில்லை
மாதவன் மேல் மையல் கொண்ட எனக்கு
நீங்கள் சொல்வதெல்லாம்
ஊமையும் செவிடனும்
உரையாடுவதுபோல் அர்த்தமற்றது
பெற்றவளை விட்டொழித்து
வேற்றொருதாய் வீட்டினிலே வளர்ந்தவனும்
மல்யுத்த பூமியிலே
மல்லர்கள் கூடுமுன்னே வந்து சேரும்
கண்ணனின்
வடமதுரைக் கருகே
என்னைக் கொண்டு சேர்ப்பீர்.

(2)
ஊரில் எல்லோரும் என் நிலை அறிவார்
இனி வெட்கப்பட்டு என்ன பயன் ?
காலம் தாழ்த்தாமல்
எனக்கு வழி சொல்வீர்
நீங்களெல்லாம்
நான் கன்னிமையின் பொலிவு பெற நினைப்பதுடன்
என்னைக் காக்கவும் எண்ணுவீரேல்
என்னை ஆயர்பாடி கொண்டு சேர்ப்பீர்
அங்கே
வாமனனாய் உலகளந்த பெருமானை நான் கண்டால்
என் நோயெல்லாம் தீர்ந்துவிடும்.

(3)
தந்தை தாய் உற்றார் இருக்க
தனி வழியே சென்றாள் என்ற பழி வந்த பின்னாலே
அதைத் தடுக்க முடியுமோ ?
மாயக் கண்ணன் எதிரே வந்து
தன் வடிவு காட்டி மயக்குகின்றான்
வேதனைகள் செய்து
பழிவிளைத்து
குறும்புகள் செய்கின்ற
ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபரின் மாளிகை வாசலிலே
நள்ளிரவில் என்னைக் கொண்டு சேர்ப்பீர்.

(4)
தன் அழகிய கையிலே
ஆழிச் சங்கினை ஏந்திய
கண்ணனின் முகத்திலல்லால்
வேற்று முகத்தில் விழியேன்
என
செந்நிற ஆடைக்குள்ளே
கண்கள் மூடி
சிறு மானிட வரைக்கண்டால் நாணும்
என் மார்பகங்களை பாரீர்
இவை கண்ணனல்லால்
வேற்று வாசலை நோக்கமாட்டா
நான் இங்கு வாழமாட்டேன்
என்னை யமுனை நதிக்கரையில் சேர்த்திடுவீர்.

(5)
அம்மையீர் !
எனது நோய் யாராலும் அறிய முடியா நோய்
நீங்கள் வருந்தாதீர்
காளிங்க மடுவிலுள்ள
கடம்ப மரமேறி
காளியனின் தலைமேலே போர்நடனம் புரிந்த
பொய்கைக்கரையிலே
என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்திடுவீர்
நீலக்கடல் வண்ணன் கண்ணன்
அவன் கைகளின் தொடுதலால்
தீரும் என் நோய்
இதுதான் என் நோய்க்கு உடனடி மருந்து.

(6)
மழைக்காலக் குளிர் மேகம்
கருவிளைப்பூ
காயாம்பூ
தாமரைப்பூ இவையெல்லாம்
என்னை இழுக்கின்றன
ரிஷிகேசன் பக்கம் போ என்று
வியர்த்து, பசியால் வருந்தி
வயிறு குழைந்து
விரும்பி உணவு உண்ணும் காலம் இதுவென
முனிவர்களின் மனைவியர் வரவை எதிர்பார்த்து
நெடுங்காலம் பார்த்திருந்த
பத்த விலோசனத்துக்கு (சோறுபார்த்திருந்த இடம்)
என்னைக் கொண்டு சேர்த்திடுவீர்.

(7)
கண்ணனைக் காமுற்று
என்மேனி நிறம் திரிந்தது
மனம் தளர்வடைந்தது
மானம் போனது , வாய் வெளுத்தது
உணவு வேண்டாமற்போனது ,அறிவுச் சுருங்கிப்போனது
இவையெல்லாமே
கடல் வண்ணன் கண்ணனின்
குளிர்ந்த துளசிமாலையை நான் சூடினால் நீங்கிவிடும்
உங்களால் அது முடியாது
ஆகையாலே
பலதேவன் அசுரன் பிலம்பனை
அவன் எலும்புகள் முறியும்படி வீழ்த்திய
பாண்டீர ஆலமரமருகே
என்னைக் கொண்டு சேர்ப்பீர்.
குறிப்பு :
இந்த ஆலமரத்தருகில் கன்றுகளை மேய்க்கும் பொழுது போரிட வந்த அசுரன் பிலம்பனை பலராமன் கொன்றான் என்பது புராணம்.

(8)
அவனுக்கு
கன்றினம் மேய்க்கும் தொழில்
காட்டினில் வாழநேர்ந்த இடையர் குலப் பிறப்பு
வெண்ணெய்த் திருட்டிலே பிடிபட்டு
உரலிலே கட்டுண்டநிலை
குணங்களைக் குற்றங்களாய்ப் பார்க்கும் பாவிகளே !
இதுவரையில் நீங்கள் இழிவாகப் பேசியது போதும்
அவனை வசைபாட நீங்கள் கற்ற வித்தை சொல்லி
என்னிடம் திட்டு வாங்காமல்
பசுக்கள் பிழைப்பதற்குப்
பெருமழையைத் தடை செய்ய
அவன்
வெற்றிக் குடை ஏந்தி நின்ற
கோவர்த்தன மலையருகே
என்னைக் கொண்டு சேர்ப்பீர்.

(9)
கூட்டிலிருந்து கிளி எப்போதும்
கோவிந்தா ! கோவிந்தா ! என்றழைக்கும்
உணவு கொடாமல் நான் துன்புறுத்தினேன் என்றாலோ
உலகளந்த பெருமாளே என உரக்கக் கூவும்
நாட்டிலே பெருத்த பழி அடைந்து
உங்கள் நற்பெயர் கெட்டு
தலை கவிழ்ந்து நிற்காமல்
முன்புறம் உயர்ந்த மாடங்கள் சூழ் துவாரகைக்கு
என்னைக் கொண்டு சேர்ப்பீர்.

(10)
பொன்மயமான மாடங்கள் பொலிந்து தோன்றும்
வில்லிபுத்தூர்த் தலைவர் பெரியாழ்வார்
அவர்தம் மகளான
தாழ்ந்த கூந்தலாள் ஆண்டாள்
தன்னை
வடமதுரை முதற்கொண்டு
துவாரகை வரை உள்ள
புண்ணிய பூமிகளில் சேர்க்க வேண்டி
துணிந்த துணிவை
இன்னிசையால் சொன்ன
இத்திருமொழியை
ஓதவல்லார் வாழுமிடம் பரமபதமே.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s