Category Archives: Translated poems

நாய் ஒன்று இறந்துவிட்டது – பாப்லோ நெருடா

எனது நாய் இறந்துவிட்டது அதை நான் தோட்டத்தில் துருப்பிடித்த பழைய இயந்திரத்தருகே புதைத்துவிட்டேன் என்றாவது ஒருநாள் நானும் அதே இடத்தில் அதனுடன் சேர்ந்துகொள்வேன் ஆனால் அது இப்பொழுது தன் அடர்ந்த முடியுடனும் கெட்ட பழக்கங்களுடனும் ஈரமான மூக்குடனும் போய்விட்டது நான் ஒரு பொருள்முதல்வாதி நான் நம்பியதேயில்லை எந்த ஒரு மனிதனுக்கும் வானத்தில் சொர்க்கம் உறுதியளிக்கப்பட்டிருப்பதாக ஒரு … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

இதமான பாடல்

கண்ணீர் தளும்பும் கோதாவரி இதயம் வலிக்கும் கதைகளைக் கடலுக்குச் சொன்னதை மீண்டும் சொல்ல கீழைக்காற்றுபோல் வந்தாய் நீ. வாழ்வின் தென்றலுக்காய் ஏங்கிய மரத்தைப்போல் திகைப்புற்று என் வாயைத் திறந்தேன் நமக்கிடையே கண்ணுக்குத் தெரியாத கை ஏதும் மறிக்கிறதோ? நமக்குள்ளேயே நாம் தடை விதித்துக்கொண்டு ஊமைகளாக மாறிவிட்டோமோ? உன் தோற்றத்தைத் தவிர்க்க கண்ணீர் அருவிகளைத் தொண்டைக்குள் விழுங்கினேன் … Continue reading

Posted in Translated poems | Leave a comment

இரவின் தனிமை

இது ஒரு ஒயின் விருந்தில் நடந்தது நான் மயங்கிக் கிடக்கிறேன் என்னையறியாமல் காற்றில் உதிர்ந்த மலர்கள் என் மடியை நிறைத்துவிட்டன இன்னமும் தெளியாத போதையுடன் நான் எழுந்தபோது பறவைகளெல்லாம் தங்கள் கூடுகளை அடைந்துவிட்டன என் தோழர்கள் சிலர் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தனர் நிலவொளியில் தனியாளாய் ஆற்றின் வழி சென்றேன். —- ‘எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனக் … Continue reading

Posted in Translated poems | Tagged , | Leave a comment

பூனை-நிகனோர் பர்ரா

இந்தப் பூனைக்கு வயதாகிக்  கொண்டிருக்கிறது பல மாதங்களுக்கு முன்னால் அதனுடைய நிழலே அதற்கு ஒரு ஆவி போலத் தோன்றியது அதன் மின்சார மீசை அனைத்தையும் உணர்ந்து கொள்கிறது: வண்டு, ஈ, தும்பி ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய மதிப்பு உண்டு இப்பொழுதெல்லாம் அது வெப்பமூட்ட வைத்திருக்கும் கரிக்கரண்டி அருகில் நெருங்கியமர்ந்துகொண்டு நேரத்தைப் போக்குகிறது நாய் அதனை முகரும் போதும் அல்லது … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

“கடைசி வாழ்த்து” – நிகனோர் பர்ரா

நாம் விரும்புகிறோமோ இல்லையோ நமக்கு இருப்பது மூன்றே தேர்வுகள்தான் நேற்று,இன்று, நாளை மூன்று கூட இல்லை ஏனெனில் தத்துவவாதி கூறுவதுபோல் நேற்று என்பது நேற்றே போனது அது நம் நினைவில் மட்டுமே இருக்கும் ஒன்று முன்பே பறிக்கப்பட்டுவிட்ட ரோஜாவில் அதில் உள்ளதைத்தவிர மேலும் இதழ்கள் எப்படிக்கிடைக்கும் ஆட நம்மிடமிருப்பது இரண்டே சீட்டுக்கள்தான் ஒன்று இன்று இன்னொன்று … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

கல்லறை வாசகம் – நிகனோர் பர்ரா

நடுத்தர உயரம் குரல் மென்மையானதும்  இல்லை கனத்ததும்  இல்லை ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கும் தையற்காரிக்கும் பிறந்த தலைமகன் நல்ல உணவில் ஈடுபாடு இருந்தும் பிறந்ததிலிருந்தே எலும்பும் தோலும் அழகற்ற   கன்னங்கள் மிகப் பெரிய காதுகளுடன் சதுர முகம் அதில் கண்கள்  சற்றே திறந்துள்ளன ‘முலட்டோ’  இன குத்துச்சண்டை வீரனின் மூக்கு அதன் கீழ் ‘ஆஸ்டெக்’ சிலையில்  உள்ளதுபோல் வாய் இவையெல்லாம் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

உயிர்த்தெழுதல் – நிகனோர் பர்ரா

ஒருமுறை நியூயார்க் நகரப் பூங்கா ஒன்றில் புறா ஒன்று என் காலடியில் உயிர்விட வந்தது சில வினாடிகள் மரண வேதனை பின்னர் அதன் உயிர் பிரிந்தது ஆனால் யாருமே நம்ப மாட்டார்கள் அது உடனே மீண்டும் உயிர்பெற்று எழுந்தது என்று எதிர்வினையாற்ற எனக்கு நேரமே கொடுக்காமல் பறந்து விட்டது அது ஏதோ அது சாகவே இல்லைபோல் … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment