Monthly Archives: December 2015

யோபுவின் கதை – அதிகாரம் 21

யோபுவின் பதில்: நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். பிறகுதான் நீங்கள் எனக்கு ஆறுதல் கூறி உதவமுடியும். நான் பேசும்பொழுது பொறுமையாய் இருங்கள். நான் பேசியபிறகு என் கருத்துக்களுடன் நீங்கள் மாறுபடக்கூடும். என்னுடைய வாதம் மனிதனுடன் அல்ல. தேவனுடன். நான் ஏன் பொறுமை காக்கவேண்டும் என எனக்குப் புரியவில்லை. என்னைக் கவனமாகப்பாருங்கள். நீங்கள் ஆச்சரியப்பட்டு வாயைக் கையால் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 20

நாமாத்தியனான சோபாரின் பதில்: நீ சொன்னதெல்லாம் என்னைக் குழப்புகிறது. உனக்குப் பதில் கூற என் சிந்தனை தூண்டுகிறது. இதோ என் பதில்: என்னைக் குறை கூறினதைக் கேட்டேன். எனது புரிதல்கள் மூலம் உனக்கு நான் பதில் கூறுகிறேன். கெட்ட சிந்தனையாளனின் வெற்றிகள் வெற்றிகளே அல்ல. அதுபோல் இறை நம்பிக்கை இல்லாதவனின் மகிழ்ச்சியும் சொற்ப நேரம்தான். உலகம் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 19

யோபுவின் பதில்: நீங்கள் எதுவரையில் என் ஆன்மாவை நோகச்செய்து வார்த்தைகளால் என்னைக் கிழித்துப்போடுவீர்? பலமுறை என்மீது பழி சுமத்தி என்னை வேற்றாளாக்கிப் பார்க்க உங்களுக்கு வெட்கமாகயில்லையா? நான் தவறு செய்தேன் என்றால் அத்தவறு என்னுடையதாகவே இருந்துவிட்டுப்போகட்டும். நீங்கள் என்னை விரோதியாகப் பாவித்து என்னைக் கடிந்துகொள்ள வேண்டுமென நினைத்தால் தேவன்தான் என் நிலையிலிருந்து என்னைத் தூக்கியெறிந்து தன … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 18

சுவாவின் பில்தாத் மீண்டும் பேசுகிறான்……. உனது இந்தப் பேச்சுக்களை எப்பொழுது நிறுத்தப்போகிறாய்? நிலைமையை நன்றாக உணர்ந்துகொள். பின்னர் நாம் பேசலாம். எங்களை ஏன் மிருகங்களுக்கு ஒப்பாக நினைத்து அறிவற்றவர்களாக எண்ணுகிறாய்? உன் கோபத்தால் உன்னையே நீ நார் நாராகக் கிழித்துக் கொள்கிறாய். உனக்காக இந்தப் பூமி பாழாய்ப்போகுமோ? அல்லது பாறைகளைத்தான் அவற்றின் இடத்திலிருந்து நகர்த்திவிடமுடியுமா? கெட்டவனது … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment