யோபுவின் கதை – அதிகாரம் 41

தேவனின் பேச்சு தொடர்கிறது………

யோபுவே!

உன்னால் லெவியாதான் என்னும் மாபெரும் கடல் விலங்கைத் தூண்டிலைக்கொண்டு இழுக்க முடியுமா? அதற்கு உன்னால் மூக்கணாங்கயிறு போட முடியுமா? அதன் தாடையில் கொக்கியைச் செருகமுடியுமா? அது உன்னிடம் கருணையை எதிர்பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருக்கும் என நினைக்கிறாயா? அது உன்னிடம் மென்மையான சொற்களால் பேசுமோ? உன்னோடு அது ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளுமா? அதை உனது வாழ்நாள் அடிமையாக வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு செல்லப் பறவையுடன் விளையாடுவதைப்போல் அதனுடன் விளையாடி உன் இளைய பெண்களுக்காக பிடி கயிற்றில் அதைக் கட்ட முடியுமா? உன் தோழர்கள் அதைப் பிடிக்க முயன்று அதனை வணிகர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பாரோ? அதன் உடம்பிலும் தலையிலும் குத்தீட்டிகளைப் பாய்ச்ச முடியுமா? நீ அதைத் தொட முயன்றாலே அது உன்னைத் திருப்பித்தாக்கும். பிறகு நீ உணர்வாய். அதை ஒருபோதும் தொடக்கூடாதென்று. யாராலுமே அதனை அடக்க முடியாது. அதை வெறுமனே பார்ப்பதே அச்சம் தரக்கூடியது. அதை யாரும் எழுப்பத்துணியமாட்டார்கள்.. அப்படியிருக்க என்னை எதிர்த்து நிற்பவர் யார்?

நான் யாருக்குக் கடன் பட்டிருக்கிறேன்? வானத்திலும் பூமியிலும் இருப்பவையெல்லாம் எனக்கே சொந்தம், இப்பொழுது நான் லெவியாதானின் உறுப்புகளைப் பற்றிப் பேசப்போகிறேன். அதன் வலிமையையும் அந்த உடலின் நேர்த்தியையும் பற்றிச் சொல்லப்போகிறேன். அதன் தோலை யாரால் கிழிக்க முடியும்? யாரால் அதற்கு கடிவாளம் போட முடியும்? அதன் தாடைகளைத் திறக்க முடிந்தவர் யார்? அதன் வாய் கோரமான பற்களால் நிறைந்திருக்கும். அதன் முதுகிலே வரிசையாக உள்ள கூரான செதிள்கள் நெருக்கமாயிருந்து அழகூட்டுகின்றன. அந்தச் செதிள்களுக்கிடையில் காற்று கூட நுழைய முடியாது. அவை ஒன்றோடொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு உறுதியாய் உள்ளன. அது செறுமும்போது தீப்பொறிகள் பறக்கும். அதன் கண்கள் காலை நேர வெளிச்சம் போல் ஜொலிக்கும். அதன் வாயிலிருந்து தீ புறப்பட்டுத் தீப்பொறிகள் சிதறும். கொதிக்கின்ற கொப்பரையின் அடியில் புற்கள் தீப்பற்றி எரிகையில் கிளம்பும் புகைபோல அதன் நாசிகளிலிருந்து புகைச்சுருள்கள் கிளம்பும். அதன் மூச்சு கரியை எரிய வைக்கும். அதன் கழுத்து உறுதியானது. அதனருகே செல்ல யாரும் அஞ்சுவார்கள். அதன் தசைகள் கெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை அசைப்பது கடினம். அதன் மார்பு கல்லைப்போல் உறுதியானது. அது எழும்போது மிகுந்த பலசாலிகள்கூட அஞ்சுவர். மூர்க்கமாக அது வருகையில் அவர்கள் பயந்து ஓடுவர். அதைத் தாக்குகின்றவனின் வாள்,ஈட்டி,அம்பு,மற்றும் எறிவேல் எதுவும் அதன் முன் நிற்காது. அது இரும்பை வைக்கோலைப் போலவும்,வெண்கலத்தை உளுத்துப்போன கட்டையைப் போலவும் பாவிக்கும். அம்புகளால் அதைத் துரத்த முடியாது. கவண்கற்களையும் ,எறிதடிகளையும் அது துரும்பாய் மதிக்கும். எறிவேல்களின் சீற்றத்தைக்கண்டு அது ஏளனமாய்ச் சிரிக்கும். அதன் உடம்பின் அடியில் உள்ள தோல் உடைந்த, கூர்மையான மண்பாண்டத்துண்டுகளைப்போல் இருக்கும். அதனால் அது சேற்றில் அடையாளமிட்டு ஓடும். பானை பொங்குவதுபோல் கடலைப் பொங்கச்செய்யும். அதைத் தைலம் கலக்குவதுபோல் கலக்கும். அது நீரைக் கிழித்துச்செல்லும் பாதைக்குப்பின்னால் வெளிச்சச்சுவடுகளை உண்டாக்கி வெண்மையான நுரையைத் தள்ளிச்செல்லும். பூமியின் மேல் அதற்கு ஒப்பானது ஏதுமில்லை. அது எதற்கும் அஞ்சாது. அகந்தை கொண்டவர்களை அது துச்சமாய் மதிக்கும். அது அவர்களை அடக்கியாளும்.

தொடரும்………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s