Monthly Archives: December 2013

வீரர் விரும்பும் கொடை

297. வீரர் விரும்பும் கொடை பாடியவர் : பெயர் தெரியவில்லை திணை : வெட்சி (பசுக்களைக் கவர்ந்து வருதல்) துறை : உண்டாட்டு (வீரர் மது அருந்தி மகிழ்ந்திருத்தல்)  ————— மருதநில ஊர்தனிலே வாழும் மெதுவாக நடக்கின்ற எருமையின் பெரிய கொம்பினைப் போன்ற நீண்ட முற்றிய நெற்றுக்கள் அதிலுள்ள பசுமையான பயறு நீக்கப்பட்ட கோதுகளின் குவியலைப் … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

குடைபோல் காப்பவன்

290. குடைபோல் காப்பவன் பாடியவர்: ஔவையார் திணை: கரந்தை (பகைவர் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டல்) துறை: குடிநிலையுரைத்தல் (குடி வரலாறு கூறல்) ————– சினந்து செய்யும் போர், யானைக் கூட்டம் மற்றும் நல்ல தேர்களையும் உடைய மன்னா! முதலில் கள்ளை இந்த வீரனுக்குக் கொடு பின்னர் நீ குடிக்கலாம். ஏன் தெரியுமா? இவனது பாட்டன் … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

முதியவளின் பெருமகிழ்ச்சி

278. முதியவளின் பெருமகிழ்ச்சி பாடியவர்: காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் திணை: தும்பை (தும்பைப்பூச்சூடி போரிடல்) துறை: உவகைக் கலுழ்ச்சி. (விழுப்புண் பட்ட மகன் இறந்தது கண்டு மகிழ்தல்) ———— முதியவள் அவள்- நரம்புகள் தெரிகின்ற வற்றிய மெல்லிய தோள்கள் தாமரையிலை போன்ற அடிவயிறு அறியாத பலர் அவளிடம் சொல்கிறார்கள்- உன்மகன் போரிலே பகைவருக்குப் பயந்து புறமுதுகிட்டு மாண்டான் என்று. … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

தாயே பார் உன் மகனை

270. தாயே பார் உன் மகனை பாடியவர்: கழாத்தலையார் திணை: கரந்தை (கவர்ந்த பசுக்களை மீட்டல்) துறை: கையறு நிலை (தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமை கூறி வருந்துதல்) ———— தாயே, நறுமணப் பொருட்களை ஒதுக்கிவிட்டாய் அதனால் நரைத்த உன் கூந்தலிலே நறுமணமில்லை. இளம்வீரனைப் பெற்றவளே! பெரிய குடிப் பெண்ணே! விண்மீன்கள் பல ஒளிர்கின்ற உயர்ந்த … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

பாணனே கேள்!

260. பாணனே கேள்! பாடியவர்: வடமோதங்கிழார், திணை: கரந்தை (ஆநிரை மீட்டல்), துறை: கையறு நிலை (தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமை கூறி வருந்துதல்.) —— யாழை ஓசை மிகும் படி மீட்டினாலும் நரம்புகள் நடுங்கி சோக ராகம்தான் இழையோடுகிறது. நெஞ்சு நடுங்குகிறது வரும் வழிதனிலே தலைவிரி கோலமாய் பெண் ஒருத்தி எதிரில் வந்தாள் தீய சகுனங்கள் … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment