யோபுவின் கதை – அதிகாரம் 42

தேவனுக்கு யோபுவின் பதில்……

தேவனே! நீர் சர்வ வல்லவரென்று நானறிவேன். நீங்கள் திட்டமிட்டு செய்யவிருக்கும் செயல்களை யாரால் தடுக்கமுடியும். எனது திட்டங்களில் குற்றம் காண நீ யார் என என்னைக் கேட்டீர்கள். எனவேதான் நான் என்னால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதவற்றைப் பற்றியும், தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்களைப் பற்றியும் பேசினேன். நான் பேசுகிறேன் கவனி என்றும், நான் சில கேள்விகள் கேட்பேன் அவற்றுக்கு நீ பதில் சொல்லவேண்டுமெனவும் கட்டளையிட்டீர்கள். என் செவிகளால் உமது மேலான குணங்களைப் பற்றிக் கேட்டேன். இப்பொழுதோ என் கண்கள் உங்களை நேரில் காணும் அற்புத வாய்ப்பைப் பெற்றன. நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். உங்களைப்பற்றி பேசியதற்காகத்தான் நான் குப்பையிலும் சாம்பலிலும் கிடந்தது புரள்கிறேன். என்னை மன்னித்தருள்வீர்.

கதையின் முடிவு

தேவன் யோபுவிடம் பேசி முடித்தபின் தேமானியனான எலிபாஸிடம் பேசினார்:

“நான் உன்மீதும் உனது இரு நண்பர்கள் மீதும் கோபமாயிருக்கிறேன். என்னைப் பற்றிய உண்மைகளை யோபுவைப்போல் நிதானமாக நீங்கள் கூறவில்லை. எனவே நீங்கள் ஏழு எருதுகளுடனும் ஏழு செம்மறியாடுகளுடனும் யோபுவிடம் சென்று உங்களுக்காக தகனபலி கொடுங்கள். என் பக்தனாகிய யோபுவும் உங்களுக்காகப் பிரார்த்திப்பான். நானும் அவனது பிரார்த்தனையை ஏற்பேன். நீங்கள் அறியாமல் கூறியவற்றுக்காக நானும் உங்களைத் தண்டிக்காமல் மன்னிப்பேன்.

தேமானியனான எலிபாஸ்,சுஹைதியனான பில்தாத்,மற்றும் நாமதியனான சோபார் மூவரும் தேவனின் கட்டளையை நிறைவேற்றினார்கள்.. தேவனும் யோபுவின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டார். தன் நண்பர்களுக்காக யோபு பிரார்த்தனை செய்த பின்னால் தேவன் யோபுவை மீண்டும் பழைய நிலையை அடைய வைத்தார். யோபுவுக்கு முன்பிருந்த செல்வத்தைப்போல் இருமடங்கு கொடுத்தருளினார்.

யோபுவின் சகோதர சகோதரிகள் மற்றும் யோபுவை முன்பு அறிந்த அனைவரும் அவனைப் பார்க்க வந்தனர். யோபுவுடன் அவர்கள் விருந்துண்டனர். அவர்கள் அனைவருமே யோபுவின்மேல் அக்கறை மிகக் கொண்டனர். தேவன் யோபுவுக்குத் தந்த துன்பங்களுக்காக அவர்களெல்லாம் தேறுதல் வார்த்தை கூறினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் யோபுவுக்கு வெள்ளி நாணயமும் தங்க மோதிரமும் கொடுத்தார்கள். யோபுவுடைய வாழ்க்கையின் முற்பகுதியைக் காட்டிலும் பிற்பகுதியில் தேவன் அவனுக்கு மிகுந்த நற்பேறுகளை நல்கினார். தேவன் யோபுவுக்கு பதினாலாயிரம் ஆடுகளையும் ஆறாயிரம் ஒட்டகங்களையும் கொடுத்தார். மேலும் ஆயிரம் ஜோடி எருதுகளும் பத்தாயிரம் கழுதைகளும் கொடுத்தார். யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர். மூத்த மகளுக்கு ஜெமிமா என்று பெயர். இரண்டாவது மகள் கேசையா. மூன்றாவது மகளின் பெயர் கெரன் ஹப்பூக். நாட்டிலிருந்த பெண்களிலேயே யோபுவின் பெண்கள் மிகுந்த அழகு படைத்தவர்கள். மகன்களுக்குக் கொடுத்தது போலவே மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தான். யோபு 140 ஆண்டுகள் வாழ்ந்து நான்கு தலைமுறை பிள்ளைகளைக்கண்டு மகிழ்ந்திருந்து மரித்தான் ..

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s