பெரிய திருவந்தாதி-9

2665

வளம் கொழிக்கும் பாற்கடலில்
பள்ளி கொண்ட பகவான்
தன் அருள் பெற
இவன் அருகதையற்றவன்
என நினைப்பதில்லை
துணையேதும் அற்றவன் என்றெண்ணி
பகலிரவு பாராது
எப்போதும்
தன் வலிமையினால்
என்னை ஆட்கொள்வார்.

2666
அன்றொருநாள்
மான் வடிவாய் வந்த மாரீசனைத்
தொடர்ந்து சென்று அழித்தார்
இராமபிரான்
அழகிய மோதிரமணிந்த கைகள் அந்த ராமனுக்கு
அவனைத்தெரிந்து கொள்ளாதபெரும் பாவி நான்
உணர்வின்றி,
அறிவிழந்து,
கடந்த காலங்களிலெல்லாம்
அவனை வணங்காது
வீணே கழித்துவிட்டேன் பொழுதை

2667

ஓ மனமே!
செய்யத்தகாதவற்றைச் செய்ய
ஆர்வமாயிருக்கிறாயே !
அஞ்சுகிறேன் உன்னை எண்ணி
மல்லர்களை மாய்த்த
மாயக்கண்ணனை வாழ்த்துவாய்
அதுவே நீ கடைத்தேறும் வழி
அவ்வளவே நான் சொல்வேன்
மனமே!
நான் சொல்வதைக்கேள்
சொல்வதைக் கேட்காமல்
அவனை மறந்து
கெட்டுப்போவதானால் போ!

2668

விதியில் சிக்குண்ட என் மனமே!
எம்பெருமானின் திருப்பாதங்களிலே
மலர் தூவி
தலை வணங்கி
இரு கை கூப்பித் தொழுவாய் என்றேன்
கேட்கவில்லை என் சொல்லை நீ
நீ எங்கே எங்கே என
அவனைத்தேடி அலையாமல்
வாழ முடியுமென்றால்
வாழ்ந்துகொள்.

2669

திருப்பாற்கடல்
பொங்கிப்பெருகும் அலைகள்
அங்கே
கண்ணனின் கள்ளத்தூக்கம்
மேகங்கள்
அவன் மேனி நிறம் பெற
என்ன தவம் செய்தனவோ!
விரிந்த இந்த விண்ணிலே
எங்கு அவை தவம் செய்தனவோ?

2670

மழைமேக மேனியான்
கை விட்டு விலகாச் சக்கரம்
உலகை வயிற்றிலே காத்தவன்
பாம்பணையில் துயில்பவன்
இப்பெருமானின்
பெருமைகளைப்பேசினாலே
சூழ்கின்ற பாவங்கள் விலகிவிடும்
இவன் புகழ் பாடாதார் துயரம்
எப்படித்தான் தீருமோ?

2671

மனமே!
இப்போதும்
இனி வாழப்போகும்
சில காலத்திலும்
நம் தீய பாவங்கள் தீர
எப்போதும் சக்கரமேந்திய
அவன் திருப்பாதங்களைப்
போற்றி வணங்குவாய்
எல்லாக் காலங்களிலும்
உனக்கு நான் சொல்லும்
அறிவுரை இதுவே!

 

பெரிய திருவந்தாதி முற்றிற்று

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s