Category Archives: Science

“நியூரா லிங்க்”கின் டெலிபதி

மனித மூளைகளில் பதிக்கக்கூடிய கணினி இடைத்தளங்களை (Brain Computer Interface) உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நியூராலிங்க் நிறுவனம் கடந்த 28 ஜனவரி 2024ல் ஒரு நோயாளியின் மூளையில் அதன் முதல் இடைத்தளத்தைப் பதித்துள்ளது. “டெஸ்லா” மற்றும் “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் நியூரா லிங்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “டெலிபதி” யால் வெறும் … Continue reading

Posted in Science | Tagged , , , , | Leave a comment

வாயாடி எந்திரன் (Chatbot) 

சென்ற மாத கடைசியில் (ஜூன் 2022) கூகுள் நிறுவனம் வடிவமைத்த வாயாடி எந்திரன் புலனுணர்வோடு மனிதர்களைப்போல் சிந்திக்கிறது என்று வெளியான செய்தி செயற்கை நுண்ணுணர்வு தொழில்நுட்பத்தின் சாதகபாதகங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. ஆனால் கூகுள் நிறுவனம் இந்த செய்தியை முற்றிலும் ஆதாரமற்றது என நிராகரித்துவிட்டது. கூகுள் நிறுவனத்தில் முதுநிலை மென்பொறியாளராகப் பணிபுரிந்த Blake Lemoine என்பவர் அந்நிறுவனத்தின் LaMDA … Continue reading

Posted in Science | Tagged , , | Leave a comment

துடிக்கிறதே நெஞ்சம் …

விஞ்ஞானிகள் மனித இதயத்தின் ஒரு சிறு பகுதியை மிகச்சிறிய அளவில் உருவாக்கியுள்ளனர். அது துடிக்கிறது. கனடாவின்  டொராண்டோ மற்றும் மாண்ட்ரியால் பல்கலைக்கழகங்களிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு மில்லிமீட்டர் நீளமுள்ள நாளத்தை (vessel ) பின்னோக்குப்பொறியியல் (Reverse engineering) மூலம் வடிவமைத்துள்ளனர். இந்தக் குழாய் உயிரியல் குழாய் போலவே துடிக்கிறது. வளர்கருவின் (embryo) வெளியேற்று அறையிலுள்ள குழாய் போலவே இந்தக் குழாயும் திரவத்தை வெளிக்கொணர்கிறது … Continue reading

Posted in Other Translations, Science | Tagged , , | Leave a comment

கொரோனா தொற்று: மூன்றாவது தவணை தடுப்பூசி

பெருந்தொற்றின் நடுப்பகுதிகாலத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. அப்பொழுது தடுப்பூசிகள் உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தது. தற்போது உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் நோயிலிருந்து முழு பாதுகாப்பு பெற மூன்றாவது தடுப்பூசி (ஊக்கத்தடுப்பூசி) செலுத்திக்கொள்வது பற்றி சிந்திக்கவேண்டுமென துறை வல்லுநர்கள் சொல்கிறார்கள். இன்றைய நிலையில் இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் … Continue reading

Posted in Science | Tagged , | Leave a comment

மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி (Mosquirix)

6.10.21 அன்று உலக சுகாதார நிறுவனம் மலேரியாவுக்கான முதல் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கக் குழந்தைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பழமையான தொற்றுநோய்களிலேயே மிகவும் அழிவை ஏற்படுத்தக்கூடியது மலேரியா. ஆண்டுதோறும் 5 லட்சம் மக்களைக் காவு கொள்கிறது இந்நோய். இதில் பாதிக்குமேல் 5 வயதுக்கும் குறைந்தவர்கள். இவர்கள் அனைவருமே சகாராவின் தென்பகுதியிலுள்ள ஆப்பிரிக்கக் கண்டத்தைச் … Continue reading

Posted in Science | Tagged , | Leave a comment

உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம்.

மேற்கண்ட தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான தகவல்களைப் பார்க்கலாம். உலகின் 8.9 விழுக்காடு மனிதர்கள் பட்டினியில் வாழ்கின்றனர். வளர்ந்துவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க உணவு உற்பத்தி 2050ல் 56% முதல் 60% வரை அதிகரிக்கவேண்டும். ஆனால் வேளாண்மை 63 சதவீத பருவநிலைப் பேரிடர்களை உள்வாங்குகிறது. உலகின் 76 … Continue reading

Posted in Science | Tagged , , | Leave a comment

சர். ரொனால்டு ராஸின் கவிதை

கொசுவிலிருந்து மலேரியாவைப் பரப்பும் ஒட்டுண்ணியை 1897ம் ஆண்டு கண்டறிந்தவர் சர் ரொனால்டு ராஸ் (Ronald Ross). இவர் மருத்துவத்துக்கான நோபல் வென்றவர். இந்திய மருத்துவப்பணியில் 25 ஆண்டுகள் இருந்துள்ளார். இவர் கவிதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். பின்வரும் கவிதை அவர் ஒட்டுண்ணியைக் கண்டறிந்த பின்னர் தன் மனைவிக்கு, எழுதிய கவிதை. இன்று கருணை மிகுந்துஇறைவன் என் கைகளிலே … Continue reading

Posted in Science, Translated poems | Tagged , | Leave a comment

mRNA தொழில் நுட்பம்

கொரோனா மட்டுமல்ல mRNA தடுப்பூசிகள் இன்னும் சில வருடங்களில் புற்றுநோயையும் குணப்படுத்தக்கூடும். *** “கொரோனா” தான் முதல் படி. ‘ஃப்ளூ‘ முதல் ‘ஹெச்ஐவி ‘ வரை உள்ள பல நோய்களுக்கும் 150க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாரிக்க இந்தத்தொழில்நுட்பம் பயன்படப்போகிறது. *****அரசாங்கங்கள், பல்கலைக்கழகங்கள், மற்றும் முதலீட்டாளர்கள் mRNA தொழில் நுட்பத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே கை கழுவி … Continue reading

Posted in Science | Tagged , , , | Leave a comment

மோகத்தைக் கொன்றுவிடு

இதுவரை எழுதப்பட்ட அறிவியல் புனைவுகளிலேயே Fredric Brown எழுதிய ‘பதில்’ என்கிற ஒரு பக்கப் புனைவுதான் மிகச்சிறந்ததாக இருக்கக்கூடும். அந்தப் புனைவின் களத்தில் மனிதன் இயற்கையை ஓரளவு அடக்கி, விண்மீன் மண்டலத்தை வெல்கிறான். விண்மீன் மண்டலங்களுக்கிடையே உள்ள அறிவாற்றல் அனைத்தும் அடங்கிய தகவல் தளத்தைக் கொண்ட கோள்களுக்கிடையே இருக்கும் இணையத்தில் இணைக்கப்பட்ட ராட்சத சூப்பர் கணினி … Continue reading

Posted in Other Translations, Science | Tagged , | Leave a comment

பழத்தில் மொய்க்கும் ஈயே !

பழத்தில் மொய்க்கும் ஈயே ! உன்னை எண்ணி மகிழ்கிறேன். — மைக்கேல் ரோஷ்பாஷ் (Michael Rosbash) இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானிகளான ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ரோஷ்பாஷ், மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் மூவரும் பழங்களில் மொய்க்கும் சிறு ஈயின் உயிர்ச்சக்கரத்தை (biological clock – Circadian rhythm) ஆராய்ந்து … Continue reading

Posted in Science | Tagged , , , | Leave a comment