யோபுவின் கதை : ஒரு பின்னுரை

பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள ‘யோபுவின் கதை’ மெய்யறிவு இலக்கிய (Wisdom literature) வகையைச் சார்ந்தது எனலாம். இறைவனை உணர்தல் இதன் இலக்கு. பைபிளில் ‘ யோபுவின் கதை ‘ மிகவும் கடினமான பகுதி என்று கருதப்படுகிறது. ஆனால் கிறிஸ்தவர் அல்லாதவரையும் இந்தக் கதை மிகவும் கவர்ந்திருக்கிறது. இந்தக் கவர்ச்சிக்கு முக்கியமான காரணம் இப்பகுதி முழுவதும் மனிதனின் துன்பங்களைப் பற்றியும் அதிலும் அப்பாவிகளை இறைவன் துன்பத்திலாழ்த்துவதைப் பற்றியும் பேசுகிறது. மனித துயரங்களின் பிரச்சினையை தத்துவ ரீதியாக விசாரணை செய்கிறது இந்தப் பகுதி. இந்த இலக்கியம் மனிதனின் செயல்களையும் சிந்தனையையும் பற்றி நிறையவே விளக்குகிறது. யோபு ஆரம்பம் முதலே தன்னிலை ஆளுமையாலும் (ego sense) ஆன்ம ஆணவம் அல்லது பக்தி சார்ந்த கர்வத்தினாலும் (spiritual arrogance) பீடிக்கப்பட்டிருக்கிறான். ஆனாலும் அவன் எந்த நிலையிலும் இறைவனை நிந்திக்கவேயில்லை. அதே சமயம் இறைவனின் மீதான நம்பிக்கையையும் இழக்கவில்லை. தன்னுடைய துயரங்களுக்கான காரணம் கேட்டு இறைவனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறான். தன்னிலை ஆளுமை என்பது ஆதி பாவம் (original sin) என்பதை அவன் இறுதியில் உணர்ந்து இறைவனிடம் முழுமையாக சரண் அடைந்து கடைத்தேற்றம் பெறுகிறான். மூன்றாவது அதிகாரத்தில் நாம் கண்ட யோபுவும் 42 ஆம் அதிகாரத்தில் நாம் காணும் யோபுவும் முற்றிலும் மாறுபட்டவர்கள். மூன்றாம் அதிகாரத்தில் ஆழ்ந்த மனக் கலக்கத்தில் (neurosis) இருந்த யோபு 42 ஆம் அதிகாரத்தில் இயல்பான நல்லறிவு நிலைக்குத் (sanity) திரும்புகிறான்.

இந்த நெடுந்தொடரை ‘பெரு’ (PERU) நாட்டின் இறையியலாளரும் டொமினிக்கன் சமயகுருவுமான Gustavo Gutierrez Merino அவர்கள் யோபுவின் கதை பற்றிக் கூறிய கருத்துடன் நிறைவு செய்கிறேன்.

“The problem of speaking correctly about God amid unjust suffering is not limited to the case of Job, but is a challenge to every believer. This is especially true of situations in which the suffering reaches massive proportions. The book of Job is a literary construct, but it could have been written only by someone who had suffered in flesh and spirit. Job’s protesting lament bears the seal of personal experience; so do his confrontation with God and his final surrender and new certainty. The work is written with a faith that has been drenched in tears and reddened by blood. The question of “speaking ill” and “speaking well” of God is thus a central one in the book. The author of Book of Job bitterly disputes the traditional doctrine of temporal retribution.”

———

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s