கம்பியின் மேல் பறவை

புகழ் பெற்ற கனடியப் பாடகர், பாடலாசிரியர், கவிஞர், நாவலாசிரியர் மற்றும் ஓவியரான லெனார்ட் நார்மன் கோஹன் (Leonard Norman Cohen) இம்மாதம் 7ந் தேதி இறந்துவிட்டார். அறுபதுகளின் இறுதியிலிருந்தே இவரது பாடல்கள் பிரபலமாகத் தொடங்கின.சென்ற மாதம் பாப் டைலனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபொழுது சிலர் இவரிடம் நீங்கள்தான் அப்பரிசுக்கு முழுத்தகுதி உடையவர் என்று கூறியபோது அவர் ‘அப்படியானால் அப்பரிசு இதுதான் உயரமான சிகரம் என்று எவரெஸ்டில் மெடல் குத்துவதற்கு ஒப்பாகும் ‘ என்று கூறியுள்ளார்.

அவரது BIRD ON THE WIRE என்கிற பாடலின் தமிழ் வடிவம் இது. உணர்ச்சிச் சிக்கல்களை வெளிக் கொணர எளிமையான தொடை நயங்களை (rhymes) மூலப் பாடலில் அவர் கையாண்டிருப்பார்.

_jeg3561_700

கம்பியின் மேல் பறவை

கம்பியின் மேல் பறவையைப் போல்
குடித்தவன் நடுநிசிக் குழுப் பாடலில் தவிப்பது போல்
என் போக்கில் நான் விடுதலைக்கு முயன்றேன்
தூண்டிலில் புழுவினைப் போல்
பழைய பாணி புத்தகங்களில் வரும் படை வீரனைப் போல்
எனது எல்லா ரிப்பன்களையும் உனக்காகச் சேர்த்து வைத்தேன்
ஒரு வேளை
ஒரு வேளை நான் அன்பு காட்டவில்லையென்றால்
நீ அதைப் பொருட்படுத்தமாட்டாயென நினைக்கிறேன்
ஒரு வேளை
ஒரு வேளை நான் உண்மையாக நடந்து கொள்ளவில்லையெனில்
உன்னிடம் நான் அப்படி இல்லை என்று உனக்கே தெரியும்.

இறந்தே பிறந்த குழந்தையைப்போல்
கொம்புகளுள்ள ஒரு காட்டு மிருகம்போல்
என்னை அடைய வந்தோரை விளாசித்தள்ளினேன்
ஆனால்
இந்தப் பாட்டின் மீது சத்தியம்
நான் செய்த எல்லாத் தவறுகளையும்
சரி செய்கிறேன் உனக்காக
ஊன்று கோலில் சாய்ந்திருக்கும்
பிச்சைக்காரன் ஒருவனைப் பார்த்தேன்
அவன் சொன்னான்:
“நீ அதிகமாக ஆசைப்படுகிறாய்” என்று.
கருத்துப்போன கதவொன்றில் சாய்ந்துகொண்டு கத்துகிறாள்
அழகுப் பெண்ணொருத்தி
“நீ ஏன் இன்னும் அதிகமாக ஆசைப்படக்கூடாதென்று”
கம்பியின் மேல் பறவையைப் போல்
குடித்தவன் நடுநிசிக் குழுப்பாடலில் தவிப்பதுபோல்
என் போக்கில் நான் விடுதலைக்கு முயன்றேன்.


 

Advertisements
This entry was posted in Translated poems and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s