Tag Archives: Nicanor Parra

பிரியமான மாணவர்களே – நிகனோர் பர்ரா

பிரியமான மாணவர்களே சென்று வாருங்கள் நல் வாழ்த்துக்கள் இந்நாட்டில் இன்னும் உயிருடனிருக்கும் கடைசிக் கருங்கழுத்து அன்னங்களைப் பாதுகாக்கவேண்டிய நேரமிது உதைகள் குத்துக்கள் எதுவாக இருப்பினும்: முடிவில் கவிதை நமக்கு நன்றி சொல்லும் இன்னொரு புரட்சிகரமான நடவடிக்கை: காதல் குற்றங்கள் எல்லாவற்றையும் மன்னிப்போம் பாலுறவுக்குப் பொது மன்னிப்பு காதல் காதல் காதல் மேலும் காதல் தயவுசெய்து ஜோடி … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

ஆன்மா சாந்தி அடையட்டும் – நிகனோர் பர்ரா

ஆன்மா சாந்தி அடையட்டும் அதில் என்ன சந்தேகம் ஆனால் அந்த ஈரம்? அப்புறம் அந்தப்பாசி? பிறகு நடுகல்லின் கனம்? மேலும் குடிபோதையில் உள்ள சவக்குழி தோண்டுவோர்? மற்றும் பூந்தொட்டிகளைத் திருடும் மக்கள்? சவப்பெட்டியைக் கடிக்கும் எலிகள்? எல்லா இடங்களிலும் நெளியும் பாழாய்ப்போன புழுக்கள் இவையெல்லாம் சாவை நெருங்க முடியாததாய்ச் செய்கின்றன அல்லது என்ன நடக்கிறதென்று எங்களுக்குத் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

பூனை-நிகனோர் பர்ரா

இந்தப் பூனைக்கு வயதாகிக்  கொண்டிருக்கிறது பல மாதங்களுக்கு முன்னால் அதனுடைய நிழலே அதற்கு ஒரு ஆவி போலத் தோன்றியது அதன் மின்சார மீசை அனைத்தையும் உணர்ந்து கொள்கிறது: வண்டு, ஈ, தும்பி ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய மதிப்பு உண்டு இப்பொழுதெல்லாம் அது வெப்பமூட்ட வைத்திருக்கும் கரிக்கரண்டி அருகில் நெருங்கியமர்ந்துகொண்டு நேரத்தைப் போக்குகிறது நாய் அதனை முகரும் போதும் அல்லது … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

“கடைசி வாழ்த்து” – நிகனோர் பர்ரா

நாம் விரும்புகிறோமோ இல்லையோ நமக்கு இருப்பது மூன்றே தேர்வுகள்தான் நேற்று,இன்று, நாளை மூன்று கூட இல்லை ஏனெனில் தத்துவவாதி கூறுவதுபோல் நேற்று என்பது நேற்றே போனது அது நம் நினைவில் மட்டுமே இருக்கும் ஒன்று முன்பே பறிக்கப்பட்டுவிட்ட ரோஜாவில் அதில் உள்ளதைத்தவிர மேலும் இதழ்கள் எப்படிக்கிடைக்கும் ஆட நம்மிடமிருப்பது இரண்டே சீட்டுக்கள்தான் ஒன்று இன்று இன்னொன்று … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

கல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா

நடுத்தர உயரம் குரல் மென்மையானதும்  இல்லை கனத்ததும்  இல்லை ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கும் தையற்காரிக்கும் பிறந்த தலைமகன் நல்ல உணவில் ஈடுபாடு இருந்தும் பிறந்ததிலிருந்தே எலும்பும் தோலும் அழகற்ற   கன்னங்கள் மிகப் பெரிய காதுகளுடன் சதுர முகம் அதில் கண்கள்  சற்றே திறந்துள்ளன ‘முலட்டோ’  இன குத்துச்சண்டை வீரனின் மூக்கு அதன் கீழ் ‘ஆஸ்டெக்’ சிலையில்  உள்ளதுபோல் வாய் இவையெல்லாம் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

உயிர்த்தெழுதல் – நிகனோர் பர்ரா

ஒருமுறை நியூயார்க் நகரப் பூங்கா ஒன்றில் புறா ஒன்று என் காலடியில் உயிர்விட வந்தது சில வினாடிகள் மரண வேதனை பின்னர் அதன் உயிர் பிரிந்தது ஆனால் யாருமே நம்ப மாட்டார்கள் அது உடனே மீண்டும் உயிர்பெற்று எழுந்தது என்று எதிர்வினையாற்ற எனக்கு நேரமே கொடுக்காமல் பறந்து விட்டது அது ஏதோ அது சாகவே இல்லைபோல் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

சமாதான வழியை நான் நம்புவதில்லை – நிகனோர் பர்ரா

சமாதான வழியை நான் நம்புவதில்லை வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை நான் வேறு எதையாவது நம்ப விரும்புகிறேன் ஆனால் நம்புவது என்பது கடவுளை நம்புவது என நான் எண்ணவில்லை நான் செய்கின்ற ஒன்று தோளசைவில் என் வெறுப்பைக் காட்டுவதுதான் என் வெளிப்படைத் தன்மைக்காக என்னை மன்னியுங்கள் பால் வீதியைக்கூட நான் நம்புவதில்லை. இக்கவிதையின் ஆங்கில வடிவம் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment