யோபுவின் கதை – அதிகாரம் 5

எலிபாஸ் மேலும் சொன்னான்:-

யோபு நீ உதவி வேண்டிக் கதறலாம். யாருமே உனக்கு பதிலளிக்க மாட்டார்கள். தேவதைகளை அழைத்தாலும் அவை உனக்கு உதவாது. தான் சாகப்போகிறோமே என்று பிறர்மேல் ஒரு முட்டாள் கோபமுறலாம். அவர்களிடம் உள்ளவை தனக்கும் வேண்டுமென அவன் எண்ணலாம். அதிக ஆசை கூட அவனை அழிவுக்குத் தள்ளிவிடும். நான் ஒரு முட்டாள் வாழும் வாழ்க்கையை அறிவேன். அவன் மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் வாழ்க்கை இலகுவாக இருப்பதாகவும் எண்ணிக்கொண்டிருப்பான். ஆனால் இறைவன் விரைவிலேயே அவனைத் துன்பத்தில் உழலவைப்பார். அவனது குழந்தைகள் பாதுகாப்பற்றவராகிவிடுவர். மக்கள் சொல்வார்கள் அவர்கள் தவறு செய்தவர்கள் என்று.யாரும் சொல்லமாட்டார்கள் அவர்கள் நல்லவர்கள் என்று.பசியால் வாடுவோர் அவனது அறுவடையை அனுபவிப்பர். அவனுக்குத்தொடர்பே இல்லாதோர் அவன் பணத்தில் பானம் பருகுவர். தீங்கு மண்ணிலிருந்து உருவாவதில்லை. தொல்லைகள் பூமியிலிருந்து முளைப்பதில்லை. உனக்குத்தெரியும், தீயிலிருந்து புகை வானை நோக்கி எழும். எனவே பிறந்த ஒவ்வொரு மனிதனையும் துன்பம் துரத்தும். ‘யோபு’ நீ இறைவனிடம் உதவி கேள், அவனிடம் உன் துன்பங்களைக்கூறு .

இறைவனின் செயல்களைப் புரிந்துகொள்ள யாராலும் முடியாது. அவனது அற்புதங்களுக்கு அளவேயில்லை. பூமிக்கு மழையையும், வயல்களுக்கு நீரையும் அவன் வழங்குகிறான். ஏழைகளுக்கு உதவுகிறான். நண்பன் இறந்து விட்டான் என்று ஒருவன் துக்கமடைகிறான். அவனை மீண்டும் இறைவன் மகிழ்ச்சிப்படுத்துகிறான். தந்திரசாலிகள் தவறு செய்ய முயல்வார்கள். ஆனால் இறைவன் அவர்களைக் கண்காணித்து தடுத்து நிறுத்துகிறான். நடுப்பகலை இருட்டாய் உணர்வர். பகலின் வெளிச்சத்தைப் பார்க்கத் திணறுவர். அவன் ஏழைகளை சாவினின்றும், கெட்டவர்களின் தாக்குதல்களிலிருந்தும் காக்கின்றான். அதனால் அவர்கள் தங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறார்கள். தீமை தன் வாயை மூடிக்கொள்ளும்.

இறைவன் நீ நல்லபடியாக வாழ போதித்தால் நீ மகிழ்ச்சியுருவாய். உனக்கு துன்பங்கள் தர அவன் நினைக்கலாம். எல்லாம் வல்ல இறைவன் அவ்வாறு நினைத்தால் நீ வருத்தமடையாதே. அவன் உனக்கு வலியைக்கொடுக்கலாம். ஆனால் அவனே உன் வலியைப் போக்குவான். உன்னை அவன் துன்புறுத்தலாம். ஆனால் அவனே அத்துன்பத்தைப் போக்குவான். எப்பொழுதும் தொல்லைகளிலிருந்து அவன் உன்னை மீட்பான். எல்லா நேரங்களிலும் ஆபத்திலிருந்து உன்னைப் பாதுகாப்பான். பஞ்சத்திலிருந்து உன்னைப் பிழைக்கவைப்பான். போரிலிருந்து உன்னை மீட்பான். உன்னைப் பற்றிகெட்டவற்றைப் பேச யாரையும் அனுமதிக்கமாட்டான். மற்றவர்கள் உன்னைத் தாக்கவரும்போது நீ பயமற்று இருப்பாய். பஞ்சத்தையும்,ஆபத்தையும் நோக்கி நீ சிரிப்பாய். கொடிய விலங்குகளுக்கு நீ பயப்படமாட்டாய். அவை உன்னருகே நெருங்குகையில் அவற்றின் மூர்க்கம் மறையும். உனது வயல்வெளிகளில் ஆபத்து எதுவும் இருக்காது.

உனக்குத்தெரியும் உனது வீடு பாதுகாப்பாக உள்ளது என்று. உனது உடைமைகள் எல்லாம் அங்கு இருப்பதை நீ அறிவாய். உனது குடும்பம் பெரியது என்று உனக்குத்தெரியும். உனது வம்சம் பெருகி தழைக்கும். தாவரங்கள் அறுவடைக்காலம் வரை இருப்பதைப்போல் உன் முதிர் வயது வரை நீ வாழ்ந்திருப்பாய்.

நாங்கள் இவையனைத்தையும் சிந்தித்துப்பார்த்தோம். எல்லாமே உண்மையென உணர்ந்தோம். எனவே நாங்கள் சொல்வதைக்கேள். நாங்கள் செய்யச் சொல்வதை செய்.

தொடரும்……….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s