யோபுவின் கதை – அதிகாரம் 29

யோபுவின் நீதி உரை தொடர்கிறது………….

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தேவனின் பாதுகாப்பில் நான் இருந்த நிலைமை இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும். என் தலைக்குமேல் அவரது ஒளி பிரகாசித்ததால் அந்த வெளிச்சத்தில் நான் இருளைக் கடந்துபோனேன். எனது இளமைக் காலத்தில் தேவனின் அருளால் எனது இல்லம் பாதுகாப்பாக இருந்தது. அப்பொழுது தேவன் என்னுடன் இருந்தார். என் பிள்ளைகள் என்னுடன் இருந்தனர். அந்த நாட்களில் நெய்க்கும் எண்ணெய்க்கும் பஞ்சமில்லை. நான் நகரத்து வாயிலுக்குச்சென்று வீதியில் அமரும்போது என்னைக்கண்டு வாலிபர் கூட்டம் ஒளிந்து கொள்ளும். முதியவர்களும் என்னைக்கண்டு எழுந்து நிற்பார்கள். பிரபுக்களும் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு மௌனம் காப்பார்கள். பெரியவர்களும் பேச்சடங்கி அமைதி காப்பார்கள்.

நான் பேசுவதைக் கேட்டவர் அனைவரும் என்னைப் பற்றி நல்லதையே சொன்னார்கள். என்னைப் பார்த்தவரோ போற்றினார்கள். கதறிய ஏழைகளுக்கும், திக்கற்ற பிள்ளைகளுக்கும், உதவி புரிய யாருமற்றவர்களுக்கும் நான் உதவினேன். சாகும் நிலையில் இருந்தோர்க்கு நான் உதவி புரிந்தபோது அவர்கள் என்னை வாழ்த்தினார்கள். விதவைகளின் முகங்களில் மீண்டும் மகிழ்ச்சி வரச்செய்தேன். நீதியும் நேர்மையும் என் உடைகள். நியாயத்தைதான் எனது சால்வையாகவும், தலைப்பாகையாகவும் அணிந்திருந்தேன். குருடர்களுக்கு நான் கண்கள். நொண்டிக்கு நான் கால்கள். நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்தேன். முகமறியாதவர்க்கு நீதி கிடைக்கத் துணையிருந்தேன். தீயவர்களின் செயல்களைத் தடுத்து மக்களைக் காப்பாற்றினேன். நான் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்து பின்னர் சாவேன் என்றுதான் நினைத்திருந்தேன். நிறைய நீர் இருக்கும் இடத்திலுள்ள தாவரத்தைப்போல் நான் எப்பொழுதும் நல்ல உடல் நலத்துடன் வலிமையாக இருந்தேன். மதிப்பு மிக்கவனாயிருந்ததால் நான் சொல்லும் ஆலோசனைகளைப் பொறுமையாகக் கேட்டு அமைதியானார்கள். அவர்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை. என் வார்த்தைகள் அவர்கள் செவிகளில் மென்மையாய் விழுந்தன. மழைக்குக் காத்திருப்பதைப்போல் என் வருகைக்குக் காத்திருந்து என் வார்த்தைகளை மழைத்துளியைப் பருகுவதுபோல் உள்வாங்கினார்கள். நான் அவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்த போது அவர்கள் நம்பவில்லை. எனது புன்னகை அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. அவர்கள் செல்லவேண்டிய பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அவர்களின் தலைவனாக வீற்றிருந்தேன். சேனைக்குரிய அரசனைப் போலவும், துயரத்தில் உழல்வோருக்கு ஆறுதல் கூறுபவனைப் போலவும் இருந்தேன்.

தொடரும்…………..

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s