காற்றைப் போற்றி ஒரு கவிதை

‘மாசுபட்ட காற்றைத் தூய்மையாக்கும் கவிதை’

கவிதை காற்றை எப்படித் தூய்மையாக்கும் என நீங்கள் குழம்புவது புரிகிறது. ஆனால் இது உண்மை. ஒரு கவிதை இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 2 டன் மாசினைச் சுத்தப்படுத்தியிருக்கிறது.

காற்றைத்தூய்மைப்படுத்தும் உலகின் முதல் வினை ஊக்கிக் கவிதை இங்கிலாந்திலுள்ள Sheffield பல்கலைக்கழகப் பேராசிரியர் சைமன் ஆர்மிடேஜ் அவர்களால் எழுதப்பட்டது. கவிதையின் தலைப்பு ‘ In Praise of Air’. இந்தக் கவிதை நானோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 20 மீட்டர் உயரம் கொண்ட மாசை உறிஞ்சும் photo catalyst தடவப்பட்ட துணியில் அச்சடிக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்திலுள்ள Alfred Denny  கட்டிடத்தின் பக்கச்சுவரில் 2014 மே மாதம் முதல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இது சுற்றுப்புறத்திலிருந்து 2 டன் அளவுள்ள நைட்ரிக் ஆக்ஸைட் என்னும் மாசை ஆக்ஸிஜனேற்றம் மூலம் நீக்கியிருக்கிறதாம். இத்திட்டம் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர்கள், விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி. இந்தத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விளம்பரப் பதாகைகளை பெரும் நகரங்களில் ஆங்காங்கே வைத்து காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம் என இந்தக் குழு கருதுகிறது. இக்கவிதையின் தமிழ் வடிவம் இதோ!

காற்றைப் போற்றி ஒரு கவிதை

காற்றைப் புகழ்ந்து நான் எழுதுகிறேன்
எனக்கு ஆறு அல்லது ஐந்து வயதிருக்கும்
மூடிய என் முஷ்டியை ஒரு மந்திரவாதி திறந்தபோது
வந்தது என் உள்ளங்கையில் முழு வானமும்
அப்போது முதல் வானம் என் வசம்.

 

காற்று ஒரு பெருங்கடவுள்
அதன் இருப்பும் தொடுதலும்
அதன் மார்பில் சுரக்கும் பால்
உதடுகள் நோக்கி வழியும் எப்போதும்
தட்டானும் போயிங் விமானமும்
வெளித்தெரியும் அதன் வெறுமையில் ஊசலாடும்…….

 

அலங்கோலமாய்க் கிடக்கும்
அலங்காரப் பொருட்களுக்கிடையே
வெற்றிடம் உள்ள ஒரு பெட்டகம் உண்டு என்னிடம்
மங்கிய புகையால்
சிந்தனைகள் குழம்பும் நாட்களிலோ
அல்லது
நாகரிகம் தெருவைக் கடக்கும்போதோ

 

அதன் வாய்மேல் ஒரு வெள்ளைக் கைக்குட்டை வைப்பேன்
கார்கள் அவற்றின் உதடுகளிலிருந்து
நம் உதடுகளுக்கு முத்தங்களைப் பரிமாறும்
நான் சாவியைத் திருகி, மூடியை எறிந்து
மூச்சினை இழுப்பேன் ஆழமாக
‘காற்று’
எனது முதல் வார்த்தை
எல்லோருடைய முதல் வார்த்தையும் அதுதான்.

 

Advertisements
This entry was posted in Translated poems and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s