இந்த ஆண்டின் பருவத்தை
என்னில் நீ பார்க்கலாம்
இலையுதிர்காலம்
கிளைகளில் ஒருசில இலைகள்
அல்லது
இலைகளே இல்லாத கிளைகள்
குளிரில் அசையும்.
பாழடைந்துவிட்டது தேவாலயம்
முன்பெல்லாம் அங்கே பறவைகள்
இனிமையாகப்பாடித்திரிந்தன
மேற்கில் சூரியன் சாய்ந்தபின் மீந்திருக்கும்
மங்கிய வெளிச்சத்தை
என்னில் நீ பார்க்கலாம்
அந்த வெளிச்சமும் விரைவில் இரவின் வரவால் மறையும்
சாவின் நிழலும் இனி படரும்.
அணைகின்ற என் இளமை நெருப்பின் தணலை
என்னில் நீ பார்க்கலாம்
எரித்த கொள்ளிகள் தீர்ந்த பின்னால்
சாவின் மடியில் அது சங்கமிக்கும்.
புரிந்து கொள்வாய் இப்போது நீ
உன் காதலின் உறுதி பற்றி.
என்றென்றும் என்னை நீ
அன்புடன் ஆராதிப்பாய்.
ஷேக்ஸ்பியரின் Sonnet 73 ன் தமிழ் வடிவம்
Advertisements