பெரிய திருவந்தாதி-3

2605.

அன்று
மன்னன் மகாபலியால்
உலகம் நெருக்குண்டது
அப்போது
பூமியின் பரப்பும்
பூமியைச்சூழ்ந்த நீரின் பரப்பும்
மறையும் வண்ணம்
கார்வண்ணன்
திரிவிக்ரமனாய்த்
தன் திருவடிகளால்
உலகை அடக்கினான்
அந்தத் திருப்பாதங்கள்
என் நெஞ்சில் நெருக்குண்டன
நான்
கொடிய நரகத்தில் விழாவண்ணம் காக்கவே
அவன் திருப்பாதங்கள்
என் நெஞ்சில் பதிந்தனவோ?

2606.

திருமால் என் நெஞ்சில் குடி புகுந்தார்
அன்றே அங்கிருந்த பாவங்கள் அகன்றன
முன்பு
அவை ஆணவத்தால் ஆணையிட்டு
எனக்குத் துன்பம் மிக இழைத்தன
ஆனால்
பரந்தாமன் வந்து தங்கிய பின்
அவை தங்குமிடம் தேடி
கால் வலிக்க ஓடி
அலைந்து
களைத்து
கத்துகின்றன.

2607.

மனமே!
உயிர் போகும் வேளையிலே
எமனின் தூதுவர்கள்
நம்மைப்பிடித்திழுக்க
தளர்ந்து நாம் துடிக்க
நாய்களை ஏவுவார்
ஆனால்
அவர்களிடம் நாம் சிக்கித்தவிக்காமல்
பகவான்
நம்மைக்காத்தருள்வான்
அருளினும்
அருளாவிடினும்
அனைத்துயிர்க்கும்
அவனே தாய்
அவனே தந்தை
இவ்வுண்மையை உணராவிடில்
தளர்ச்சி நீ அடைவாய்
உண்மையை உணர்ந்தாலோ
உனக்கில்லை தளர்ச்சி.

2608.

இறைவன்
தானே தோன்றியவன்
ஒப்பற்றவன் அவன்
உலகில்….
எல்லாப்பொருள்களிலும்
மேவியிருப்பவன்
தன் காத்தல் தொழிலிலே
அவன் சிறிதே தளர்ந்தாலும்
உலகம்
தலைகீழ் ஆகிவிடும்
அந்த விபரீதத்தை
அவனே சரி செய்வான்
அவன் ஆற்றலை
யார் அளவிடமுடியும்?

2609.

யாரும் எதுவும் செய்து கொள்ளட்டும்
பரந்த இந்த உலகத்தைத்
திருத்தவா முடியும் நம்மால்
என்னைப்பொருத்தவரை
என் துன்பம் நீக்கிக்காப்பவன்
வானவர் தலைவன்
அந்தக் கண்ணபிரான்.
அவனால்தான்
என் துன்பங்கள் தொலைந்தன.

2610.

பெருமானுக்கு
இருள் போன்ற கரிய திருமேனி
அவன் கொடுத்த அருள் என்னும் தடியால்
என் வலிய பாவங்களை
அடித்துத் துரத்தி
அவை
காட்டிலும்
மலையிலும் புகுந்துகொள்ள
நானும்
என் மனமும்
ஒன்றாகச்செயல்பட்டோம்.

2611.

நெடுமாலே!
வீரக்கழலணிந்த
நின் திருவடிகள் நிமிர்த்தி
உலகை அளந்தாயே
அந்த மகிழ்ச்சி
இப்போதும் உன் உள்ளத்தில் உள்ளதோ?
அன்றியும்
உன் திருமுடியால்
வானத்தை அளந்தாய்
திருவடியால் அளந்ததா?
திருமுடியால் அளந்ததா?
உன் பெரு மகிழ்ச்சிக்கு
எது காரணம்?
நானறியேன்!

2612.

எந்தக்காலத்திலும்
புறக்கண்களால்
அவன் உருவைக்காண முடிவதில்லை
அகக்கண்ணால் உணர்ந்து தரிசித்தால்
சக்கரப்படை கொண்ட
கார்வண்ணன் உருவத்தைப்
புறக்கண்களாலும் காணலாம்
இப்போது
காணமுடியவில்லையே என்றால்
அகக்கண் திறக்கவில்லை
காரணம் அதுவே.

2613.

துளசி மாலையணிந்த
எம்பெருமானைத்
தன் முயற்சியால்
யாரும்
தெரிந்து கொள்ள முடியாது
ஆனாலும்…
அவன் தன் அடியார்கள் காட்டும்
அன்பின் ஆழத்திற்கு ஏற்றாற்போல்
எளியனாகி காட்சி தருவான்
ஆதலாலே…
என் அன்புக்கு எளியனாகி
எனக்கு காட்சி தருகிறான்.

2614.

என் நெஞ்சிலே
பாவங்கள் தங்க
இனி
இடமில்லை
என் நெஞ்சமெல்லாம்
அவன் எண்ணம் நிறைந்துவிட்டது
எந்நேரமும்
திருமாலின் புகழ் பாடுவதால்
நெஞ்சில் வேறு இடமில்லை
ஆதலால்
தீவினைகள் எல்லாம்
தங்க இடமின்றித் திணறாமல்
வெளியேறுவதே நல்லது.

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s