Monthly Archives: January 2014

பரிசில் பெற எப்போதும் செல்ல மாட்டேன்

394. “பரிசில் பெற எப்போதும் செல்ல மாட்டேன்” பாடியவர் : கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பா டப்பட்டவ ர் : சோழிய ஏனாதி திருக்குட்டுவன் திணை : பாடாண் (ஒருவரின் சிறப்பியல்புகள் கூறல்) துறை : கடைநிலை (அரண்மனை வாயிலில் பாடுதல்) —– திருக்குட்டுவன்…….. வில் பயிற்சியால் உயர்ந்து, அகன்ற சந்தனம் பூசிய மார்பு … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

விண்மீன் வெள்ளி எத்திசையில் இருந்தாலென்ன?

384. விண்மீன் வெள்ளி எத்திசையில் இருந்தாலென்ன? பாடியவர் : புறத்திணை நன்னாகனார் பாடப்பட்டவர் : கரும்பனூர்க்கிழான் திணை:பாடாண் : திணை துறை :கடைநிலை (அரண்மனை வாசலில் பாடுதல்) —– நீர்வளமிகுந்த மருதநில வயலிலே நாரை தன் கூட்டத்துடன் மேய்ந்து பின் முற்றிய கரும்பின் பூவை உண்ணவேண்டி வஞ்சி மரக்கிளையிலே தங்கும் காடு சார்ந்த முல்லை நிலத்திலே … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

கதிரவனே, வள்ளலோ நீ?

374. கதிரவனே, வள்ளலோ நீ? பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடப்பட்டவர் : ஆய்அண்டிரன் திணை : பாடண் திணை (ஒருவரின் சிறப்பியல்புகள் கூறல் ) துறை : பூவை நிலை (மனிதரைத் தேவரோடு உவமித்தல் ) —– காட்டில் மேய்ந்து பெரிய கொல்லையிலே தங்கும் ஆண் புல்வாய் மானின் நெற்றி மயிர் போலப் … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

பழுத்த மரம் நாடி ………

370. “பழுத்த மரம் நாடி ………” பாடியவர் : ஊன்பொதி பசுங்குடையார் பாடப்பட்டவர் : இளஞ்சேட்சென்னி திணை : வாகை துறை : மறக்களவழி (அரசனை விவசாயியுடன் ஒப்பிடல்) —– வள்ளல் தன்மை கொண்ட பெருமக்களைக்காணோம் வாழும் வழியை எண்ணி பனை நாரும் பனங்குருத்தும் எடுத்துக்கொண்டு உணவேதும் கிடைக்காத நிலையிலே பசியால் வாடும் என் பெரிய … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

நிலைத்து நிற்கும் புகழ்

359. நிலைத்து நிற்கும் புகழ் பாடியவர் : கரவட்டனார் பாடப்பட்டவர் : அந்துவன் கீரன் திணை : காஞ்சி துறை : பெருங்காஞ்சி —– எல்லாம் கெட்டுப்போன முட்கள் நிறைந்த இடம் இந்த சுடுகாடு கொடிய வாய் கொண்ட கோட்டான் குரலை உயர்த்தி தாழ்த்தி உருட்டிக் கத்துகிறது அதனுடன் பிணங்களைத்தின்னும் குள்ளநரிகள் அவற்றின் பற்களிலே தசைத்துண்டுகள் … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

போரால் ஊர் என்னாகுமோ?

345. போரால் ஊர் என்னாகுமோ? பாடியவர் :அண்டர் நடுங்கல்லினார் திணை :காஞ்சி துறை :மகட்பாற்காஞ்சி —– யானையின் பெருமூச்சாய்க் காற்றை வெளியிடும் கொல்லன் உலைத்துருத்தி அதன் வாய் இரும்புபோல் இரட்டைக் கதவுகள் பொருந்துமிடத்திலே பாதுகாப்பாய் இருக்கிறாள் இப்பெண் அவள் ஊரிலே அவளை மணமுடிக்க போரையே இயல்பாய்க் கொண்ட வீரர்கள் வந்து தங்குகிறார் அவர்கள் யானையைக் கட்டுவதால் … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

அறப்பண்பில்லாத அன்னை

336. அறப்பண்பில்லாத அன்னை பாடியவர் : பரணர் திணை : காஞ்சி (பகைவன் போருக்கு வர காஞ்சிப்பூச் சூடி தன்னிடத்தைக் காத்தல்) துறை : : மகட்பாற்காஞ்சி (பெண்கேட்கும் தலைவனோடு மாறுபடல்) —– பெண்கேட்ட வேந்தனோ பெருங்கோபக்காரன் பெண்ணின் தந்தையோ பெண் தரமறுக்கிறான் முகத்திலே உயர்ந்துள்ள தந்தங்களையுடை ய யானைகள் காவல் மரத்தில் கட்டப்படவில்லை வேந்தனின் வீரரும் … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

விளக்கு வெளிச்சம்

326.விளக்கு வெளிச்சம் பாடியவர் : தங்காற் பொற்கொல்லனார் திணை : வாகை (வாகைப் பூச்சூடி வெற்றி ஆரவாரம் செய்தல்) துறை : மூதின் முல்லை (மறக்குடி மகளிர் மாண்பு கூறுதல்) —– ஊரிலே உள்ள பழைய வேலி வேலியின் அடியில் பதுங்கி மெல்ல நடந்து இருளிலே வரும் காட்டுப்பூனை அக்காட்டுப்பூனையின் பகைக்கு அஞ்சிய இளம் பெட்டைக்கோழி … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

விருந்துண்டு பரிசும் பெறுவாய் பாணனே!

320. விருந்துண்டு பரிசும் பெறுவாய் பாணனே! பாடியவர் : வீரைவெளியனார் திணை : வாகை (வாகைப் பூச்சூடி வெற்றி ஆரவாரம் செய்தல்) துறை : வல்லாண் முல்லை (சீர் சால் வேந்தனின் சிறப்பைக் கூறுதல்) —– முன்னைக் கொடியும், முசுண்டைக் கொடியும் பம்மிப் படர்ந்த பந்தல் அப்பந்தலின் கீழ் பலாப்பழம் தொங்கும் நிழலிலே யானை வேட்டைக்காரன் ஆழ்ந்து … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

என் தலைவன் எறிந்த வேல்

308. என் தலைவன் எறிந்த வேல் பாடியவர் : கோவூர் கிழார் திணை : வாகை (வாகைப் பூச்சூடி வெற்றி ஆரவாரம் செய்தல்) துறை : மூதின் முல்லை (மறக்குடி மகளிரின் சினம் கூறுதல்) —– பொற்கம்பி போல் நரம்பும் மின்னலைப் போல் தோலும் வண்டிசை போல் நாதமும் கொண்ட சிறியதோர் யாழினை இசைத்து கேட்டோர் … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment