உன்னைக் காதலிக்கும் வரை

இந்த ஆண்டு (2016) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பாப் டைலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாப் டைலன் பாடகர் மற்றும் பாடலாசிரியர்.”அமெரிக்கக் கவிதைப் பாரம்பரியத்தில் புதிய கவித்துவ வடிவங்களை உருவாக்கியதற்காக” பரிசு வழங்கப்படுவதாக சுவீடிஷ் அகடெமி அறிவித்துள்ளது. அவரது ‘till i fell in love with you‘ என்கிற பாடலின் தமிழ் வடிவம்.

——-

நன்று, என் நரம்புகள் வெடிக்கின்றன
என் உடல் இறுக்கமாகிறது
மொத்த உலகமும்
என்னை வேலியில் அறைவதைப்போல் உணர்கிறேன்
நான் மோசமாகத் தாக்கப்பட்டுவிட்டேன்
நான் நிறையப் பார்த்தாகிவிட்டது
உன் தொடுதலைத் தவிர
வேறு ஏதும் என்னைச் சுகப்படுத்தாது
என்ன செய்யப்போகிறேன் நான்
தெரியவில்லை எனக்கு
நன்றாகத்தான் இருந்தேன் நான்
உன்னைக் காதலிக்கும்வரை.

நன்று, என் வீடு எரிகிறது
தீ வானை முட்டுகிறது
மழை பெய்யுமென நினைத்தேன்
ஆனால்
மேகங்கள் கடந்து போகின்றன
இப்பொழுது
எனது வழி முடிந்து விட்டதாய் உணர்கிறேன்
ஆனால்
எனக்குத்தெரியும் கடவுள் என்னைக் காப்பாரென்று
தவறான பாதையில் செலுத்தமாட்டார் அவர் என்னை.
இருந்தாலும்
என்ன செய்யப்போகிறேன் நான்
தெரியவில்லை எனக்கு
நன்றாகத்தான் இருந்தேன் நான்
உன்னைக் காதலிக்கும் வரை.

தெருவில் சிறுவர்கள் விளையாட ஆரம்பிக்கிறார்கள்
பறவைகள்போல் சிறுமிகள் பறந்தோடுகிறார்கள்
நான் போன பின்னால் என் பெயர்
உன் நினைவில் இருக்கும்
செல்வமும் புகழும் பெறப் புறப்பட்டுவிட்டேன்
என்ன செய்யப்போகிறேன் நான்
தெரியவில்லை எனக்கு
நன்றாகத்தான் இருந்தேன் நான்
உன்னைக் காதலிக்கும் வரை.

குப்பை குவிந்து இடத்தை நிரப்புகிறது
முகத்திலிருந்து விழுவதுபோல்விழிகள் உணர்கின்றன
வியர்வை வழிகிறது,
தரையை வெறிக்கிறேன்
திரும்ப இனிமேல் வரவேமுடியாத
அந்தப் பெண்ணை நினைக்கிறேன்
என்ன செய்யப்போகிறேன் நான்
தெரியவில்லை எனக்கு
நன்றாகத்தான் இருந்தேன் நான்
உன்னைக் காதலிக்கும் வரை.

நன்று, பேசிக் களைத்துவிட்டேன்
விளக்க முயன்றும் களைத்துப்போனேன்
உன்னை மகிழ்விக்க நான் கொண்ட
முயற்சிகள் எல்லாம் வீண்
நாளை இரவு சூரியன் மறையும் முன்னால்
இந்த உலகத்தில் நான் இருந்தேன் என்றால்
தெற்கு நோக்கிப்போவேன்
என்ன செய்யப்போகிறேன் நான்
தெரியவில்லை எனக்கு
நன்றாகத்தான் இருந்தேன் நான்
உன்னைக் காதலிக்கும் வரை.

Advertisements
This entry was posted in Translated poems, Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s