Monthly Archives: November 2015

யோபுவின் கதை – அதிகாரம் 17

யோபுவின் பதில் தொடர்கிறது: எனது மூச்சு அடங்கப்போகிறது. எனது நாட்கள் முடியப்போகின்றன. எனக்கான சவக்குழி தோண்டப்பட்டுவிட்டது. என்னைச்சுற்றிலும் ஏளனம் செய்வோர் உள்ளார்கள். அவர்களை நான் எதிர்கொள்ளவேண்டும். தேவனே! நீர்தான் எனக்கு உதவவேண்டும். உம்மை விட்டால் எனக்கு வேறு யார் உதவி செய்யப்போகிறார்கள்? என் நண்பர்கள் என்னைப் புரிந்துகொள்ளாதபடி செய்துவிட்டீர். ஆனால் என்னைப் பற்றிய அவர்களது எண்ணம் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 16

எலிபாசுக்கு யோபுவின் பதில்: நீ சொன்னவற்றையெல்லாம் நான் முன்பே கேட்டிருக்கிறேன். நீங்களெல்லாம் என்னைத் தேற்றுவதில் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டீர்கள். எனக்கு உதவாத வார்த்தைகளைப் பேசாதே. என்ன துணிச்சலில் எனக்கு நீ பதில் சொல்ல முயல்கிறாய்? நான் இருக்கும் இந்த நிலையில் நீங்கள் இருந்தால் நானும் உங்களைப் போல் பேசக்கூடும். நீங்கள் செய்த தவறுகளையும்கூட நான் சுட்டிக்காட்டுவேன். ஆனாலும் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 15

எலிபாஸ் மீண்டும் பேசுகிறான்: அறிவாளியான ஒரு மனிதன் இதுபோல் உதவாத கருத்துக்களைச் சுமந்து கொண்டிருக்கமாட்டான். அவன் பொருள் குறைந்த வார்த்தைகளையும் உபயோகிக்கமாட்டான். உனது பேச்சு ஒன்றுக்கும் உதவாத பேச்சு. அது உனக்கு ஒரு நன்மையையும் தராது. நீ தேவனுக்குப் பயந்தவனாய்த் தெரியவில்லை. மக்கள் அவரை வணங்குவதையும் நீ விரும்பவில்லை போலும். உனது கெட்ட சிந்தனைகளின் விளைவாக … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 14

யோபுவின் பதில் மேலும் தொடர்கிறது …… மனிதனின் வாழ்நாட்கள் குறுகியவை. அவன் வாழ்க்கையில் துயரங்கள் அதிகம். மலர்கள் மலர்ந்து மடிவதைப்போல் அவனும் விரைவில் மடிகிறான். நாமெல்லாம் நிழலைப்போல் நிலையற்றவர்கள். இப்படிப்பட்ட சக்தியற்ற மனிதனை ஏன் கண்காணிக்கிறீர்? எனது செய்கைகளுக்கான நியாயத்தை விளக்கும்படி கேட்கிறீரே ஏன்? நல்ல வழியில் வாழ்வதை கெட்டவர்கள் அறியமாட்டார். அவர்களை மாற்றி நல்வழிப்படுத்துவதும் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 13

ஸோபாருக்கு யோபுவின் பதில் தொடர்கிறது: நான் இறைவனிடம் பேசினால் நலமென எண்ணுகிறேன். அவரிடம் நியாயம் கேட்டு வழக்காட விரும்புகிறேன். நீங்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறீர்கள். நோயாளியைக் குணப்படுத்தத் தெரியாத மருத்துவர் போன்றவர் நீங்கள். நீங்கள் பேசாமலிருந்தால் நன்றாயிருக்கும். அதுதான் புத்திசாலித்தனமும்கூட. நான் கூறுகின்றவற்றைக் கவனமாகக்கேளுங்கள். இறைவனின் சார்பாக நீங்கள் பேசவேண்டாம். அவர் சார்பாகப் பேசுவதாக எண்ணி உண்மையற்றவற்றைக் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment