நிறைவான ஓர் பரிசு

இந்த பூமி நமது
நாம் அதற்குரியவர் ஆகுமுன்பே.
நாம் அதற்குரியவராகி
நூறாண்டுகளுக்கு முன்பே
நாம் அதன் மக்கள்
மாசாச்சுசெட்ஸும் வர்ஜீனியாவும் நமதே
ஆனால்
நாமெல்லாம் இங்கிலாந்துக்குரியவர்கள்
இன்னும் காலனியாட்கள்
இந்த பூமி நம்மிடம் இருந்தாலும்
அது நமதென்ற எண்ணமில்லை நம்மிடம்
நாம் வெளிப்படுத்தாத ஏதோ ஒன்று
நம்மை பலவீனப்படுத்தியது
வாழும் பூமியுடன் ஒன்றவில்லை நம் உணர்வுகள்
நம் பலவீனம் அதுவென அறிந்தோம்
உடனே
இந்த பூமிக்கு நம்மை
முழுமையாய் அர்ப்பணித்தோம்.
விமோசனம் பிறந்தது
சரணாகதியில்
(போரின் விளைவுகள் பரிசின் பட்டயம்)
மேற்கை நோக்கி நகர்கிறோம் நாங்கள்
இந்த நாடு முன்பிருந்தது போலவே
அதன் ஆதிப்பண்புகளோடும்
அகத்தில் தூய்மையோடும் இருக்கும்
இனி வரும் காலங்களிலும்.


Robert Frostன்  ‘The Gift Outright‘ (1941) என்கிற சிறு கவிதை மிகப் பிரபலமானது. தேசப் பற்றைப் பற்றிய இக்கவிதை 1961 ஜனவரி மாதம் 20 ம் நாள் ஜான் எப் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது தொலைக்காட்சியில் ப்ராஸ்ட்டால் வாசிக்கப்பட்டது.அதன் எளிய தமிழ் வடிவம்.

Advertisements
This entry was posted in Translated poems and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s