நாச்சியார் திருமொழி-11

நாச்சியார் திருமொழி – பதினோராம் திருமொழி
அரங்கனைக் காமுறுதல்

(1)
அணிகலன்கள் புனைந்த மாதரே !
அவர் விரும்பி தன் கையில் ஏந்தியுள்ள சங்குக்கு
நான் விரும்பி அணிந்து கொண்டிருக்கும் சங்குவளை ஒப்பாகுமா, இல்லையா?
தீ கக்கும் முகங்கள் கொண்ட
பாம்பின் படுக்கையின் மேல் துயில்கின்ற
திருவரங்கன்
என் முகத்தை நோக்குகின்றாரில்லையே
ஐயகோ !
அந்தோ !
அந்தோ !

(2)
எழில் மிகு தாய்மார்களே !
திருவரங்கத்திலேயுள்ள
என் இன்னமுதர்
கூந்தலழகர்
அழகிய அதரங்களும்
கண்களும் கொண்டவர்
நாபிக்கமலத்தாலே அழகு பெற்றவர்
என் அழகிய மணவாளர்
அவர்
என் கைவளையை
கழல்கின்ற வளையாக ஆக்கிவிட்டார்.

(3)
பொங்கிவரும் அலைகள் நிறை கடல் சூழ்ந்த பூமி
மற்றும்
விண்ணுலகு
இவையிரண்டும் குறையின்றி ஆண்டுவரும்
எம்பெருமான்
செங்கோல் செலுத்தவல்ல திருவரங்கச்செல்வன்
என் கைவளைகொண்டு
தம் குறை தீர்ந்து நிறை பெறுவாரோ ?

(4)
மேல்தளங்கள் அணிசெய்யும் மாடங்கள்
மதில்கள்
அது திருவரங்கம்
அங்கே அரங்கன்
முன்பு வாமனனாய் வந்தவர்
அழகிய பெரிய பெருமாள்
அன்றொரு நாள்
நீர் வார்த்து பூமி பெற்ற பிச்சையிலே குறைபோலும்
அக்குறை தீர
என் கை வளைமேல் விருப்பமுற்று
இத்தெருவழியே வாராரோ ?

(5)
பொல்லாச் சிறிய வடிவு கொண்டு
அழகிய கையாலே பிச்சை பெற்று
எல்லா உலகங்களையும் தனதாக்கின
எம்பெருமான்
நல்லவர்கள் வாழும்
குளிர்ந்த திருவரங்கத்திலே
பாம்பினைப் படுக்கையாய்க் கொண்ட பெருமாள்
ஏதுமற்ற என்னிடம்
என் உடம்பையும்
கொள்ளை கொள்வான் போலும்.

(6)
காவிரி நீர்
விளை நிலமெல்லாம் ஒடிப் புரளும் திருவரங்கம்
அங்கே திருவரங்கச் செல்வன்
எளியோர்க்கு எளியனாய்
உயர்ந்தோர்க்கு எட்டாத
வேதப்பொருளான பெருமாள்
முன்பு கொள்ளை கொண்ட பொருளெல்லாம் போதாதென்று
என் உடலையும் கொள்ளை கொண்டார்.

(7)
உறுதி மிக்க மதில்கள் சூழ் திருவரங்கக் கோயில்
அங்கே செல்வமிக்க அரங்கன்
அன்று ராமனாய்
சீதையின் திருமேனியிலே விருப்புற்று
உண்ணாது
உறங்காது
அலையோசை நிறை கடலிலே அணைகட்டி
அடைந்த துன்பமெல்லாம் மறந்து
இன்று
தன் பெருமைகளை எண்ணுகின்றார்.

(8)
முன்பொருநாள்
பாசிபடர்ந்து கிடந்த பூமி தேவிக்காக
அழுக்கேறிய உடம்பில் நீர் ஒழுகும்
வெட்கமிலாப் பன்றியாய் வடிவெடுத்த
திருவரங்கன்
அவர் முன்பு சொன்ன வார்த்தைகளை
மறக்கலாம் என்றாலோ
முயன்றாலும் முடியவில்லை.

(9)
திருமண முயற்சியெல்லாம் முடிந்து
ருக்மிணியை மணப்போமென
சந்தேகமேதுமின்றி
உறுதி கொண்ட நெஞ்சினனாய் இருந்த சிசுபாலன்
அவமானப்பட்டு
வானத்தை நோக்கிக் கிடக்க
அம்மணப் பந்தலிலே
ருக்மிணியைக் கைப்பிடித்த பெருமான்
பெண்ணாகப் பிறந்தவர்க்கெல்லாம் துணைவன்
அவன் விரும்பி உறையும் ஊரின் பெயர்
திருவரங்கம்.

(10)
செம்மை மிகு திருவரங்கர்
தம் வாயாலே அருளிச் செய்த
முடிவான சத்திய வார்த்தைகளை
பெரியாழ்வார் கேட்டு
அதன்படி நடந்திடுவார்
“ தம்மை விரும்பினாரைத் தாமும் விரும்புவர் “
இவ்வார்த்தையினை இறைவனே பொய்யாக்கினால்
அவரைக் கேட்பவர் தான் யார் ?

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s