நாச்சியார் திருமொழி-9

நாச்சியார் திருமொழி – ஒன்பதாம் திருமொழி
திருமாலிருஞ்சோலை சுந்தரன்

(1)
திருமாலிருஞ்சோலையெங்கும்
செந்தூரப் பொடிதூவியது போல்
பட்டுப்பூச்சிகள் பரவிக்கிடக்கின்றன
அந்தோ !
அன்றொருநாள்
மந்தர மலையை மத்தாக்கிக்
கடல் கடைந்து
சுவைமிக்க அமிர்தமான பிராட்டியைப் பெற்ற
அழகிய தோள்கள் கொண்டவன்
அவன் விரித்த வலையிலிருந்து
தப்பிப் பிழைப்போமோ ?

(2)
போரைத் தொழிலாகக் கொண்ட யானைகள் விளையாடும்
திருமாலிருஞ்சோலையின் மலைச்சரிவுகளில்
முல்லை அரும்புகள்
அழகரின் புன்சிரிப்பை நினைவூட்டுகின்றன.
மொட்டுக்கள் நிரம்பிய படாக் கொடிகள் பூத்திருப்பது
‘ தப்பமுடியுமோ நீ ‘ என்று சொல்வது போல் உள்ளது.
இதைத் தாங்கமுடியவில்லை என்னால்.
அவன் தோள்களுக்கு ஆசைப்பட்டு
நான் படும்பாட்டை
யாரிடம் சொல்வேனடி தோழி.

(3)
அழகிய காக்கணப் பூக்களே !
காயா மலர்களே !
நீங்களெல்லாம்
திருமாலின் உருவெளி காட்டுகின்றீர்
என் வருத்தம் தீர
நான் பிழைக்கும் வழி கூறுங்கள்
திருமகள் தழுவும் திண்ணிய தோள் கொண்ட அழகர்
என் வீட்டில் புகுந்து
என் வளையல்களைக் கொள்ளை கொள்வது
நியாயமா ?

(4)
பசுமையான சோலையிலே வாழ்கின்ற
குயில்களே !
மயில்களே !
அழகிய காக்கணப் பூக்களே !
புதிய களாப் பழங்களே !
நிறமும் மணமும் நிறை காயாம் பூக்களே !
ஐம்பெரும் பாதகரே !
உங்களுக்கு ஏனிந்த சோலை அழகரின் நிறம் ?
என்னை வாட்டி வதைக்கவோ ?

(5)
உயர்ந்த மலர்ச் சோலைகள் சூழ்
திருமாலிருஞ்சோலையிலே
நின்ற திருக்கோலமாய்
செந்தாமரைக் கண்களோடு
காளமேக வடிவுமுடைய
எம்பெருமானின் அழகிய உருவம்போலே
மலர்மேல் இருக்கும் வண்டினங்களே !
நெருங்கி இருக்கின்ற சுனைகளே
அச்சுனைகளில் பூத்திருக்கும் செந்தாமரை மலர்களே !
அவனை நினைவூட்டி வாட்டும் நீங்கள்
எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன்.

(6)
நறுமணம் கமழ் பொழில்கள் நிறைந்த
திருமாலிருஞ்சோலையில் உறைகின்ற
எம்பெருமானுக்கு
நான்
நூறு அண்டாக்களில் வெண்ணெய் சொல்லி
சமர்ப்பித்தேன்
மேலும்
நூறு அண்டாக்களில் சர்க்கரைப் பொங்கலும் சொல்லி
அதையும் சமர்ப்பித்தேன்
நாளாக நாளாக
உயர்ந்து வரும் செல்வம் படைத்த அழகர்
இன்று எழுந்தருளி
இவற்றை ஏற்றுக்கொள்வாரோ ?

(7)
மணம் கமழும் தென்றல் வீசும்
திருமாலிருஞ்சோலை வாழ் அழகர்
இன்று
இங்கே வந்து
வெண்ணையையும் சர்க்கரைப் பொங்கலையும்
அமுது செய்து
என் இதயத்தில் அவர் எப்போதும் இடம்பெற்றால்
நான்
ஒரு அண்டாவுக்குப் பதில் நூறாயிரம் அண்டாக்கள்
பரிமாறி
மேலும் பல தொண்டுகளும் செய்வேன்.

(8)
கரிய குருவிக்கூட்டங்கள்
காலை எழுந்திருந்து
திருமாலிருஞ்சோலைத் தலைவன்
துவாரகையின் மன்னன்
அலிலையில் கண் வளர்ந்த கண்ணன்
அவன் பெருமைகளைப் பேசுகின்றனவே !
அவை திருமாலின் வரவு கூறி ராகமிசைப்பது
உண்மையாகவே நடந்தேறுமா ?

(9)
கோங்கு மரங்கள் பூத்திருக்கும்
திருமலிருஞ்சோலையிலே
கொன்றை மரங்களில் தொங்குகின்ற
பொன்நிறப் பூமாலைகள்
நானும் அவற்றுடனே வீணில் கிடக்கின்றேன்
அழகான பவளநிற வாயில் வைத்து ஊதுகின்ற
பாஞ்சசன்ய சங்கொலியும்
சாரங்க வில்லின் நாண் ஒலியும்
நான் கேட்பது எந்நாளோ ?

(10)
சந்தனக் கட்டைகளும் காரகில் கட்டைகளும் சுமந்து
கரைகளை அழித்துக் கொண்டு சிலம்பாறு பாயும்
திருமாலிருஞ்சோலை வாழ் சுந்தரனை
வண்டுகள்நிறை கூந்தலாள் ஆண்டாள்
அழகுறப் பாடியச் செந்தமிழ்ப் பாசுரங்கள் பத்தும் ஓதவல்லார்
நாராயணன் திருவடி சேர்வரே.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s