அன்னை தெரசா

Mother Teresa portrait painting by Robert Pérez Palou. Source Wikipedia

Mother Teresa portrait painting by Robert Pérez Palou. Source Wikipedia

செப்டம்பர் 4 2016 ஞாயிறன்று மறைந்த அன்னை தெரசா அவர்களுக்குப் புனிதர் பட்டம் வாடிகனில் வழங்கப்பட்டது. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றோருக்கும் ,நோயாளிகளுக்கும் செய்த மகத்தான உதவிகளை இந்த உலகம் என்றும் மறவாது. இத்தருணத்தில் ஷிவ் .கே.குமார் அவர்கள் எழுதிய “Mother Teresa feeds lepers at her Home for the destitutes, Calcutta” என்கிறஆங்கிலக் கவிதையின் தமிழ் வடிவத்தைப் பார்ப்போம்.

———

கல்கத்தாவிலுள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் அன்னை தெரசா தொழுநோயாளிகளுக்கு உணவளிக்கும் காட்சி.

*****

வறண்ட கழுத்துக்களில் பொருத்தப்பட்ட
சாம்பல் நிற கபாலங்கள்
இறந்த பறவைகளின் கால் நகங்களைப்போல்
தொங்கும் தலைகள்
காற்று புழுக்களால் நிரம்பி வழிகிறது
அவர்கள் உடம்பில் வெண்படலங்கள்
பிச்சையிடுபவனின்
மகிழ்ச்சி தரும்
மணமிக்க தோலினைத்துருவும் கண்கள்.
இது
மதிய உணவு வேளை
இறந்தவனை எழுப்ப வைக்க வல்ல
ஒரு சூரியக்கற்றை
அந்தக் கூடத்தின் குறுக்கே விழுகிறது
அந்தக் கையின் மெத்தென்ற ஒத்தடம்
பேரீச்சை மரங்கள் சூழ்ந்த
பாலைவனச்சோலையின் இதம்
அன்பில் திளைக்கையிலே
பளிங்கு நீரின் அடியில் கிடக்கும்
அமைதியான கூழாங்க்ற்களாய் மாறிவிடு.
வெண்பட்டு அணிந்துகொள்
அல்லது
முகத்திரையை விலக்கிவிடு.
அதன்பின்
உன் கண்கள் மின்மினியாய் ஒளி கக்கும்
உன் பாத ஒலி
கோடைக்கால காலையிலே
வாழையிலை மீது விழும் பனித்துளி
பிறகு நீ
நெருப்பு வளையத்தைத் தாண்டலாம்
நாகத்தின் படத்தை முத்தமிடலாம்
மணலில் மாயங்கள் புரியலாம்
நீ கன்னி மேரியின் தோழி!
தெருவின் குறுக்கே ஒரு கோவிலின் முழக்கம்
பறவைகளைப் பயப்படுத்தி பறக்கவைக்கிறது
உள்ளே
தேவியின் கற்சிலை
கருத்த அவள் முகம்
கனல் கக்கும் அந்தக் கண்கள்
வலக்கரம் கள்ளி இலையாய் உயர்ந்துள்ளது
ஓர் ஆதி சடங்கினை நிறைவு செய்ய.

*****

மூலம்: ஷிவ்.கே.குமார் . தமிழில்:எம். கார்த்திகேயன்

Advertisements
This entry was posted in Translated poems and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s