நாச்சியார் திருமொழி-7

நாச்சியார் திருமொழி – ஏழாம் திருமொழி
மாதவனோடு சங்கின் உறவு

(1)
கடலில் பிறந்த வெண்சங்கே !
யானையின் கொம்பை முறித்த கண்ணனது
உதட்டின் சுவையும் மணமும் விரும்பி
உன்னிடம் கேட்கிறேன்.
அவனின் சிவந்த அதரங்கள்
பச்சைக் கற்பூரம் போல் மணக்குமா ? (அல்லது)
தாமரை மலர் போலமணக்குமா ?
அவை தித்தித்திருக்குமோ ?
என்ன சுவை, என்ன மணம் என்று எனக்குச் சொல்லேன்.

(2)
அழகிய சங்கே !
நீ கடலிலே தோன்றி
அசுரன் பஞ்சசனன் உடலிலே வளர்ந்து
பிறந்த இடம்
வளர்ந்த இடம்
இந்த இரண்டையும் மறந்து
எம்பெருமான் திருக்கைகளிலே குடியேறி
தீய அசுரர் பலர்
துன்பத்தில் மூழ்கும்படி
முழங்கும் மேன்மை கொண்டாய்

(3)

அழகிய பெரிய சங்கே !
இலையுதிர் கால சந்திரன்
பௌர்ணமி நாளில்
பெரிய மலையிலே வந்து தோன்றினாற்போல்
நீயும்
வடமதுரை மன்னன்
வாசுதேவன் திருக்கையில் குடியேறி
உன் மேன்மையெல்லாம் தோன்ற விளங்குகின்றாய்.

(4)
வலம்புரிச் சங்கே !
கண்ணனின் திருக்கையிலே
சந்திர மண்டலம் போல்
எப்போதும் நீ இருந்து கொண்டு
அவன் காதிலே ஏதோ ரகசியம் பேசுகிறாய் போலும்
செல்வச் சீமான் இந்திரன் கூட
உன் செல்வத்துக்கு முன் ஒப்பாக மாட்டான்.

(5)
சங்கே !
ஒரே கடலிலே
உன்னோடு வாழ்வாரை
ஒருவருமே மதிப்பதில்லை
ஆனால்
நீ ஒருவன் மட்டும்
எங்கும் நிறைந்த இறைவன்
கண்ணனின் இதழமுதை
எந்நாளும் சுவைக்கின்றாய்.

(6)
வலம்புரிச் சங்கே !
வெகுதூரம் வழி நடந்து
புண்ணிய நதிகளிலே நீராடும் துன்பமின்றி
இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளிய கண்ணன்
அவன் கைகளிலே எப்போதும் குடிகொண்டு
மாலவனின் இனிமையான வாய் தீர்த்தத்திலே
பாய்ந்து நீராட வல்லாய் நீ.

(7)
அப்போதுதான் மலர்ந்த செந்தாமரையில்
தேன் பருகும் அன்னம் போல்
சிவந்த கண்களும்
கறுத்த திருமேனியும் கொண்ட வாசுதேவன்
அவனது அழகிய திருக்கரத்தில்
கண்வளரும் சீரிய சங்கே
உன் செல்வம்
மிகவும் சிறந்தது காண்.

(8)
சங்கே
நீ உண்பது உலகளந்தான் வாயமுதம்
நீ படுப்பதோ
கடல் வண்ணன் திருக்கையினிலே
ஆதலினால்
பெண்குலத்தார் எல்லாரும்
உன் செயல் கண்டு
பெருங்கூச்சல் போடுகின்றனர்
நியாயமா நீ செய்வது ?

(9)
செல்வமிக்க சங்கே !
ஆயிரமாயிரம் தேவியர்
கன்ணனின் வாயமுதம் வேண்டிக்
காத்திருக்க
அவ்வமுதத்தைப் பகிர்ந்து உண்ணாமல்
நீ ஒருவனே
தேனை உண்பது போல் உண்டால்
மற்றவர் மனம் சிதையாதோ ?

(10)
பாஞ்சசன்னியத்தைப்
பத்மநாபனோடு உறவு கொள்ளச் செய்தவள்
அழகிய வில்லிபுத்தூரிலே அவதரித்தவள்
நிறைந்த புகழ் கொண்டவள்
பெரியாழ்வாரின் திருமகள் ஆண்டாள்
அவளின் தமிழ்ப் பாசுரங்கள் பத்தினையும் ஓதி
பெருமானைத் துதிப்பவர்கள்
கண்ணனுக்கு நெருக்கமாவார்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s