Monthly Archives: February 2016

யோபுவின் கதை – அதிகாரம் 30

யோபுவின் உரை தொடர்கிறது……… ஆனால் இப்போதோ என்னிலும் இளையவர்கள் என்னைப்பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். இவர்களது தந்தையருக்கு நான் என் மந்தைகளைக் காக்கும் நாய்களின் மதிப்பைத் தரக்கூட தயங்கியிருப்பேன். முதுமையால் வலுவிழந்த அவர்களால் எனக்கு என்ன உதவி இருந்தது. பஞ்சத்தாலும் பசியாலும் வாடிய அவர்களுக்கு வெகுநாளாய் வெறுமையாய்க்கிடக்கும் பாழ்வெளியில் உள்ள புதர்களிலும், பூமிக்கடியிலும் கிடைக்கும் கிழங்குகள்தான் உணவு. … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 29

யோபுவின் நீதி உரை தொடர்கிறது…………. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தேவனின் பாதுகாப்பில் நான் இருந்த நிலைமை இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும். என் தலைக்குமேல் அவரது ஒளி பிரகாசித்ததால் அந்த வெளிச்சத்தில் நான் இருளைக் கடந்துபோனேன். எனது இளமைக் காலத்தில் தேவனின் அருளால் எனது இல்லம் பாதுகாப்பாக இருந்தது. அப்பொழுது தேவன் என்னுடன் இருந்தார். என் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 28

யோபுவின் பதில் தொடர்கிறது…………. வெள்ளியை வெட்டி எடுப்பதற்குச் சுரங்கங்கள் உண்டு.   பொன்னை உருக்கி அதிலிருக்கும் தூசுகளை அகற்றிப் புடம் போடும் இடங்கள் உண்டு. இரும்பைப் பூமியிலிருந்து எடுக்கவும் எந்தக் கற்களிலிருந்து  செம்பைப் பிரித்தெடுக்க  வேண்டுமெனவும் மனிதன் அறிவான்.   இந்த உலோகங்கள் கிடைக்கும் சுரங்கங்களில்  அவர்கள் விளக்குகளின் துணை கொண்டு தேடுவார்கள்.  நகரத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 27

யோபுவின் பதில் தொடர்கிறது…….. தேவன் என் நியாயத்தைப் புறந்தள்ளினாலும் அவர் கொடுத்த  மூச்சு என்னுள்  உள்ளவரை உண்மையையே பேசுவேன். நேர்மை தவறமாட்டேன். இது உறுதி.  நீ சொல்வதெல்லாம் சரி என்று ஒப்புக்கொள்ளமாட்டேன். இறுதிவரை நான் நெறி தவறி நடக்கமாட்டேன்.  என் மனசாட்சி என்னை ஒருபோதும் குற்றம் சொல்லாது. என் எதிரிகள் தீயவர்கள். கடவுள் அவர்களைத் தண்டிப்பாராக.  தீயவன் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 26

பில்தாதுக்கு யோபுவின் பதில்………….. பில்தாத்! நீ பலமில்லாதவனுக்கு உதவவில்லை. தளர்ந்துபோனவர்களைக் காப்பாற்றவில்லை. விவேகமற்ற ஒருவனுக்கு நீ அறிவுரை கூறவில்லை. ஆழமான நுண்ணறிவை நீ வெளிப்படுத்தவில்லை. என்னிடம் நீ சொன்னவற்றையெல்லாம் கூற உனக்கு யார் உதவினார்கள்? எவருடைய ஆவி உன் மூலம் பேசுகிறது? இறந்தவர்களின் ஆவி பூமிக்கடியில் உள்ள நீரில் தத்தளிக்கும். இறந்தவர்களின் உலகம் தேவனுக்குத் திறந்தவெளி. … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment