Monthly Archives: August 2015

யோபுவின் கதை – அதிகாரம் 5

எலிபாஸ் மேலும் சொன்னான்:- யோபு நீ உதவி வேண்டிக் கதறலாம். யாருமே உனக்கு பதிலளிக்க மாட்டார்கள். தேவதைகளை அழைத்தாலும் அவை உனக்கு உதவாது. தான் சாகப்போகிறோமே என்று பிறர்மேல் ஒரு முட்டாள் கோபமுறலாம். அவர்களிடம் உள்ளவை தனக்கும் வேண்டுமென அவன் எண்ணலாம். அதிக ஆசை கூட அவனை அழிவுக்குத் தள்ளிவிடும். நான் ஒரு முட்டாள் வாழும் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 4

எலிபாஸ் யோபுவிடம் சொல்கிறான்:- பொறுமையாக இரு.நான் சொல்லப்போவதை நன்கு கேள். எண்ணிப்பார், மக்களுக்கு நீ எப்படி உதவி புரிந்தாய் என்று. அவர்கள் நல்ல வழியில் வாழ உதவினாய். எப்படி உறுதியாய் இருப்பதென்று அவர்களுக்குக் கூறினாய். ஆனால் நடந்தது என்ன? உன்னைத் துன்பங்கள் வாட்டுகின்றன. அதனால் நீ துயருற்று சோர்ந்துவிட்டாய். நீ இறைவனை நேசி. அவன் கட்டளைக்குக் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 3

முடிவில் யோபு தான் பிறந்த நாளைச் சபித்தான். இறைவா!நான் பிறந்த நாளை மறந்துவிடு. என் பெற்றோர்களுக்கு நான் மகனாகப் பிறந்த இரவை மறந்துவிடு. அந்த நாள் கெட்ட நாள். மக்கள் நினைக்கட்டும் அந்த நாள் இருண்ட நாள் என்று. அந்த நாள் இருட்டைப்போல் கருத்திருக்கட்டும். எவருமே அந்நாளை நினைக்காதிருக்கட்டும்.அதை அனைவரின் நினைவிலிருந்தும் அழித்துவிடு. அந்த நாளை … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 2

மீண்டும் சாத்தான் இறைவனைச்சந்திக்க வருகிறான். இறைவன் சாத்தானிடம் கேட்கிறார். “யோபுவைச் சந்தித்தாயா?அவனைப்போல் முழுமையான ஒழுக்கசீலனை, தீயவற்றை ஒதுக்கி என்னிடம் பயபக்தியுடன் நடந்துகொள்பவனைப் பூமியில் காண இயலுமா? எக்காரணமுமின்றி அவனை அழிக்கச்சொன்னாய். ஆனாலும் அவன் இன்னமும் என்னிடம் உள்ள பக்தியில் உறுதியாய் இருக்கிறான். சாத்தான் பதிலளிக்கிறான்: யோபுவின் எலும்பையும் சதையையும் சிதைத்துப்பாருங்கள்.அப்பொழுது தெரியும் அவன் உங்களை நிந்திக்கிறானா … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 1

பைபிளின் பழைய ஏற்பாட்டில் 42 அதிகாரங்களில்  யோபுவின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது. அதன் எளிய தமிழ் வடிவத்தை இந்தத்தொடரில் காண்போம் . —————— ஊத்ஸ் என்ற ஊரில் யோபு என்கிற மனிதன் வாழ்ந்துவந்தான். நீதி,நேர்மை தவறாதவன். இறைவனை அன்றாடம் வாழ்த்தி வணங்கி வழிபடுகிறவன். எந்த பாவச்செயலும் செய்யாதவன். அவனுக்கு ஏழு மகன்கள். மூன்று புதல்வியர் ஏழாயிரம் ஆடுகள், … Continue reading

Posted in The Book of Job | Tagged , | 2 Comments