Monthly Archives: December 2023

நான்கு வயதாகப்போகும் குழந்தையின் நாட்குறிப்பிலிருந்து…

நாளை புண்களைக் கட்டியிருந்த துணிகள்அகற்றப்பட்டுவிடும்வியப்பாக இருக்கிறது எனக்குஎஞ்சியிருக்கும் என் ஒரு கண்ணால்என்னால் பாதி ஆரஞ்சைப் பார்க்கமுடியுமா?பாதி ஆப்பிளை?என் அம்மாவின் பாதி முகத்தை? நான் துப்பாக்கி ரவையைப் பார்க்கவில்லைஆனால்என் தலையில் அது வெடித்தபோதுஅதன் வலியை உணர்ந்தேன்பெரிய துப்பாக்கியுடன் இருந்தஅந்த சிப்பாயின் உருவம் மறையவில்லைஅந்த தடுமாறும் கைகள்அவனின் அந்தப் பார்வைஎன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை மூடிய என் கண்களால்அவனை நன்றாக என்னால் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

வௌவால்கள் 

என் ஜன்னல்களில் வௌவால்கள்என் வார்த்தைகளை உறிஞ்சுகின்றனஎன் வீட்டு முகப்பில் வௌவால்கள்செய்தித்தாள்களுக்குப் பின்னால்மூலைகளில் என் பாதச்சுவடுகளைத்தொடர்கின்றனஎன் தலையசைப்புக்கள் ஒவ்வொன்றையும்உற்றுநோக்குகின்றன நாற்காலிக்குப் பின்னாலிருந்துஎன்னைக் கண்காணிக்கின்றனதெருக்களில் அவை என்னைத் தொடர்கின்றனஎன் கண்களின் அசைவுகளைபுத்தகங்களைஇளம்பெண்களின் கால்களைகண்காணிக்கின்றன, என் அண்டைவீட்டுக்காரரின்பலகணியில் வௌவால்கள்மின்னணுக் கருவிகள் சுவற்றில் மறைந்துள்ளனஇப்போதுவௌவால்கள் தற்கொலையின் விளிம்பில்பகல் வெளிச்சத்திற்காக நான்பாதை தோண்டுகிறேன் — Samih al Quasim (1939-2014) பாலஸ்தீனக் கவிஞர். பாலஸ்தீனர்களின் உரிமைக்காகக்  … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

இது போதும் எனக்கு 

இது போதும் எனக்கு  இந்த பூமியில் நான் இறந்தால் போதும்  அவளுள் அந்த மண்ணில் புதைந்து, உருகி, மறைந்து  பின்  மலராக முகிழ்க்கும்போது   என் நாட்டின் குழந்தை அந்த மலரோடு விளையாடும்  எனது நாட்டின் அணைப்பில்  நான் இருந்தால் போதும்  கையளவு மண்ணாய்  புல்லின் இதழாய்  ஒரு மலராய் இருந்தால்  போதும். — Fadwa Tuqan … Continue reading

Posted in Translated poems | Tagged , | Leave a comment