Tag Archives: Chinese poem

இலையுதிர்காலம்

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் சீனக்கவிதைகள் சில அடங்கிய சிறு நூல் ஒன்றைப் படிக்கக்கொடுத்தார். அதிலிருந்து ஓரிரு கவிதைகளை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். அவற்றில் ஒன்று “இருத்தலும் இல்லாமையும்” எனும் தலைப்பில் 2014ல் பதிவிடப்பட்டது. இன்னொன்று “இலையுதிர்காலம்”. சீனக்கவிதைகளை எழுதியவர்  வாங் ஸிண்டி. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஹூ சிஹு வாங். இவர்களைப்  பற்றிய விவரங்கள் Googleல் கிடைக்கவில்லை. இலையுதிர்காலம் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

இலையுதிர் காலம்

கனிந்து சிவந்த பழங்களின் மணம் தோட்டத்தை நிறைக்கிறது களத்து மேட்டில் வைக்கோல் போர் அடுக்கப்படுகிறது வலையில் நிறைந்துள்ள மீன்களைக்கண்டு மீனவன் மகிழ்கிறான் வானவிளிம்பில் சிப்பாய்களின் உள்ளங்களை குளிர்கால உடைகள் கதகதப்பாக்குகின்றன. சாய்ந்துவிழும் சூரியக் கதிர்களுக்கப்பால் நான் ஒரு சப்பைக் கல்லைப் பொறுக்கி நாணல் நிரம்பிய நீர்ப்பரப்பில் எறிகிறேன் நீர்ப்பரப்பு ஆழமோ இல்லையோ எனக்குக் கவலையில்லை நீர்ப்பரப்பில் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

இருத்தலும் இல்லாமையும்

சிவப்பு மலர்ச்செடியிடம் அந்த சிறு பூ சொல்லியது நான் மலர்கிறேன் எனவே நான் இருக்கிறேன் ஆனால் எல்லா மலர்களும் பூத்துக் குலுங்குகையில் நான் இல்லை. விண்மீன் நட்சத்திரக்கூட்டங்களிடம் சொல்லியது நான் ஒளிர்கிறேன் எனவே நான் இருக்கிறேன். ஆனால் வானப் போர்வை நட்சத்திரங்களால் நிறைகையில் நான் இல்லை. அந்த சிற்றோடை நதியிடம்சொல்லியது நான் சலசலத்து ஓடுகிறேன் எனவே … Continue reading

Posted in Translated poems | Tagged | 1 Comment

தாத்தா

காற்றில் பனித்திவலைகளின் நர்த்தனம் ஓ! என் கண் முன்னே என் தாத்தாவின் உருவம் ஒரே நேரத்தில் தெளிவாயும் மங்கலாயும்……. வாழ்ந்த நாட்களில் அவர் எளிய மனிதர் இலைகள் உதிர்ந்துவிட்ட முதிர்ந்த மரம் போல் உடல் வளைவு பனி பெய்யும் வேளையில் வெளிச்செல்வார் அமைதியாக பாதையைக் கூட்டி சுத்தம் செய்வார் பின்… நான் கவிதைகளைப் படிப்பது போல் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment