அன்னைப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 17

17. அன்னைப்பத்து

(தில்லையில் அருளியது)

பாடல் 7.

வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும்.
பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என்
உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.

—-

தாயே!
அவர்
வெண்பட்டு உடுத்தியவர்
வெண்மையான திருநீறணிந்த நெற்றி,
குதிரைப் பாகனின் உடையணிந்தவர்
என் அன்னையே!
குதிரைப் பாகனின் உடையணிந்து
பாய்ந்து செல்லும் குதிரைமேல் வந்து
என் உள்ளம் கவர்ந்தவரும் அவரே!

பாடல் 8

தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர்,
ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும்.
ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில்,
தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.

—-

தாளி அறுகம்புல் மாலை அணிந்தவர்
அவர் மேனியெல்லாம் சந்தனச் சாந்து
அன்னையே!
அடிமையாக எங்களை ஆட்கொண்டார்
எங்களை ஆட்கொண்ட அவர் கையில்
தாளம் இருக்கும் காரணம் என்ன தாயே!

குறிப்பு:- தாளி அறுகு– அறுகம் புல்லில் ஒருவகை.
தாளம்– காலத்தை அறுதியிடும் ஒலிக்கருவி

Advertisements
This entry was posted in Thiruvasagam and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s