இயற்கைக்காட்சி

சிறந்த பழைய ஓவியர்களின்
இயற்கைக்காட்சிகளில்
மரங்களின் வேர்கள்
தைல ஓவியத்துக்குக் கீழே
பாதையோ
சந்தேகமின்றி அதன் முடிவை அடைகிறது.
கையெழுத்துக்குப் பதிலாக
கண்ணைக்கவரும் புல்லின் இதழ்
மயங்கவைக்கும் மாலை நேரம்
மணி ஐந்து
மே மாதம் மென்மையாக
ஆனால் உறுதியாகச் சிறை பிடிக்கப்பட்டது
எனவே
நானும் நிலை கொண்டு விட்டேன்
ஏன்?
ஆம் அன்பே
அந்த ஆஷ் மரத்துக்குக் கீழே இருப்பது
நான்தான்.

சற்றே பார்
எவ்வளவு தூரம் உன்னை விட்டு வந்துவிட்டேன்
என் வெள்ளைத் தொப்பியைப்பார்
என் மஞ்சள் உடையையும் பார்
ஓவியத்திலிருந்து
என் கூடை விழுந்து விடாமல்
நான் கெட்டியாகப்பிடித்திருப்பதைப் பார்
மற்றவர் விதியுடன் வீம்பு நடை போட்டு
வாழ்க்கையின் புதிர்களிலிருந்து எனக்கு சற்றே ஓய்வு

நீ அழைத்தாலும் எனக்குக் கேட்காது
கேட்டாலும் நான் திரும்பமாட்டேன்
அப்படியே திரும்பினாலும்
உனது முகம்
என்னைப் பொருத்தவரை
ஒரு வேற்றாளின் முகம்தான்.

ஆறு மைல் சுற்றளவில் உள்ள
இவ்வுலகை நானறிவேன்
ஒவ்வொரு வலிக்கும்
மூலிகைகள் நானறிவேன்
மந்திரமும் நானறிவேன்
கடவுள் இன்னமும்
என் தலைக்குமேல் பார்த்துக்கொண்டிருக்கிறார்
நான் பிரார்த்திக்கிறேன்
திடீரென நான் சாகக்கூடாதென்று

போர் ஒரு தண்டனை
அமைதிதான் பரிசு
தலை குனியவைக்கும் கனவுகள்
சாத்தானிடமிருந்து வருபவை
என் ஆன்மா
பிளம் பழத்தின் விதையைப்போல் தெளிவானது

இதயத்தின் ஆட்டங்களை நான் அறியேன்
என் குழந்தைகளின் தகப்பனை
நிர்வாணமாய்ப் பார்த்ததில்லை நான்
சாலமனின் அற்புதப்பாட்டு
அதன் சிக்கலான மையொற்றிய முதல் பிரதியை
சந்தேகிக்கமாட்டேன் நான்
நான் சொல்லவேண்டியவையெல்லாம்
தயாராய் இருக்கிறது
சொற்களின் தொடர்களாய்
ஒருபோதும்
அவநம்பிக்கையை விதைக்க மாட்டேன் நான்
ஏனெனில்
அது என்னுடையதல்ல
என் பாதுகாப்பில் இருக்க மட்டுமே
அது கொடுக்கப்பட்டது.

எனது வழியை நீ மறித்தாலும்
என் முகத்தை நீ வெறித்தாலும்
நான் உன்னைக் கடந்து செல்வேன்
மயிரிழையிலும் மெல்லிய இடைவெளியினூடே.

வலது புறத்தில் என் வீடு
படிகள் மற்றும் நுழைவாயில் என
அதன் எல்லாப் பக்கங்களையும் நானறிவேன்
அதன் பின்னால் வாழ்க்கை நகர்கிறது
தீட்டப்படாத ஓவியமாய்
இருக்கையில் குதிக்கிறது பூனை
சாம்பல் நிறக் குவளையில்
சூரியனின் மென்கீற்று
மேசையில் ஒரு மெலிந்த மனிதன்
கடிகாரத்தைச் சரிசெய்கிறான்.


Photo: Wikipedia

 

1996 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற போலந்து கவிஞர்வி ஸ்லாவா சிம்பார்ஸ்கா (Wislawa Szymborska) வின் பிறந்த தினம் ஜூலை 2 1923.  LANDSCAPE  என்கிற அவரது கவிதையின் தமிழ் வடிவம். Photo: Wikipedia.

Advertisements
This entry was posted in Translated poems and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s