Tag Archives: Bible

சங்கீதம் 98

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டும் விழா வருகிற மே மாதம் 6 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் சர்ச்சில் நடக்கவிருக்கிறது. அந்நிகழ்வின்போது பாடல் இயற்றி இசைக்க பிரபல பாடலாசிரியர் ஆண்ட்ரூ லாய்ட் வெப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிசூட்டும்    விழாவுக்கான பாடலில் இவர் பைபிளின் சங்கீதம் 98 ல் உள்ள வார்த்தைகளைப்   பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார். அந்த சங்கீதம்  98ன்  தமிழ் வடிவம்… சங்கீதம் 98 1.ஓ! கிறிஸ்துவுக்கு … Continue reading

Posted in Translated poems | Tagged , , | Leave a comment

யோபுவின் கதை : ஒரு பின்னுரை

பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள ‘யோபுவின் கதை’ மெய்யறிவு இலக்கிய (Wisdom literature) வகையைச் சார்ந்தது எனலாம். இறைவனை உணர்தல் இதன் இலக்கு. பைபிளில் ‘ யோபுவின் கதை ‘ மிகவும் கடினமான பகுதி என்று கருதப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவர் அல்லாதவரையும் இந்தக் கதை மிகவும் கவர்ந்திருக்கிறது. இந்தக் கவர்ச்சிக்கு முக்கியமான காரணம் இப்பகுதி முழுவதும் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 42

தேவனுக்கு யோபுவின் பதில்…… தேவனே! நீர் சர்வ வல்லவரென்று நானறிவேன். நீங்கள் திட்டமிட்டு செய்யவிருக்கும் செயல்களை யாரால் தடுக்கமுடியும். எனது திட்டங்களில் குற்றம் காண நீ யார் என என்னைக் கேட்டீர்கள். எனவேதான் நான் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதவற்றைப் பற்றியும், தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்களைப் பற்றியும் பேசினேன். நான் பேசுகிறேன் கவனி … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 41

தேவனின் பேச்சு தொடர்கிறது……… யோபுவே! உன்னால் லெவியாதான் என்னும் மாபெரும் கடல் விலங்கைத் தூண்டிலைக்கொண்டு இழுக்க முடியுமா? அதற்கு உன்னால் மூக்கணாங்கயிறு போட முடியுமா? அதன் தாடையில் கொக்கியைச் செருகமுடியுமா? அது உன்னிடம் கருணையை எதிர்பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருக்கும் என நினைக்கிறாயா? அது உன்னிடம் மென்மையான சொற்களால் பேசுமோ? உன்னோடு அது ஒப்பந்தம் ஏதும் செய்து … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 40

தேவனின் பேச்சு தொடர்கிறது …….. யோபுவே! சர்வ வல்லவனான என்னிடம் வழக்காடி அறிவுரை கூறும் நீ, எனக்கு இப்போது பதில் சொல். தேவனுக்கு யோபுவின் பதில் :- நான் பேசத் தகுதியற்றவன். நான் எப்படி உங்களுக்குப் பதில் கூற முடியும். நான் என் வாயை மூடிக்கொண்டு பேசுவதை நிறுத்திவிடுகிறேன். நான் ஓரிருமுறைதான் பேசினேன். இனி நான் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 39

தேவனின் பேச்சு தொடர்கிறது……. யோபுவே! வரையாடுகள் எப்பொழுது குட்டிகளை ஈன்றெடுக்கும் என்று உனக்குத் தெரியுமா? பெண் மான் குட்டி போடுவதைக் கவனித்திருக்கிறாயா? மிருகங்கள் தங்கள் குட்டிகளை ஈனுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவை நீ அறிவாயா? அவை தமது பின்னங்கால்களை மடக்கி குட்டிகளை ஈனும். அப்பொழுது அவற்றின் பிரசவ வேதனை முடிந்துவிடும். ஈன்ற அவற்றின் குட்டிகளோ காட்டுவெளிகளில் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 38

தேவனின் முதல் பேச்சு ……… சூறாவளியின் பின்னணியில் தேவனின் குரல் ஒலிக்கிறது. நான் வகுத்த நியதிகளை மறுக்கும் நீ யார்? நீ என்ன பேசுகிறாய் என்று உணரவில்லை. நான் உன்னிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அவற்றுக்குப் பதில் சொல்லத் தயாராக இரு. நான் இந்தப் பூமியைப் படைத்தபோது நீ எங்கிருந்தாய்? நீ அறிவாளியானால் இந்த என் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 37

எலிஹூ தொடர்கிறார்…. இடியோசையைக் கேட்கும்போது என் இதயம் நடுங்குகிறது. கேளுங்கள்! இடியாய் முழங்குகிற அவரது குரலைக் கேளுங்கள். அவர் மின்னலை வானத்தில் பாய்ச்சுகிறார். அந்த மின்னொளி பூமியின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்குப் பயணிக்கிறது. அடுத்து வருகிறது அவரின் இடிமுழக்கம். அவரது கம்பீரக்குரல் இடிபோல் முழங்குகிறது. அவரது குரல் காற்றில் நிறைகையில் அதைத் தவிர்க்கவே முடியாது. … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 36

எலிஹூ தொடர்கிறார்……. இன்னும் சற்று நேரம் பொறுமையாக இருக்கவும். நான் தேவனின் பக்கம் இருந்து அவரது நியாயங்களை உங்களுக்கு விளக்குகிறேன். அறிவார்த்தமான எனது புரிதல்களை நான் மிகவும் முயற்சி செய்துதான் பெற்றுள்ளேன். என்னைப் படைத்த தேவன் நியாயத்தின் மொத்த வடிவம். எனது வார்த்தைகள் உண்மையானவை. இதில் உமக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். உம்முடன் பேசிக்கொண்டிருக்கும் நான் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 35

எலிஹூ மேலும் தொடர்கிறார் …….. யோபுவே! உமது நேர்மை நீதியெல்லாம் தேவனுடயதைக் காட்டிலும் பெரிதென்று சொல்வது எவ்வகையில் நியாயம்? பாவம் செய்யாமலிருந்தால் எனக்கு என்ன நன்மை வந்துவிடப்போகிறது என்றா கேட்கிறீர்? இதற்கு உமக்கும் உம்முடன் கூட இருக்கும் நண்பர்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்புகிறேன். நீர் வானத்தை அண்ணாந்து பாரும். உமக்கு மேல் உயரத்திலுள்ள மேகங்களைப் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment