இரோம் ஷர்மிளா

Irom_Chanu_Sharmila

உண்ணாவிரதம் என்றவுடன் உடனடியாக நம் நினைவுக்கு வருபவர் காந்தியடிகள். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை திரும்பப்பெற இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி மணிப்பூரின் இரோம் ஷர்மிளா 2000ல் தொடங்கிய உண்ணாவிரதம் சமகால வரலாற்றின் மிக நீண்ட உண்ணாவிரதம். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை இன்னமும் இந்திய அரசு திரும்பப்பெறாத நிலையில் தனது 16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை  2016 ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியுடன் முடித்துக்கொண்டுள்ளார் இரோம் ஷர்மிளா. இனி அரசியலில் நுழைந்து தன்  முயற்சியைத் தொடரவிருக்கிறார். இத்தருணத்தில்  TONIGHT  என்கிற அவரது கவிதையின்  தமிழ் வடிவத்தைப்பார்ப்போம்.

இன்றிரவு

இரு நூற்றாண்டுகளுக்கிடையே
இணைந்துள்ள இந்த இரவில்
இதயத்தைத்தொடும் ஒலிகளை
நான் கேட்கிறேன்
என் செவிகளில்
காலமென்னும் அருமைத்தேவதையே
இந்த நேரத்தில்
பாவப்பட்ட இந்தப் பெண்ணின்
உணர்வுகள் விழிக்கின்றன
முதிர்ந்த இந்த இரவு
என் அமைதியைக்கெடுக்கின்றது
சிறைப்பட்ட உலகை மறக்கமுடியவில்லை
பறவைகள் இறக்கையை அசைக்கையில்
கண்ணீர் சிந்துவார்
நடக்கின்ற கால்கள்
எதற்கென்று கேட்பார்
பயனற்றவை இந்தக்கண்கள் என்பார்
ஓ சிறையே! மறைந்து போ
உனது வலிமை மிகவும் கொடிது
இரும்புக்கம்பிகளும்
இரும்புச்சங்கிலிகளும்
அகாலமாய்ப்போக்கும்
அளவற்ற உயிர்களை.

Advertisements
This entry was posted in Translated poems and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s