யோபுவின் கதை – அதிகாரம் 37

எலிஹூ தொடர்கிறார்….

இடியோசையைக் கேட்கும்போது என் இதயம் நடுங்குகிறது. கேளுங்கள்! இடியாய் முழங்குகிற அவரது குரலைக் கேளுங்கள். அவர் மின்னலை வானத்தில் பாய்ச்சுகிறார். அந்த மின்னொளி பூமியின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்குப் பயணிக்கிறது. அடுத்து வருகிறது அவரின் இடிமுழக்கம். அவரது கம்பீரக்குரல் இடிபோல் முழங்குகிறது. அவரது குரல் காற்றில் நிறைகையில் அதைத் தவிர்க்கவே முடியாது. தேவனின் குரல் ஆச்சரியமான வழிகளிலே முழங்குகிறது. அவர் செய்யும் உன்னதச் செயல்களை நாம் என்றுமே முழுதும் புரிந்துகொள்ள முடியாது. பனியையும் மழையையும் பொழியப் பணிக்கிறார். மக்கள் தாங்கள் ஈடுபட்டிருக்கும் வேலைகளை நிறுத்தி தனது செயல்பாடுகளைக் கவனிக்க வைக்கிறார். அந்த சமயத்தில் காட்டு விலங்குகள் தங்கள் குகைகளில் தஞ்சமடையும். தெற்கிலிருந்து சூறாவளியும், வடக்கிலிருந்து குளிர்காற்றும் வரும். அவரது மூச்சினால் உறைபனி உண்டாகிறது. அப்போது நீரின் மேற்பரப்பும் உறைந்து போகிறது. மேகங்களுக்குக் குளிர்ச்சியூட்டி அவைகளின் மூலம் மின்னலைப் பரப்புகிறார். பூமிக்கு மேலே மேகங்களை வலம் வரச்செய்கிறார். அவைகளெல்லாம் அவர் கட்டளைப்படி இயங்குகின்றன. மக்களை தண்டிக்கவும் மழையைப் பொழியச்செய்து தன் அன்பைத் தெரிவிக்கவும் மேகங்களை அவர் பணிக்கிறார்.

யோபுவே! நான் சொல்வதைக் கேளுங்கள். தேவனின் ஆச்சரியமான செயல்களைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் மேகங்களை எப்படிக் கட்டுப்படுத்துகிறார் என்பதை நீர் அறிவீரா? அவர் மின்னலை ஒளிரச்செய்யும் விதம் உமக்குப் புரியுமா? வானத்தில் மேகங்கள் நிலைத்திருக்கும் விந்தையை நீர் அறிவீரா? முழுமையான ஞானவானாகிய தேவனின் அற்புதச்செயல்கள் உமக்குப் புரியுமா? தேவன் பூமியைத் தென்றலால் நிறைக்கும்போதுகூட உன் ஆடைகள் எவ்வாறு வெம்மையாய் இருக்கின்றன என்பதை அறிவீரா? வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் உறுதி வாய்ந்த வான மண்டலத்தை அவரோடிருந்து நீர் பரப்பினீரா?

யோபுவே! தேவனிடம் நாம் சொல்லவேண்டியது என்னவென்று கூறும். நமது மனம் இருளால் நிறைந்திருப்பதால் நாம் சொல்ல நினைப்பது தெளிவாக இல்லை. நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது அவர் முன் சொல்லமுடியுமா? அப்படி ஒருவன் பேசத்துணிந்தால் அவன் அழிந்துபோவானல்லவோ? சூரியனை நேருக்குநேர் யாராலும் பார்க்கமுடியாது. காற்று வானவெளியைத் தூய்மையாக்கியபின் சூரியனின் கதிர்கள் மேலும் பிரகாசமடைகின்றன.

வடக்கிலிருந்து தேவன் பேரெழிலுடன் தோன்றுகிறார். அவர் கம்பீரமாக வருகிறார். மகாவல்லவரான தேவன் மேன்மையானவர். அவர் உயர்ந்த அதிகார பீடத்தில் இருக்கிறார். அவர் எது செய்தாலும் அது நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்கும். அவர் மக்களை ஒடுக்கமாட்டார். அதனால்தான் அவரை மக்கள் மதித்து வணங்குகிறார்கள். தான் ஞானி என்று நினைத்துக்கொண்டிருப்பவனை அவர் ஒருபோதும் மதிப்பதில்லை.

தொடரும்……..

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s