Category Archives: Thiruvasagam

வாரம் ஒரு வாசகம் – 13

13.திருப்பூவல்லி (தில்லையில் அருளியது) {பூவல்லி என்பது பண்டைத்தமிழ் மகளிரின் மாலை விளையாட்டு} பாடல் 5. சிவன் தன் சடையிலே தேன் பொருந்திய கொன்றைப்பூமாலை அணிந்தவன் அவன் மனித உருவெடுத்து என்னிடம் வந்து உலகோர் முன்னே என் உள்ளத்துள் புகுந்தான். என்னை உன்னிடம் அழைத்துக்கொள் எனக் கூத்தாடிக் கதறுகின்றேன் அவனோ என் ஓலத்தை ஒதுக்கிவிட்டு தில்லையில் திருநடனம் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

வாரம் ஒரு வாசகம் – 12

12.திருச்சாழல் (தில்லையில் அருளியது) {சாழல் என்பது பண்டைக்காலப் பெண்களின் ஒருவகை விளையாட்டு. கேள்வி–பதில் பாணியில் ஆடப்படுவது}. கேள்வி: பெண்ணே! சுடுகாட்டில் குடியிருப்பு உடுத்துவதோ கொல்கின்ற புலியின் தோல் தாய் இல்லை, தந்தையுமில்லை இவையெல்லாம் பெருமையாகுமோ ! பதில்: ஆம். தோழீ ! அவனுக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை அவன் தனியன் தான் ஆனால் அவன் கோபமுற்றால் இந்த … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

வாரம் ஒரு வாசகம் – 11

11.திருத்தெள்ளேணம் (தில்லையில் அருளியது) [தெள்ளேணம் என்பது பெண்களின் ஒருவகை விளையாட்டு] பாடல் 4. பயனற்ற கடவுளரை நான் வணங்கி அற்ப இன்பம் தரும் பதவிகளில் வீழாமலும் பிறவி எனும் மாய வலையில் சிக்காமலும் என்னைக் காத்தருள்பவன் ஒளி வடிவான அந்தச்சிவன் அவன் என்மீது பாய்ச்சிய புத்தொளியில் ‘நான்’ எனும் அகங்காரம் அழிந்து எல்லாம் சிவமயமாயிற்று சிவனின் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

வாரம் ஒரு வாசகம் – 10

10.திருக்கோத்தும்பி (தில்லையில் அருளியது) பாடல் 5. வண்டுகளின் ராஜாவே! ‘அந்தக் கடவுளே கடவுள்’ ‘அவர் ஒருவரே பெரிய கடவுள்’ என கடவுள் அல்லாப் பொய்யர்களைக் கடவுள் எனப் புலம்பித் திரிகின்ற இவ்வுலகிலே என் ஆசைகள் அனைத்தும் நீங்கிட உறுதியாய் நான் பிடித்திருக்கும் உண்மைக் கடவுள் சிவனிடம் போய் என் நிலையைப் பாடு. பாடல் 6. வண்டுகளின் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

வாரம் ஒரு வாசகம் – 9

9.திருப்பொற்சுண்ணம் (தில்லையில் அருளியது) [வாசனை திரவியங்களை உரலில் இட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். இதில் சிறிது பொன்னும் சேர்க்கப்படும். பொன் போன்ற நிறமுடைய இப்பொடி இறைவனின் திருமஞ்சனத்தின்போது உபயோகிக்கப்படுவது.] பாடல் 8 ஒளிவீசும் பெரிய கண்கள் கொண்ட பெண்களே! உங்கள் வளையல்கள் ஒலிக்கவும் பருத்த மார்பகங்கள் பொங்கியெழவும் தோளிலும் நெற்றியிலும் திருநீறு பளிச்சிடவும் மீண்டும் மீண்டும் அஞ்சலி … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

வாரம் ஒரு வாசகம் – 8

8.திருவம்மானை (திருவண்ணாமலையில் அருளியது) ******** பாடல் 8 நல்ல ராகங்கள் சுமந்த பாடல்கள் அவற்றுக்குப் பரிசு தரும் உமையொருபாகன் பெருமான் திருப்பெருந்துறையன் விண்ணவர் போற்றும் புகழ் மிக்கவன் மண்ணுலகின் ஈசன் நெற்றிக்கண் கொண்ட கடவுள் புகழ் மிக்க மதுரையிலே பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியனின் பிரம்படி பட்டதாலே புண்பட்ட பொன்மேனியன் அவன் புகழினைப் பாடிடுவோம்.   … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

வாரம் ஒரு வாசகம் – 7

7.திருவெம்பாவை (திருவண்ணாமலையில் அருளியது) ******** கீழுலகம் ஏழினுக்கும் கீழாய் சொல்லிலடங்கா அவன் திருவடிகள் அனைத்துக்கும் மேலே பூக்கள் அணிந்த அவன் திருமுடி அவன் உமையொருபாகன் எனவே அவன் மேனி ஒன்றன்று வேதமும் விண்ணவரும் மண்ணுலகும் புகழ்ந்தாலும் சொல்லிலடங்கா உயிர்த்துணைவன் தொண்டருள் இலங்குகிறான் குற்றமற்ற சிவன் அவன் சிவாலயப் பெண்பிள்ளைகளே அவனுக்கு ஊர் இல்லை பேர் இல்லை … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment