திருச்சாழல் – வாரம் ஒரு வாசகம் – 12

12.திருச்சாழல்

(தில்லையில் அருளியது)

{சாழல் என்பது பண்டைக்காலப் பெண்களின் ஒருவகை விளையாட்டு. கேள்வி–பதில் பாணியில் ஆடப்படுவது}.

கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை,
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ!
தாயும் இலி, தந்தை ஒலி, தான் தனியன்; ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!

கேள்வி:

பெண்ணே!
சுடுகாட்டில் குடியிருப்பு
உடுத்துவதோ கொல்கின்ற புலியின் தோல்
தாய் இல்லை, தந்தையுமில்லை
இவையெல்லாம் பெருமையாகுமோ !

பதில்:

ஆம். தோழீ !
அவனுக்குத் தாயுமில்லை
தந்தையுமில்லை
அவன் தனியன் தான்
ஆனால்
அவன் கோபமுற்றால்
இந்த உலகம்
பொடிப்பொடியாய்ப் போகுமடி !

—————————————————————————————————

மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை
உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ
உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்,
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!

பாடல் 13:

கேள்வி:

பெண்ணே !
மலையரசன் மகள் பார்வதி
பொன் போன்ற பாவை அவள்
பளபளக்கும் நெற்றி அவளுக்கு
பெண் செல்வம்
அவளைத் தீ வலம் வந்து
உலகறியச் சிவனார் மாலையிட்டதேனோடீ?

பதில்:

தோழீ !
உலகறியத் தீயைச் சுற்றிச்
சிவனார் அவளைச் சேராவிடில்
நூல்கள் கூறும் உலகத்து இயற்கையெல்லாம்
நிலை தடுமாறிப் போகுமடி !

Advertisements
This entry was posted in Thiruvasagam and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s