யோபுவின் கதை – அதிகாரம் 15

எலிபாஸ் மீண்டும் பேசுகிறான்:

அறிவாளியான ஒரு மனிதன் இதுபோல் உதவாத கருத்துக்களைச் சுமந்து கொண்டிருக்கமாட்டான். அவன் பொருள் குறைந்த வார்த்தைகளையும் உபயோகிக்கமாட்டான். உனது பேச்சு ஒன்றுக்கும் உதவாத பேச்சு. அது உனக்கு ஒரு நன்மையையும் தராது. நீ தேவனுக்குப் பயந்தவனாய்த் தெரியவில்லை. மக்கள் அவரை வணங்குவதையும் நீ விரும்பவில்லை போலும். உனது கெட்ட சிந்தனைகளின் விளைவாக தவறான கருத்துக்கள் உன்னிடமிருந்து வருகின்றன. கெட்டிக்காரனாக இருக்க முயன்று மற்றவர்கள் உன்னை நம்பும்படி செய்ய முயற்சி செய்கிறாய். நீ சொல்வதெல்லாம் தவறு என்று நான் கூறவில்லை. அதை உனது வார்த்தைகளே நிரூபிக்கிறது.

இந்த மண்ணில் முதலில் பிறந்த மனிதனல்ல நீ. தேவன் மலைகளைப் படைக்கையில் நீ இல்லை. நீ தேவனோடு இல்லையாதலால் அவரது எண்ணங்கள் உனக்குத் தெரியாது. இந்த உலகத்தில் நீ மட்டுமே அறிவாளி என்று எண்ணாதே. நாங்கள் அறிந்த அளவுதான் நீயும் அறிவாய். உனக்கு என்ன ஞானம் உண்டோ அது எங்களுக்கும் உண்டு. உனது தந்தையைக்காட்டிலும் தலை நரைத்தோரும் வயதில் மூத்தோரும் எங்களில் உண்டு.

தேவன் உனக்கு நன்மை புரிந்திருக்கிறார். உன்னுடன் அவர் பேசுகையில் கருணை ததும்புகிறது. அது உனக்குப் போதாதா? உன் மனத்தில் ஏன் கெட்ட சிந்தனைகள்? நாங்கள் உன்னைப் பார்க்கும்போது நீ மிகவும் கோபமுற்று இருக்கிறாய். தேவனிடம் உனக்கு ஏன் இவ்வளவு கோபம்? அவரிடம் பேசும்போது ஒருபோதும் கெட்டவற்றைப் பேசாதே. எவன் ஒருவனும் எல்லாக்காலங்களிலும் நேர்மையாக இருப்பதாகச் சொல்லமுடியாது. அதேபோல் தான் தவறே இழைக்காதவன் என்று ஒருவனாலும் கூறமுடியாது. புனிதர்களும் கூட நேர்மையானவர் என்று தேவன் நம்புவதில்லை. அவர் பார்வையில் சொர்க்கமும் சுத்தமானதில்லை. தொடர்ச்சியாக கெட்டவைகளில் ஈடுபடும் மனிதன் எவ்வளவு அருவருக்கத்தக்கவன்? அசுத்தமானவன்?

கவனமாகக்கேள். நான் சிலவற்றை உனக்கு விளக்கிக் கூறுகின்றேன். நான் கண்டவற்றை உனக்குத் தெரிவிக்கிறேன். ஞானிகள் தங்கள் மூதாதையரிடமிருந்து கேட்டு எனக்குப் போதித்தவற்றையெல்லாம் நான் உனக்குக் கூறுகிறேன். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அந்நியர் யாருமில்லை. அதனால் அவர்கள் யாரும் அன்னியக் கருத்துக்களைக் கற்கவில்லை. கெட்ட மனிதன் தான் வாழ்கின்ற நாட்களெல்லாம் துன்பமடைந்து நிம்மதி இழக்கிறான். அவன் காதுகளில் பயங்கர ஓசைகள் கேட்கும். பாதுகாப்பாக இருக்கிறோம் என அவன் எண்ணிக் கொண்டிருக்கையில் கெட்ட மனிதர் அவனைத் தாக்கி அவன் உடமைகளைப் பறிப்பார்கள். யாரேனும் அவனைக் கொல்லக்கூடும் என்று பயந்து இருட்டு நேரத்தில் வெளியில் செல்லமாட்டான். கெட்ட மனிதன் உணவை எங்கே எங்கே எனத்தேடி அலைவான். விரைவில் சாவு அவனை அரவணைக்கும் என அறிவான். அவன் பயந்து குழம்புவான். ஒரு அரசன் போருக்குப் போகுமுன் அஞ்சுவதுபோல் அவன் அஞ்சுவான்.

தேவனுக்குப் பணியாவிட்டால் இவையெல்லாம் நடந்தே தீரும். இவன் போன்ற மனிதன், தான் சர்வ வல்லமை மிக்க தேவனைவிட முக்கியமானவன் என எண்ணிக்கொண்டு தேவனுக்கு விரோதமாகக் கை நீட்டி தன் வலிமையைக் காட்டுவான். அவன் உண்பதற்கு நிறைய உணவு கிடைக்கக்கூடும். பருத்த உடம்பு உடையவனாகவுமிருப்பான். ஆனால் மனிதர்கள் யாருமற்ற நகரத்தில் கற்குவியலாய்ப்போன வீடுகளில் அவன் வாசம் செய்வான். அவன் செல்வம் நிலைத்திருக்காது. இருளில் அவனால் ஒளிந்து கொள்ளமுடியாது. தேவன் அவனைக் கண்டுபிடித்துவிடுவார். அவரது சினமென்னும் நெருப்பு அவனிடமுள்ள அனைத்தையும் அழித்துவிடும்.

தனது செல்வம் தன்னைக் காக்குமென்று எண்ணினால் அவன் ஒரு முட்டாள். அவன் செல்வத்துக்கு மதிப்பேதுமில்லை. எல்லாம் மாயை. வயதாகும் முன்பே அவன் வாழ்க்கை முடிந்துவிடும். அவன் செய்ய விரும்பிய காரியங்கள் எதையுமே அவனால் செய்ய முடியாது. அவனது நிலைமை பிஞ்சுகள் உதிர்ந்து போகும் திராட்சைக்கொடியைப் போலவும், பூக்கள் உதிரும் ஆலிவ் மரத்தைப் போலவும் ஆகிவிடும். தேவனைப் பணியாதவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை. தவறு செய்தோர் இருப்பிடங்களைத் தீ அழித்துவிடும். அவர்கள் மனங்களிலே கெட்ட சிந்தனைகள் மட்டுமே நிறைந்திருப்பதால் அவர்கள் துயருருவார்கள். வாழ்நாள் முழுதும் அவர்கள் கெட்டதையே செய்வார்கள்.

தொடரும்……………..

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s