யோபுவின் கதை – அதிகாரம் 13

ஸோபாருக்கு யோபுவின் பதில் தொடர்கிறது:

நான் இறைவனிடம் பேசினால் நலமென எண்ணுகிறேன். அவரிடம் நியாயம் கேட்டு வழக்காட விரும்புகிறேன். நீங்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறீர்கள். நோயாளியைக் குணப்படுத்தத் தெரியாத மருத்துவர் போன்றவர் நீங்கள். நீங்கள் பேசாமலிருந்தால் நன்றாயிருக்கும். அதுதான் புத்திசாலித்தனமும்கூட. நான் கூறுகின்றவற்றைக் கவனமாகக்கேளுங்கள்.

இறைவனின் சார்பாக நீங்கள் பேசவேண்டாம். அவர் சார்பாகப் பேசுவதாக எண்ணி உண்மையற்றவற்றைக் கூறுகின்றீர். அவர் சார்பாக நீங்கள் பேசும்போது அதில் நியாயம் தொனிக்க வேண்டும். அவரது எண்ண ஓட்டங்களை நீங்கள் எனக்கு உண்மையிலேயே விவரிக்க முயலுகிறீர்கள் என்பதை நான் நம்பவில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர் சோதிக்கக்கூடும். நீங்கள் செய்த தவறான காரியங்களை அவர் அறிவார். மறைவாகச் செய்த தீமையானாலும் அவர் அதற்கு தண்டனை தருவது உறுதி. அவரது சக்தி உங்களை நடுங்க வைக்கும். அவரைக் கண்டு அஞ்சுவீர்கள். உங்கள் அடையாளங்கள் எல்லாம் சாம்பலுக்குச்சமம். எனவே அமைதியாயிருந்து என்னைப் பேசவிடுங்கள். வருவது வரட்டும். எது நடந்தாலும் அது என் தவறுதான். என்றாலும் நான் உண்மையில் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்லவேண்டும். என்னை அவர் கொன்று போட்டாலும் நான் அவரை நம்புவேன். ஆனாலும் அவர் ஏன் என்னைக் கொல்லக்கூடாது என்பதற்கான காரணங்களை அவருக்கு விவரிப்பேன்.

கெட்ட மனிதன் எவனும் தேவனுடன் பேசத் துணியமாட்டான். எனவே நான் அவரிடம் பேசினால் அவர் என்னை இரட்சிப்பார். நான் பேசுகையில் அதனைக் கவனமாகக் கேளுங்கள். நான் சொல்லவேண்டியவற்றைத் தயார் செய்துவிட்டேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று தெரியும். நான் தவறு செய்தேன் என்று யாரும் சொல்லமுடியாது. அப்படிச்சொன்னால் நான் மௌனமாகிவிடுகிறேன். பிறகு நான் சாகவும் தயார்.

தேவனே! இனிமேலும் உங்களிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ளமாட்டேன். உங்களிடம் நான் கேட்க விரும்புவது இரண்டு விஷயங்கள். முதலில் எனக்குக் கெட்டவை நடப்பதை நிறுத்துங்கள். இரண்டாவதாக உங்களைப்பற்றிய என் அச்சத்தைப் போக்குங்கள். என்னைக் கூப்பிட்டுக்கேளுங்கள். நான் உங்களுக்குப் பதில் சொல்கிறேன். அல்லது என்னைப் பேசவிட்டு அதற்கு மறுமொழி கூறுங்கள். நான் என்ன தவறு செய்தேன் சொல்லுங்கள். நான் செய்த ஒரு தவறையாவது சுட்டிக்காட்டுங்கள். என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைந்து கொள்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன். நீங்கள் என்னை உங்கள் எதிரியாக நினைக்கிறீரா? அப்படியென்றால் அதற்குக் காரணம் என்ன? சக்தியற்ற சாதாரண சருகு போல் ஆகிவிட்டேன். எனது வலிமை காய்ந்துபோன புல்லுக்கு நிகராகிவிட்டது. கசப்பான தீர்ப்புகளை எனக்கு வழங்குகிறீர். என் சிறு வயதில் நான் தவறுகள் செய்திருக்கலாம். அதையெல்லாம் கணக்கில் கொள்கிறீரோ? எனது கால்களை உலோகப்பட்டைகளால் இணைத்து காலடிகளில் அடையாளமிட்டு நான் செல்லுமிடங்களைக் கண்காணிக்கிறீர்.

எனது இந்த வாழ்க்கை மதிப்பிழந்து போய்விட்டது. நான் நைந்து போன ஆடை போலாகிவிட்டேன்.

தொடரும் ……………….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s