யோபுவின் கதை – அதிகாரம் 34

எலிஹு தொடர்கிறார்…….

ஞானிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். அறிவாளிகளே! நான் சொல்வதைக் கவனியுங்கள். நமது நாக்கு நல்ல சுவையையும் கெட்ட சுவையையும் பிரித்தறியும். நமது காதுகளும் கேட்பவற்றில் உண்மை எது பொய் எது என்று அறியும். நாம் நியாங்களைத் தேர்ந்து கொள்வோம். நாமெல்லாம் நன்றாகவே நல்லவற்றைக் கற்றுக்கொள்வோம். தான் தீய செயல்கள் எவற்றிலும் ஈடுபடாத போதிலும் தன்னை தேவன் நியாயமாக நடத்த வில்லையென யோபு கூறுகிறார். “நான் நேர்மை தவறாதிருந்தும் அவர் என்னைப் பொய்யன் என எண்ணுகிறார். நான் குற்றவாளியில்லையென்றாலும் அவரது அம்புகள் ஆற்றமுடியாக் காயங்களை எனக்கு அளிக்கிறது” என்று யோபு மேலும் கூறுகிறார். யோபுவைப்போல வேறு மனிதர் யாராவது உள்ளனரா? யோபு தேவனைப்பார்த்து சிரித்து அவரைக் கேலி செய்கிறார். அவர் தீச்செயல் புரிபவர்களுக்குத் தோழன். அவர் தனது நேரத்தைப் பாவம் புரியும் மனிதர்களோடு கழிக்கிறார். “தேவனை மகிழ்விக்க முயல்வதில் என்ன லாபம் “ என யோபு மேலும் கேட்கிறார்.

எனவே அறிவுமிகுந்தோரே! நான் சொல்லப்போவதைக் கேளுங்கள். தேவன் ஒரு போதும் தகாத செயல்களைச் செய்யமாட்டார். சர்வவல்லமை படைத்த அவர் எக்காலத்திலும் தவறு செய்யவே மாட்டார். ஒரு மனிதனின் செயல் என்னவோ அதற்கு ஏற்றபடிதான் அவனுக்கு அவர் நன்மைகளைத் தருவார். ஒருவன் பெற வேண்டியது என்னவோ அதை சரியாக அவனுக்குக் கொடுப்பார். தேவனால் யாருக்கும் தீங்கு ஏற்பட வழியே இல்லை. சர்வ வல்லமை கொண்ட தேவன் யாரையுமே நியாயமற்ற முறையில் நடத்தமாட்டார். யார் இந்தப்பூமியை ஆள்வதற்கு நியமித்தார்கள்? அகிலம் முழுவதையும் அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளச்சொன்னது யார்? அவர் மனிதனைக் குறி வைத்தால் அவனது ஆவியையும் மூச்சினையும் தன் பால் இழுத்துக்கொள்வார். பின்னர் மொத்த மனித குலமும் நாசமாகி மண்ணுக்கே இரையாகும். யோபுவே! இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்துகொண்டால் நான் சொல்வதைக் கவனிக்கவும். நீதி நியாயங்களைக் கடைப்பிடிக்க வெறுக்கும் ஒருவரால் ஆட்சி புரிய முடியுமா? புனிதமும் வல்லமையுமிக்கவர் மீது நீர் குற்றம் சுமத்துகிறீரா? மன்னர்களை நோக்கி நீங்களெல்லாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றும் கனவான்களைப் பார்த்து நீங்கள் தீயசக்திகளென்றும் தேவன் கூறுவார். அவர் இளவரசர்களையும் ஆதரிக்கமாட்டார் அவர் பணக்காரர்களையும் ஏழைகளையும் ஒன்று போலவே பாவிப்பார். இவர்கள் அனைவரையும் தேவன் தான் படைத்தார். சட்டென அவர்கள் மடிவார்கள். தேவன் நடுநிசியில் அவர்களைக் கலங்க வைத்து அழித்தொ¡ழிப்பார். வலிமை மிகுந்தவரும் அவரால் எளிதாக அழிக்கப்படுவார்கள். மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர் என்பதை அவர் கண்கள் காண்கின்றன. மனிதர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் அவர் கண்காணிக்கிறார். தீச்செயல் புரிவோர் ஒளிந்துகொள்ள இருண்ட இடமோ அல்லது மரண நிழலோ இல்லை.

தேவன் யார்மேலும் குற்றம் சுமத்த வேண்டிய அவசியமில்லை. அவருக்குத்தெரியும் யார் யார் குற்றவாளிகள் என்று. எனவே தனது நீதிமன்றத்தின் முன்னால் அவர்களை நிறுத்த அவருக்கு அவசியமில்லை. வல்லமை மிகுந்தோரை நீதி மன்றத்தில் எந்தக் கேள்வியும் கேட்காமலேயே அழித்துவிடுவார். பின் மற்றவர்களை அவரவர்க்குரிய இடங்களில் வைப்பார். அவர்கள் செய்வதையெல்லாம் அவர் அறிந்தவராதலால் இரவு நேரத்தில் அவர்களுக்கு முடிவுகட்டுகிறார். அவர்கள் செய்த பாவத்துக்காக அவர்களை எல்லார் முன்னிலையிலும் தண்டிக்கிறார். அவர்கள் தேவனின் செய்கைகளுக்கு எந்த ஒரு மதிப்பும் கொடுக்காமல் அவரைப் பின்பற்றாததுதான் அவர்களுக்கு நேரும் முடிவுக்குக்காரணம். அவர்கள் எளியவர்களை அவர் சந்நிதி முன் கூக்குரலிட வைத்தனர். அவர் பாதிக்கப்பட்டவர்களின் கதறலைக் கேட்டார். இவர்களுக்காக தேவன் எதுவும் செய்யாவிட்டாலும் யாரும் அவரை ஏன் என்று கேள்வி கேட்க முடியாது. அவர் தன் முகத்தை மறைத்துக்கொண்டால் நமக்கு உதவ வேறு யாருமில்லை. அவர் நாடுகளையும் மக்களையும் ஒன்றாகவே மதித்து ஆட்சி செய்கிறார். மனித நேயமற்ற போலிகள் ஆள்வதைத் தடுக்கிறார். மற்றவர்களை அவர்கள் வளைத்துப்போடுவதற்கு தடையாயிருக்கிறார். “நான் பாவம் புரிந்தவன். இனி நான் ஒருபோதும் பாவ காரியங்கள் செய்ய மாட்டேன். மேலும் நான் அறியாது செய்த பாவங்களைக்கூறும். நான் தவறு செய்திருப்பேனாயின் மீண்டும் அதை செய்யமாட்டேன்” என்று ஒருவன் சொல்லக்கூடும். ஆனால் நீர் பாவங்களிலிருந்து மீள மறுக்கிறீர். எனவே தேவன் நீ விரும்பியபடி உன்னை அவர் நடத்தவில்லை, யோபுவே! இப்பொழுது நீங்கள் முடிவெடுக்கவேண்டும். உமக்காக நான் அதை செய்ய முடியாது. எனவே உமக்குத் தெரிந்ததைச் சொல்லும். அறிவார்ந்த நீங்கள் முன்பு பேசினீர்கள். நான் பேசியதையும் கேட்ட நீங்கள், “யோபு தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்.அவ்ர் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை “ என்று கூறினீர்கள். யோபுவுக்கு ஒரு கடுமையான சோதனை வைத்தால் நல்லது என எண்ணுகிறேன். தீய மனிதனைப்போல் அவர் பதில் கூறுகிறார். மேலும் மேலும் அவர் பாவங்களைக் கூட்டுகிறார். அவர் கைகொட்டி நம்மை கேலி செய்கிறார். தேவனுக்கு எதிராக வார்த்தைகளைக் கொட்டுகிறார்.

தொடரும் ………….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s