Monthly Archives: October 2015

யோபுவின் கதை – அதிகாரம் 12

சோபாருக்கு யோபுவின் பதில்: சந்தேகமேயில்லை. உனக்குத்தான் எல்லாம் தெரியும் என எண்ணுகிறாய். உனக்குப்பின்னால் யாருமே நேர்மையாக இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறாய். நானும் உங்களைப்போல் புத்தியுள்ளவன்தான். நான் உங்களைவிடத் தாழ்ந்தவனில்லை.நீ சொன்னவையெல்லாம் எல்லாரும் அறிவார்கள். என் நண்பர்கள் யாவரும் நான் ஒரு முட்டாள் என நினைக்கிறார்கள். நான் தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன் . அவர் என் பிரார்த்தனைக்குப் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 11

அப்பொழுது நாமாத்தியம் என்னும் இடத்தைச்சார்ந்த சோபார் என்னும் நண்பன் சொல்கிறான்: உன் கணக்கற்ற கேள்விகளுக்கு யாராவது பதில் கூற வேண்டாமா? நீ எவ்வளவு பேசினாலும் தேவன் உன்னை மன்னிக்கமாட்டார். உனது வீம்பு வார்த்தைகளுக்கு மற்றவர் மௌனம் காப்பாரா? நீ தேவனைக் குறைகூறுவதை யாராவது தடுக்கவேண்டும். உனது வார்த்தைகள் உண்மையானவை என்றும் தேவனின் பார்வையிலே நீ தூய்மையானவன் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 10

நான் இந்த வாழ்க்கையை வெறுக்கிறேன். என்னை நானே நொந்துகொண்டு மிகவும் துயரத்தில் ஆழ்ந்து பேசுகிறேன். நான் தேவனை நோக்கிப் பின்வருமாறு கேட்பேன்: என்னைக் குற்றவாளியெனத் தீர்மானிக்க வேண்டாம். நீர் எதற்காக என்னோடு வழக்காடுகிறீர் என்று கூறுங்கள். என்னைத் துன்புறுத்துவது உமக்கு இன்பம் அளிக்கிறதா? நீர்தானே என்னைப் படைத்தீர். தீயவர்களின் யோசனைக்கு செவிசாய்ப்பது உமக்குத்தகுமோ? மனிதர்களைப் போலவா … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 9

பில்தாதுக்கு யோபுவின் பதில்: நீ சொல்வதெல்லாம் உண்மை என்று நான் அறிவேன். ஆனால் யாரையுமே சிறந்த நேர்மையாளன் என்று தேவன் ஒத்துக்கொள்ளமாட்டார். அதுபற்றி அவரிடம் வழக்காட முற்படுவோமானால் அவர் ஆயிரம் கேள்விகள் தொடுப்பார். நம்மால் அவைகளுக்குப் பதில் சொல்லமுடியாது. தேவன் சிறந்த ஞானமும் வலிமையுமிக்கவர். அவருடன் வழக்காடுவது என்பது நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒன்று. அவர்தம் வலிமையினால் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment