யோபுவின் கதை – அதிகாரம் 1

பைபிளின் பழைய ஏற்பாட்டில் 42 அதிகாரங்களில்  யோபுவின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது. அதன் எளிய தமிழ் வடிவத்தை இந்தத்தொடரில் காண்போம் .

——————

ஊத்ஸ் என்ற ஊரில் யோபு என்கிற மனிதன் வாழ்ந்துவந்தான். நீதி,நேர்மை தவறாதவன். இறைவனை அன்றாடம் வாழ்த்தி வணங்கி வழிபடுகிறவன். எந்த பாவச்செயலும் செய்யாதவன்.

அவனுக்கு ஏழு மகன்கள். மூன்று புதல்வியர்

ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஐநூறு எருதுகள், ஐநூறு கழுதைகள், திரளான வேலையாட்கள், மற்றும் விசாலமான பெரிய வீட்டுக்கு அவன் அதிபதி. அவனது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் அவரவர் வீட்டில் தங்கள் சகோதரிகளுடன் விருந்துண்டு களித்திருந்தனர். ஒவ்வொரு முறை விருந்து முடிகிறபோதும் தன பிள்ளைகள் பாவம் செய்திருக்கலாம், தங்கள் உள்ளத்தில் இறைவனை நிந்தித்திருக்கலாம் என எண்ணி யோபு அதிகாலையில் எழுந்து அதற்காக பிராயச்சித்தம் செய்வான்.

இப்படியிருக்கையில் ஒருநாள் கடவுளின் குழந்தைகள் அவரைச் சந்திக்கும் நாள் வந்தது. சாத்தானும் வந்தான். எங்கிருந்து வருகிறாய் என கடவுள் கேட்க சாத்தான் பூமி முழுவதும் சுற்றி வருகிறேன் என்று கூறினான்.

அங்கே நீதி நேர்மை தவறாமல் தீமைகளை அறவே ஒதுக்கி கடவுளுக்குப் பயந்து வாழும் யோபுவைப் பார்த்தாயா? அவனைப்போல் பூமிதனில் வேறொருவன் இல்லை தெரியுமா? என கடவுள் சாத்தானிடம் கேட்டார்..

அதற்கு சாத்தான், ஏன் அவன் உங்களுக்குப் பயந்து நடக்கமாட்டான், நீங்கள்தான் அவனுக்கு அளப்பரிய செல்வத்தையும், ஆனந்தமயமான வாழ்க்கையையும் கொடுத்துள்ளீர்களே. அவனிடமிருக்கும் அனைத்தையும் அழித்துப்பாருங்கள் அப்பொழுது தெரியும் உங்களை அவன் சபிக்கிறானா இல்லையா என்று?

இவ்வாறு சாத்தான் சொல்லவும் அவனிடமிருக்கும் அனைத்தையும் அழித்துவிடு, அவனை மட்டும் ஒன்றும் செய்துவிடாதே என கடவுள் கூறுகிறார்.

சாத்தான் அங்கிருந்து செல்கிறான். பின்பு ஒரே நாளில் யோபுவின் செல்வமெல்லாம் அழிந்து அவன் மகன்களும் மகள்களும் இறந்துவிடுகிறார்கள்

யோபு எழுந்து தன் சால்வையைக் கிழித்தும், தலையை மழித்துக்கொண்டும்
நிலத்தில் வீழ்ந்து தொழுகிறான்.

என் அன்னையின் வயிற்றிலிருந்து நான் வெறுங்கையனாய்ப் பிறந்தேன். உன்னிடம் அதேபோலத் திரும்பிவருவேன். அனைத்தையும் நீதான் கொடுத்தாய் நீயே எடுத்துக்கொண்டாய். உன் நாமம் வாழ்க.

இவ்வளவு நடந்தபின்பும் யோபு முட்டாள் தனமாக கடவுளை நிந்தித்து ஒரு வார்த்தை பேசவில்லை.

தொடரும்…….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

2 Responses to யோபுவின் கதை – அதிகாரம் 1

  1. John Thangaraj says:

    இதிலுள்ள காலங்கள் கிமு எத்தனையாவது நூற்றாண்டு என்பதை அறிய வேறு ஒப்பீடுகள் ஏதும் உள்ளனவா

  2. thamilnayaki says:

    இணையத் தகவல் படி பழைய ஏற்பாட்டில் 1500 ஆண்டுகளுக்கு மேலான நிகழ்வுகள் அடங்கியுள்ளன. தோராயமாக கி மு 2000—-கி மு 400. நிகழ்வுகள் இடம்பெறும் பகுதிகள் மத்திய கிழக்கு–வடகிழக்கு மெசபொடோமியா(தற்போதைய ஈராக்)விலிருந்து தென்மேற்கில் எகிப்தின் நைல் நதி வரை. பைபிள் அறிஞர்களால் யோபு வாழ்ந்த காலத்தை நிர்ணயிப்பதில் ஒருமித்த முடிவுக்கு வரமுடியவில்லை. இவை தவிர வேறு விவரங்கள் தெரியவில்லை. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s