Monthly Archives: April 2017

வாரம் ஒரு வாசகம் – 6

6.நீத்தல் விண்ணப்பம் (உத்தரகோசமங்கையில் அருளியது ) பாடல் 6. சிவபெருமானே! என் மாணிக்கமே! அறியாமையால் உன்னருளைப் புறக்கணித்தேன் என்னை வெறுத்து ஒதுக்கிவிடாதே. பிறவிகள் தோறும் சேர்ந்த என் வினைகளைப் போக்கி என்னைக் கடைத்தேற்று பொய்யான இவ்வுலகை மெய்யென மயங்கும் மூடர்களை மன்னித்தல் பெரியோரின் செயலல்லவா. பாடல் 25. கொடிய யமன் ஒடுங்கும்படி அவன்மேல் பாய்ந்த தாமரை … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

வாரம் ஒரு வாசகம் – 5

திருச்சதகம் 1.மெய்யுணர்தல் (திருப்பெருந்துறையில் அருளியது) *********** சஞ்சரிக்கின்ற காற்றும் தீயும், நீரும், மண்ணும், விண்ணும் ஊழியில் அழிந்தொழியும். தோற்றமும் அழிவும் காலத்தின் வேலை அக்காலத்தையே ஆள்பவனே! என் கொடிய வினைகளை அழிக்கும் காலனாய் நீ இருந்து வினையும் காலமும் என்னைப் பற்றாதவாறு காப்பவனே! நீயே எனக்குப் புகலிடம். (திருச்சதகம் பாடல் 8) திருச்சதகம் 2.அறிவுறுத்தல் ******* … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

வாரம் ஒரு வாசகம் – 4

‘போற்றித் திருவகவல்’ (தில்லையில் அருளியது) ***** “வெறுப்பற்ற பேரன்பு வடிவினன் இந்தப் பரம்பொருள்” என்கிற நல்லறிவை பிறவிகள் பலப்பல எடுத்தபின்தான் பெறுகின்றோம் ஆனால் அந் நல்லறிவைச் சுடர்விடாமல் தடுப்பதற்குக் கோடி கோடி சக்திகள் இடை மறிக்கும் நம் அன்புக்குரியோரும்,அயலாரும் நாக்குத் தழும்பேறும்வரை நாத்திகம் பேசுகின்றார். உறவினரெல்லாம் சூழ்ந்துவந்து போகாதே ஞானவழி தேடி என்று வருந்தி வேண்டுகின்றார். … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment