யோபுவின் கதை – அதிகாரம் 2

மீண்டும் சாத்தான் இறைவனைச்சந்திக்க வருகிறான்.

இறைவன் சாத்தானிடம் கேட்கிறார். “யோபுவைச் சந்தித்தாயா?அவனைப்போல் முழுமையான ஒழுக்கசீலனை, தீயவற்றை ஒதுக்கி என்னிடம் பயபக்தியுடன் நடந்துகொள்பவனைப் பூமியில் காண இயலுமா? எக்காரணமுமின்றி அவனை அழிக்கச்சொன்னாய். ஆனாலும் அவன் இன்னமும் என்னிடம் உள்ள பக்தியில் உறுதியாய் இருக்கிறான்.

சாத்தான் பதிலளிக்கிறான்:
யோபுவின் எலும்பையும் சதையையும் சிதைத்துப்பாருங்கள்.அப்பொழுது தெரியும் அவன் உங்களை நிந்திக்கிறானா இல்லையா என்று?

அப்படியா! சரி. அவன் உயிரை மட்டும் விட்டுவைத்து நீ உன் விருப்பப்படி செய் என்று இறைவன் சொன்னவுடன் சாத்தான் யோபுவை அவன் கால் முதல் தலை வரை கொப்புளங்களால் நிரப்பி துன்பத்திற்கு உள்ளாக்கினான்.

யோபு அழிவின் சாம்பலில் அமர்ந்துகொண்டு பானை ஓட்டினால் தன் கொப்புளங்களை சொறிந்து கொண்டிருந்தபொழுது அவன் மனைவி இத்தனை அழிவுக்கும் துன்பத்துக்குப் பிறகும் இன்னுமா நீங்கள் இறைவன் மேல் மாறாத அன்பு கொள்ளவேண்டும்.அவனை நிந்தனை செய்து செத்துப்போங்களேன் என்கிறாள்.

முட்டாள் பெண்ணே!என்ன சொல்கிறாய்?அவனிடமிருந்து நல்லன எல்லாவற்றையும் பெற்ற நாம் துன்பத்தையும் துயரத்தையும் அவன் கொடுத்தால் பெறத்தானே வேண்டும் எனக்கூறி யோபு தன் உதடுகளால் இறைவனை நிந்திக்கும் பாவத்தைப் புரியவில்லை.

யோபுவின் துயரத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அவனது நண்பர்களான எலிபாஸ்,பில்டாட்,மற்றும் சோபார் மூவரும் அவனது துன்பத்தில் பங்கேற்று ஆறுதல் சொல்ல முடிவு செய்தனர்.

அவர்கள் யோபுவைப் பார்க்க அவன் அருகில் நெருங்கும்போது அவனை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.அந்த அளவுக்கு அவன் நோய்வாய்ப் பட்டிருந்தான்.துயரம் தாங்காமல் அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்தும் தலையில் சாம்பலைத் தெளித்துக்கொண்டும் ‘ஓ’ வென்று கதறி அழுதனர்.

யோபுவுடன் அவர்கள் மூவரும் ஏழு பகல், ஏழு இரவுகள் ஒரு வார்த்தைகூட பேசாமல் தரையில் அமர்ந்திருந்தனர்.ஏனெனில் யோபுவின் துயரம் அத்தனை ஆழமானது.

தொடரும்……..

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s