யோபுவின் கதை – அதிகாரம் 27

யோபுவின் பதில் தொடர்கிறது……..

தேவன் என் நியாயத்தைப் புறந்தள்ளினாலும் அவர் கொடுத்த  மூச்சு என்னுள்  உள்ளவரை உண்மையையே பேசுவேன். நேர்மை தவறமாட்டேன். இது உறுதி.  நீ சொல்வதெல்லாம் சரி என்று ஒப்புக்கொள்ளமாட்டேன். இறுதிவரை நான் நெறி தவறி நடக்கமாட்டேன்.  என் மனசாட்சி என்னை ஒருபோதும் குற்றம் சொல்லாது.

என் எதிரிகள் தீயவர்கள். கடவுள் அவர்களைத் தண்டிப்பாராக.  தீயவன் மகிழ்ச்சியாக வாழ முடியாது. முடிவில் இறைவன் அவனை இறக்கச்செய்வார். ஆபத்தில் அவன் உதவி கேட்கையில் கடவுள் உதவமாட்டார். அவர்கள் ஒருபோதும் ஆண்டவரை  இறைஞ்சி அவரது சன்னிதானத்தில்  மகிழ்ச்சி பெற மாட்டார்கள். இறைவனின் வல்லமை குறித்தும்  தன் ஆற்றலால் அவர் என்னவெல்லாம் செய்வார் என்பதையும் உனக்கு நான் மறைக்காமல் விளக்கிக்கூறுவேன். இவையெல்லாம் உனக்கே நன்றாகத்தெரியும். பின் ஏன்  வீணாக அர்த்தமற்றவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்.

தீயவர்களுக்குத் தேவனிடமிருந்து கிடைக்கிறதெல்லாம்,  அவர்களது பிள்ளைகள் எல்லாம் போரிலும், அரைகுறை உணவாலும் மடிந்துபோவதுதான். எஞ்சி வாழ்ந்திருக்கும் சிலரும் மடிவார்கள். அவர்களின் சாவுக்காக அவர்களின் விதவைகள் புலம்புவதில்லை. எண்ணமுடியாத அளவுக்கு அவ்ர்களிடம் செல்வம் சேரலாம். தேவைக்கதிகமான உடைகளும்கூட அவர்களிடம் இருக்கலாம். ஆனால் முடிவில் அந்த செல்வமும் ஆடைகளும் நல்லவர்களைச் சென்றடையும்.

அவனது வீடு ஒரு பூச்சியின் கூட்டைப்போலவும் பணியாளரின் குடிசையைப்போலவும் வலுவின்றி இருக்கும். அவன் பணக்காரனாயிருக்கலாம். ஆனால் அவன் செல்வம் விரைவில் கரைந்து தீரும். வெள்ளத்தால் நடுங்கி இரவில் வீசுகின்ற புயலால் அடித்துச் செல்லப்படுவான். கிழக்கிலிருந்து வீசும் பெருங்காற்று வீட்டிலிருந்து அவனைத் தூக்கி வீசும். இறைவனின் இந்த செயல்களிலிருந்து அவன் தப்பியோடப்பார்ப்பான். அச்சமயம் மனிதர்கள் அவனைப்பார்த்து கைகொட்டிச்சிரித்து அந்த இடத்திலிருந்து அவனை  அகற்றுவார்கள்.

தொடரும்……………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s