Monthly Archives: September 2013

பிறக்கத்தான் வேண்டுமா?

அம்மா நீ அடிக்கடி சொல்வாய் நான் பிறந்தபொழுது உன் பிரசவ வேதனை மிகவும் நீடித்ததாக உன் நீடித்த அந்த வேதனைக்கு காரணம் தெரியுமா அம்மா? நான் உன் கருப்பையில் இருந்துகொண்டு ஆழ்ந்து யோசித்தேன்! நான் இந்த பூமியில் பிறக்கத்தான் வேண்டுமா என்று? இங்கே எல்லாப் பாதைகளும் தொடுவானம் நோக்கி விரைய எனக்கு மட்டும் அவை மூடப்பட்டதால்! … Continue reading

Posted in Translated poems | Tagged , , | Leave a comment

நான் ஒரு பெண்?

நான் ஒரு பெண்?   அதோ அந்த மனிதன் சொல்கிறான் வண்டியில் ஏறவும் பள்ளத்தைத் தாண்டவும் ஒரு பெண்ணுக்கு உதவி செய் எங்கிருந்தாலும் அவளை சிறந்த இடத்தில் வை என்று ஆனால் வண்டியில் ஏறவோ பள்ளத்தைத் தாண்டவோ எவரும் இதுவரை உதவியதில்லை சிறந்த இடமும் தந்தாரில்லை நான் ஒரு பெண்? என்னைப் பாருங்கள் என் கையைப் … Continue reading

Image | Posted on by | Tagged | Leave a comment

புறநகர்ப்பகுதி

மண்ணைப்போலவே நிறம் கொண்ட அங்கிகளை அணிந்த மனிதர்கள் பள்ளத்திலிருந்து மேலே வருகிறார்கள் இது ஒரு மாறி வரும் இடம் இக்கட்டானதும் கூட கிராமமுமில்லை நகரமுமில்லை எல்லையிலிருக்கும் கட்டுமான பாரம் தூக்கிகள் வெகுவான பாரத்தை ஏற்றத்துடிக்கின்றன ஆனால் நேரமோ அதற்குத்தடையாக உள்ளது சுற்றுவட்ட வெளிச்சத்தில் குளிர்ந்த நாக்குகளுடன் கான்கிரீட் குழாய்கள் சிதறிக்கிடக்கின்றன பழைய தோட்ட வீடுகளில் தானியங்கிப்பட்டறைகள். … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment